முன்னுரை
இஸ்லாம் மனித சமூகம் வாழ்வதற்காக இறைவனால் வழங்கப்பட்ட வாழ்க்கை நெறி. இவ் வாழ்க்கை நெறியானது மனித வாழ்வின் அனைத்து பகுதிகளுக்கும் வழிகாட்டக் கூடியது, இந்த சிறந்த வாழ்க்கை நெறியை வாழ்து அனுபவித்து இன்புற்று, இவ்வுலகிலும், மறுமையிலும் இறைவினின் பாக்கியங்களை முழு மனித சமூகமும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக படுபடும் மனிதர்களே இறைவனின் பார்வையில் மிகச்சிறந்தவர்கள்.
وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّن دَعَا إِلَى اللَّـهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ
எவர் அல்லாஹ்வின் பக்கம் (மக்களை) அழைத்துஇ ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து "நிச்சயமாக நான் (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபட்ட) முஸ்லிம்களில் நின்றும் உள்ளவன் என்று கூறுகின்றாரோஇ அவரைவிட சொல்லால் அழகியவர் யார்?" (இருக்கின்றார்?)
என்று அல்குர்ஆன் கேட்கிறது, இந்த மகத்தான பணியை உலகில் உள்ள பல்வேறு காலப்பகுதிகளில், பலர் மேற் கொண்டுள்ளனர், இந்த வகையில் சூபி ஞானிகள் என்போர் இப் பணியை செய்த மிகவுமே முக்கியமானவர்களாவர், சூபி ஞானிகளை வெறுமனே உலகைத் துறந்து, பற்றற்று தம்மை வருத்திக்கொண்டு வாழ்ந்தவர்களாவே பலர் கருதுகின்றனர், ஆயினும் அவர்கள் மிகப் பாரிய சுமைகளை தாங்கிக் கொண்டு சமூகப் புணர்நிர்மானப் பணிகளை மேற்கொண்டுள்ளனர்
சூஃபித் தரீக்காக்கள், தோற்றமும் வளர்ச்சியும்.
தரீக்கா பத விளக்கம்
தரீகா என்பது மொழியில், பாதை, வழிமுறை, நிலை போன்ற அர்த்தங்களை தருகின்றன பரிபாசையில் ஆன்மீக மேம்பாட்டிற்கும் உள்ளத்தை தூய்மைப் படுத்துவதற்கும் ஒரு ஆத்ம ஞனி கைக்கொண்ட, திக்ருகள், ஓதல்கள் போன்ற வற்றை உள்ளடக்கிய வழிமுறையை குறிக்க பயன்படும், மேலும் குறித்த தரீக்காவானது அந்த ஆத்ம ஞானியின் பெயரைக்கொண்டே மக்கள் மத்தியில் அறியப்படும் 1)
தரீக்காக்களின் தோற்றம்.
தஸவ்வுப் என்பது இஸ்லாத்தின் ஆன்மீகம் சார்ந்த பகுதியை வளர்த்தெடுப்பதாகும், இத்துறையின் அடிப்படை தொடர்பாக பேசும்போது ஹதீஸ_ ஜிப்ரீலை ஆதாரமாகக் கொண்டு இத்துறை இஸ்லாத்தின் அடிப்படையுடன் தொடர்பு பட்ட கலை என இத்துறை சார்ந்த அறிஞர்கள் தெளிவு படுத்துவர், மேலும் தஸவ்வுபின் தோற்றம் இமாம் ஹஸனுல் பஸரியுடன் ஆரம்பிப்பதாகவும் சொல்வர்.
ஆயினும் தரீக்கா அமைப்பாக ஒரு கட்டுக்கோப்பான ஒழுங்கில் தோற்றம் பெற்றது தொடர்பாக வேறுபட்ட கருத்துக்கள் காணப்படுகின்றன, இதன்படி ஷெய்ஹ் அப்துல் காதிர் ஜீலானி(றஹ்) அவர்களே தரீக்காவின் ஆரம்ப கர்த்தா என்று சொல்லப்படுகிறது, மேலும் சிலர் ஈரானில் பிறந்து ஹி 430ல் மரணித்த அபூ ஸஈத் எனும் பெயரால் பிரபல்யமடைந்திருந்த, முஹம்மத் அஹ்மத் அல் மய்ஹமி அர்களே முதன் முதலில் ஸ_பித் தரீகா அமைப்பைத் தோற்றுவித்தவர் எனும் கருத்ததை கொண்டுள்ளனர். அபூ ஸஈத் அவர்கள் இமாம் அல் குஷைரி அவர்களுக்கும் மூத்தவராவர் இவர் ஹி 357ல் பிறந்தவராவார்கள். இமாம் குஷைரி அவர்கள் ஹி 376ல் பிறந்து 465ல் மரணித்தார்கள், அபூ ஸஈத் அவர்கள் அமாம் அப்துர் ரஹ்மான் அஸ் ஸலமி அவர்களிடமும் அபுல் அப்பாஸ் அல் கஸ்ஸாப் அவர்களிடம் கற்று தனது வழிமுறைகளை பெற்றுக்கொண்டார், பின்னர் ஹி 5 மற்றும் 6ம் நூற்றாண்டுகளில் தரீக்கா வழிமுறை தோற்றம் பெற்று வியாபித்தது.
சில முக்கியமான தரீக்காக்கள்
தரீக்கா
|
இஸ்தாபகர்
|
வியாபித்துள்ள பிரதான பகுதிகள்
|
அத்தரீக அல் காதிரிய்யா
|
அப்துல் காதிர் ஜீலானி (றஹ்) ஹி 561
|
ஈராக்,எகிப்து, கிழக்காபிரிக்கா,எரித்ரியா
|
அத்தரீகா அஸ்ஸஃதிய்யா
|
ஸஃதுத்தீன் அஜ்ஜப்பாவி(றஹ்) ஹி- 575
|
சுரியா
|
அத்தரீகா அர்ரிபாஇய்யா
|
அஹ்மத் இப்னு அலி அர்ரிபாஈ(றஹ்) ஹி 578
|
ஈராக், எகிப்து, மேற்காசியா, இலங்கை
|
அத்தரீகா அல் அஹமதிய்யா அல்லது அல் பதவிய்யா
|
அஹ்மத் அல் பதவி(றஹ) ஹி 627
|
எகிப்து
|
அத்தரீகா அல் அக்பரிய்யா
|
முஹ்யுத்தின் இப்னு அறபி (றஹ்) ஹி 638
|
எகிப்து
|
தரீகது ஸதாத் ஆலு பா அலி
|
முஹம்மத் இப்னு பா அலி(றஹ்)ஹி 653
|
யமன்,இந்தோனேசியா,கிழக்காசியா, ஹிஜாஸ்
|
ஆத்தரீகா அஷ்ஷாதுலிய்யா
|
அபுல் ஹஸன் அஷ்ஷாதுலி(றஹ்) ஹி 656
|
எகிப்து,மொரோக்கோ,யமன்,சிரியா, ஜோர்தான், இலங்கை, இந்தியா
|
இந்தியாவில் இஸ்லாத்தின் அறிமுகம்
இந்தியாவில் இஸ்லாம்
அறேபிய வியாபாரிகள்
வரலாற்றில் ஆரம்பகாலம் முதலே இந்தியத்துணைக்கண்டமானது அனைத்து நாடுகாளாலும் அறியப்பட்டதாகவும், பிரபல்யமானதாகவும் காணப்பட்டே வந்துள்ளது. இந்தியத்துணைக்கண்டத்தில் காணப்படும் இயற்கை துறைமுகங்கள், விவசாய உற்பத்திகள், மாணிக்கம் போன்ற கணிப்பொருட்கள் என்பன காரணமாகவும் இயற்கை எழில்காரணமாகவும் வரலாறு நெடுகும் பலர் இந்தியத்துணைக்கண்டத்தை தரிசித்தருப்பதை வரலாற்று ஏடுகளினூடாக கண்டு கொள்ளலாம்.
அறேபியர் ஆரம்ப காலம் முதல் வியாபரத்தில் ஈடுபட்டு வந்தனர், குறிப்பாக குறைஷிகளைப்பற்றி அல்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது
தரைமார்க்கமாகவும் கடல் மார்கமாகவும் கிழக்கு நோக்கியும், மேற்கு நோக்கியும் அறேபியரின் வியாபாரப் பயணம் காணப்பட்டது, தரைமார்கமான பயணம் வட இந்தியப் பகுதியை ஊடருத்து சீனாவரை செல்லும் இப்பாதை வரலாற்றில் “ பட்டுப்பாதை” என அழைக்கப்பட்டது மேலும் கடல் மார்க்கமான பயணம் இந்தியாவின் கிழக்குக்கரை துறைமுகங்கள், இலங்கை துறைமுகங்களினூடாக கிழக்கு வரை நீண்டு காணப்பட்டது.
இத்தகைய வியாபாரப் பயணங்களினால் ஆறேபியருக்கும் இந்திய துணைக்கண்டத்திற்கும் இடையிலான தொடர்பு மிகவும் வலுவாகக் காணப்பட்டது. கி.பி 6ம் நூற்றாண்டில் அறேபிய தீப கற்பத்தில் முஹம்மத் ﷺ அவர்கள் இறுதித் தூதராக அனுப்பப் பட்ட போது அறேபியர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டனர், அவர்கள் தமது வியாபாரப் பயணங்களின் போது இஸ்லாமிய பண்பாடுகளை வெளிப்படுத்தியும் அதன் போதனைகளை தமது வாழ்வில் எடுத்து நடந்ததன் விளைவாகவும், அதனை பிரச்சாரம் செய்ததன் விளைவாகவும் அப்பிரதேசங்களில் இஸ்லாம் பரவ ஆரம்பித்தது.
இதன் அடிப்படையில் இந்திய துணைக்கண்டத்துடன் தொடர்பு பட்டிருந்த, அரேபிய முஸ்லிம்கள் மூலம் இஸ்லாம் இந்திய துணைக்கண்டத்தில் அறிமுகமாகியது.
இதுபற்றி தோப்பில் முஹம்மது மீரான் இவ்வாறு கூறுகிறார் “அவர்கள்(அராபியர்) நகரின் (கொடுங்கல்லூர்) ஒரு பகுதியில் சொந்தமாக ஒரு இடத்தை அமைத்துக் கொண்டார்கள், பி.பி ஏழாம் நூற்றாண்டிலோ எட்டாம் நூற்றாணடிலோ இஸ்லாம் மார்க்கத்தை இங்கு பிரச்சாரம் செய்தது இந்த அராபிய வியாபாரிகளாக இருக்கலாம். கிறிஸ்துவ மதத்துடன் ஒப்பிடும் போது இஸ்லாம் மார்க்கத்தின் வளர்ச்சி மிக மந்தமாகவே இருந்தது”
கலாநிதி அப்துல் முன்இம் அந் நமிர் அவர்கள் இவ்வாறு கூறுகின்றார் “ அரேபிய வியாபாரிகளுக்கு அரபிக்கடலின் கரையோர நகரங்கள் யாவும் மட்டுமன்றி வங்காலவிரகுடா கரையோர நகர்கள், இந்தோனேசியத் தீகள் போன்ற யாவும் அறிமுகமாகி இருந்தன, அவர்கள் அப்பகுதிகளில் குடியேற்றங்களை அமைத்திருந்தனர், அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதும் தாம் சென்ற இடமெல்லாம் அதனை போதித்தனர், இஸ்லாத்தின் தூதர் பற்றி சகோதரத்துவம், சமத்துவம் போன்றவற்றை மிகவும் வேற்கையுடன் எடுத்துக் கூறினர், வர்ணவேறுபாடு சாதி வேறுபாட்டின் பாதிப்பிற்கு உட்பட்டிருந்து இந்தியருக்கு இஸ்லத்தின் சகோதரத்துவம், சமத்துவம் மிகவும் கவர்ச்சியாக இருந்தது, அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டனர், முஸ்லிம்கள் வசித்து வந்த ஒவ்வொரு துறைமுகத்திலும் பள்ளிவாசல்களை அமைத்து தமது மதக் கிரிகைகளை நிறைவேற்றினர், அரேபியரக்கு மன்னர்களிடம் இருந்த அங்கீகாரம் அவர்களை தடையின்றி மதக் கிரிகைகளை நிறைவேற்ற அனுமதி வழங்கினர்”
சிந்து வெற்றி கொள்ளப்படல்
சிந்த் மீது படையெடுத்து அதனை கிலபாத்துடன் இணைத்துவிட வேண்டும் என்ற எண்ணம் உமர்(றழி) அவர்களது காலத்திலிருந்தே தோன்றிவிட்டது, உமர்(றழி) அவர்களது காலத்தில் ஓமான், பஹ்ரைன் ஆகிய பகுதிகளுக்கு கவர்னராக இருந்த உஸ்மான் இப்னு அபில் ஆஸ் அஸ்ஸகபி அவர்கள் ஹி 15ல் சிந்துப்பகுதிக்கு படையனுப்பினார், எனினு அவரால் பொரிய அளவில் வெற்றி காண முடியவில்லை
உஸ்மான்(றழி) அவர்களது ஆட்சிகாலத்தில் ஈராக்கிற்கு கவர்ணராக இருந்த அப்துல்லாஹ் இப்னு ஆமிர் இப்னு கரீஸ் அவர்களுக்கு சிந்து பகுதியை வேவு பார்க்க ஒருவரை அனுப்புமாறு கட்டலையிட அவர் “ ஹகீம் இப்னு ஜப்லா அல் அபதி” யை அனுப்பினார், அப்போது பாடையெடுக்க நிலமை பொறுத்தமாக இருக்காமையால் படையெடுக்கவில்லை, உஸ்மான் (றழி) அவர்களின் ஆட்சியின் இறுதிக்காலத்தில், அலி (றழி) ஆட்சியின் ஆரம்பத்தில், ஹி 38இறுதி ,39 ஆரம்பத்தில் ஒரு படை சென்று சிந்தின் ஒரு வெற்றி கொண்டது
இறுதியாக கலீபா ஹஜ்ஜாஜ் இப்னு யூஸ_ப் அஸ்ஸகபி அவர்களின் காலத்தில், தனது சகோதரனின் மகன் முஹம்மத் இப்னு காஸிம் அஸ்ஸகபி யின் தலைமையில் ஹி 92 கி.பி 711ல் ஒரு படையனுப்பி வெற்றிகொள்ளப்பட்டது , இப்படையெடுப்பிற்கான இரு வேறுபட்ட காரணங்களை வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர், ஒன்று இலங்கை மன்னன், தந்தையை இழந்த சில முஸ்லிம் பெண்களை ஒரு கப்பலில் ஏற்றி அவர்களுடன் சில அன்பளிப்புகளையும் அனுப்பினான், இதனை சிந்பகுதியில் இருந்த கடற்கொள்ளையர்கள் கொள்ளையடித்து, பெண்களையும் சிறைப்டுத்தினர், அவர்களை விடுவிக்குமாறு கலீபா சிந்து மன்னர் தாஹிரிடம் கேட்டுக்கொண்ட போது, அவர் அதனை அசட்டை செய்தார், எனவே ஹஜ்ஜாஜ் சிந்து மீது படையெடுத்தார்.
மற்றைய காரணம் ஹஜ்ஜாஜஜின் கொடுமைகளுக்கு அச்சி சிந்தில் குடியேரிய பனூ ஹாஷிம்களை தன்னிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொண்ட போதும் அவர்களை சிந்து மன்னன் ஒப்படைக்காமையால் அதற்கு பலிவாங்கும் முகமாக படையெடுத்ததாக சொல்லப்படுகிறது.
இவ்வாறு வெற்றிகொள்ளப்பட்ட இந்திய உப கண்டம் சுமார் எட்டு நூற்றாண்டு காலம் முஸ்லிம் ஆட்சியின் கீழ் இருந்து பல வளர்ச்சிகளையும், முன்னேற்றங்களையும் கண்டது.
சூபி ஞானிகளின் பங்களிப்பு
இந்தியாவில் இஸ்லாமியத் தலைமுறை சூபி ஞானிகள் மூலமே ஆரம்பித்து, குறிப்பாக அஷ்ஷெய்ஹ் முஈனுத் தீன் அல் அஜ்மீரி அவர்களிலிருந்து, அவர்கள் பலமான அடிப்படைகள் மீதும், தூய்மையாகவும் தோற்றுவித்த ஜிஸ்திய்யா தரீக்கா, மக்களின் அனைத்துத் தரப்பினரினதும் வரவேற்பைப் பெற்றது, இந்த ஆன்மீக வழிகாட்டிகளை சூழ மக்கள் போட்டிபோட்டுக்கொண்டு ஒன்று கூடினர், அவர்களை நேசித்தனர், பலமான உறவை ஏற்படுத்திக்கொண்டனர், நாட்டின் அனைத்துப்பாகங்களிலும், அனைத்து கிராமங்களிலும் ஆன்மீக பாசறைகள் தோற்றம் பெற்றன என்று மௌலானா அபுல் ஹஸன் அந் நத்வி அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
லாஹ_ர் பிரதேசத்தில் தூய்மையான இஸ்லாத்தின் நம்பிக்கை கோட்பாட்டின் பால் அழைப்பு விடுத்த முதலாவது அழைப்பாலராக ஷெய்ஹ் இஸ்மாஈல் அவர்கள் கருதப்படுகின்றார்கள்,இவர் புகாராப் பிரதேசத்தில் வசித்து வந்தார், மார்க்க உலகக் கலைகளில் தேர்ச்சி பெற்று விளங்கினார், இவர் கி.பி 1005ம் ஆண்டு லாஹ{ர் பிரதேசத்திற்கு வந்தார், இவரை சூழ மக்கள் அலையாக திறண்டனர், இவரது உபதேசங்களால் பலர் இஸ்லாத்தை ஏற்றனர், இவருடன் தொடர்புபடும் எந்த காபிரும் இஸ்லாத்தை ஏற்காதிருப்பதில்லை என கூறும் அளவிற்கு இவர் மூலம் பலர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டனர்.
ஸெய்யித் ஜலாலுத்தீன் அவர்களது வருகை இந்திய வரலற்றில் முக்கிய விடயமாக நோக்கப்படுகிறது, இவர் கி.பி.1199ல் பிறந்தார், கி.பி 1244ல் இந்தியாவி; பஹாவுல் பூர் பிரதேசத்தில் உச் குடியேரினார், இவர் மூலம் மிக அதிகமான மக்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டனர், இவர் கி.பி 1291ல் மரணித்தார்.
காதிரிய்யா தரீக்காவைத் தோற்றுவித்த அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) (க.பி 1077-1166) 73 வருடங்களை பக்தாதில் கழித்தார். அவரது மாணவர்கள் அவரதுகாலத்திலே இத்தரீக்காப் பயிற்சிமுறையைப் பல நாடுகளிலும் பரப்பினார்கள். இந்தியாவில் இத்தரீக்காவை கி.பி 1482இல் மரணித்த முகம்மது கவுஸ் என்பவர் அறிமுகப்படுத்திய போதும் கி.பி 17ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே அங்கு அது சமுக முக்கியத்துவம் பெறலாயிற்று என்பர். கி.பி 1746 இல் கள்ளிக் கோட்டையிற் குடியேறிய யெமன் நாட்டவரான சேஃ ஆப்துல் காதர் தைக்கா சாஹிப் என்பவர்;;இஇவர் ஊடாகவே காதிரிய்யா தரீக்காவில் சேர்ந்தார். ஆதனால் மலபர் பிரதேசத்தில் காதிரிய்யா தரீக்கா பரவியது
இந்;தியாவில் ஸ{பி ஞானிகளின் தஃவா மற்றுமு; ஏனைய பங்களிப்புகள்
இஸ்லாமிய பிரச்சாரத்ததிற்காக இந்தியாவின் பல பிரதேசங்களுக்கும் வந்த ஸ_பி ஞனிகள், தனிப்பட்ட முறையிலும் ஸாவியாக்கள் மற்றும், ஆன்மீக நிலையங்களை அமைத்தும், சமூகத்தில் பல காத்திரமான பங்களிப்புகளை செய்தனர், இத்தகைய பணிகளை மௌலான அபுல் ஹஸன் அலி அந்நத்வி அவர்கள் கீழ் வருமாறு பட்டியட் படுத்துகிறார்.
மக்களின் பொது வாழ்விலும் பண்பாட்டிலும் தாக்கம் ஏற்படுத்தியமை
இந்த ஸ{பி ஞானிகள் மக்களிடம் ஏகத்துவத்தை கடைபிப்பதாகவும், இஃலாஸ், தௌபா, அல்லாஹ்விற்கும் அவனது தூதரிற்கும் கட்டுப்படுவத என்றும், சிறந்த பண்புகளை அணிகலனாக கொள்வது என்றும் மோசமன பெருமை, பொறாமை, அநீதி, புகழை விரும்புதல் போன்ற பண்புகயிலிருந்து விடு பட்டு வாழ்வதாக பைஅத் பெற்று, அதற்கான பயிற்சிகளை வழங்கி வந்தனர்.
எனவே இத்தகைய ஞானிகளை சூழ பல சீடர்கள் ஒன்று சேர்ந்து பயிற்சிகளைப் பெற்று வந்தனர், செய்யித் ஆதம் அல் பின்னூரி அவர்களது உணவுத் தட்டில் தினமும் ஆயிரம் பேர் சாப்பிடுவர், அவருடன் ஆயிரக்கணக்கானோர் பயணிப்பர் அவர்களுள் நூற்றுக் கணக்கான அறிஞர்களும் உள்ளடங்குவர்.
சிறந்த சமூகத்தை தோற்றுவித்தல், அதனை பாதுகாத்தல்
இந்தியாவில் சமூக சீர் திருத்தத்திலும், மக்கள், ஆட்சியாளர்களை வழிப்படுத்துவதிலும் ஸ_பி ஞானிகளுக்கு மிகப் பெரிய பங்களிப்பு காணப்படுகின்றது, சிறந்த நேர்மையான விவேகமான ஆட்சியாலர்களை அவர்கள் உருவாக்கினர்.
இதற்கு சிறந்த உதாரணம் ஷெய்ஹ் அஸ்ஸெய்யித் அஹ்மத் அஷ்ஷஹீத் அவர்கள் மக்கா நோக்கி பயணிக்கும் போது கல்லிக்கோட் பகுதியில் தங்கினார், அவரும் அவருடைய சகாக்களும் மேற்கொண்ட உபதேசம், உபந்நியாசங்களினால் பலர் தாக்கமுற்று இஸ்லாத்தை ஏற்றனர், மது வியாபாரம் செயலிழந்து முற்றாக தடைப்பட்டது, மது வியாபாரிகளுக்கு அரசாங்கத்திற்கு மது வரி செலுத்த முடியாத நிலமை ஏற்பட்டது.
முக நீண்ட காலமாக அரசால் எந்த தாக்கத்தையும் மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாதிருந்த மிகப் பெரும் மக்கள் திரல் இவர்களின் மூலம் தவ்பா செய்து சிறந்த நடத்தை, பண்பாடுகள் கொண்ட மக்களாக மாறினர்.
அறிவையும் கலாசாரத்தையும் பரப்புதல்
ஸ_பி ஞானிகளின் மிகப் பெரிய முனைப்பாக அறிவைத்தேடுவதும், அறிவு போதிப்பதும் காணப்பட்டது, அறிவு இல்லாது அல்லாஹ்வை அறிந்து கொள்ள முடியாது என்பது அவர்களது மிகப் பெரிய நம்பிக்கையாக காணப்பட்டது. அறிவியிக்க, எழுச்சியின் புகழ் இந்த ஸ_பி ஞானிகளையே சாரும், பாடசாலைகளும், ஸாவியாக்களும் அருகருகே காணப்பட்டமையை வரலாற்றில் கண்டு கொள்ள முடியும், மத்ரஸதுர் ரஷீதிய்யா ஜோன்பூர் மற்றும் லக்னோவில் மத்ரஸதுஷ் ஷெய்ஹ் பீர் மஹம்மத், தில்லியில் மத்ரஸதுஷ் ஷெய்க் வலியுல்லாஹ் அப்துர் ரஹீம் என்பன சிறந்த உதாரணங்களாகும்.
அவுரங்காபாத் : முகலாயப் பேரரசர் அவுரங்கசீப் தன் கையால் எழுதிய குரான் நூல் வைக்கப்பட்டுள்ளஇ 300 ஆண்டுகள் பழமையான நூலகம்இ 40 ஆண்டுகளுக்குப் பின் சமீபத்தில் திறக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலம்இ அவுரங்காபாத்தில்இ கி.பி.17 ம் நூற்றாண்டில் துவக்கப்பட்ட நூலகம் ஒன்று உள்ளது. இதில் தற்போதுஇ இஸ்லாமிய சட்டம்இ மருத்துவம்இ சூபியிசம்இ மதம் மற்றும் தத்துவம் சார்ந்த 3இ500 புத்தகங்கள் உள்ளன. இவை அனைத்தும் உருதுஇ அரபி மற்றும் பெர்சிய மொழிகளில் எழுதப்பட்டவை.
இந்த நூலகத்துக்கு மற்றொரு தனிச் சிறப்புஇ முகலாயப் பேரரசர் அவுரங்கசீப் தன் கைப்பட எழுதிய குரான் இங்கு தான் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அப்புத்தகத்தின் மேல்புறம் தோலால் பைண்டிங் செய்யப்பட்டுள்ளது. அத்தோல் மீது தங்க கோடுகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்திலும்இ வாக்கியம் முடிவில் உள்ள முற்றுப் புள்ளிகள்இ தங்கத்தால் வைக்கப்பட்டுள்ளன. இந்த நூலகம்இ கி.பி.17ம் நூற்றாண்டில்இ ரஷ்யாவிலுள்ள புக்காரா என்ற பகுதியில் கஜ்த்வான் என்ற கிராமத்தில் பிறந்தஇ ஹஜ்ரத் பாபாஷா முசாபர் என்பவரால் துவக்கப்பட்டது.
தன் ஆன்மிகத் தேடலால்இ ரஷ்யாவை விட்டு வெளியேறிய முசாபர்இ காஷ்மீரில் வசித்து வந்த சூபி ஞானி ஹஜ்ரத் பாபா ஷா சயீத் நக்ஸ்பந்தி என்பவரைச் சந்தித்துஇ ஞானம் பெற்று அவரது சீடரானார். பின் அவர் அப்போதைய வங்காளம்இ ஒரிசா மற்றும் ஐதராபாத் ஆகிய இடங்களுக்குச் சென்று விட்டுஇ இறுதியில் அவுரங்காபாத் வந்தார். இங்கு பல்வேறு ஆன்மிகச் சொற்பொழிவுகள் நிகழ்த்திய அவர்இ 24 வகுப்பறைகள் கொண்ட மதரசா ஒன்றையும்இ மாணவர்கள் தங்கும் விடுதி ஒன்றையும்இ எப்போதும் தண்ணீர் ஊறிக் கொண்டிருக்கும் "பஞ்சாக்கி' என்ற நீர்நிலையையும் உருவாக்கினார்.
மதரசாவில்இ ஈரான்இ ஈராக்இ கத்தார்இ ஆப்கானிஸ்தான்இ ரஷ்யா மற்றும் எகிப்து ஆகிய நாடுகளில் இருந்து வரவழைக்கப்பட்ட பல்வேறு நூல்கள் அடங்கியஇ மாபெரும் நூலகத்தை ஏற்படுத்தினார். அவரது காலத்தில் ஒரு லட்சம் புத்தகங்களுக்கு மேல் இங்கிருந்திருக்கக் கூடும் எனஇ இப்போதைய நூலகரும்இ அறிஞருமான ஹபீஸ் அப்துல் ஜலீல் கூறுகிறார். கடந்த 1949 வரைஇ அவுரங்காபாத்தை ஆண்டு வந்த நிஜாம்களால் இந்த நூலகம் பராமரிக்கப்பட்டது. பின்இ இங்கிருந்து 85 ஆயிரம் புத்தகங்கள்இ ஐதராபாத்திலுள்ள நூலகத்துக்கு இடம் மாற்றப்பட்டன.
வரியோருக்கான நிவாரணம், பொறுப்பேற்றலும்
இத்தகைய ஸாவியாக்கள் மக்களுக்கான அடைக்களமாகவும், அடைக்கலமாகவும் காணப்பட்டது, அங்கு வருபவர்களுக்கெல்லாம் அங்கு உணவு பரிமாரப்பட்டது, எதிரியும், நண்பணும், பணக்காரனும், ஏழையும் சந்தித்துக்கொள்ளும் இடமாக அது காணப்பட்டது.
ஷெய்ஹ் ஸைபுத்தீன் ஸிர் ஹிந்த் அவர்களது ஸாவியாவில் காலையிலும் மாலையிலும் ஆயிரத்து நாநூறு பேர் உணவு உண்பதற்காக ஒன்று சேறுவர்.
ஒருமுறை அரசர் ஷெய்ஹ் ஸையித் முஹம்மத் ஸஈத் அல் அன்பாலூவி அவர்களை சந்திக்கவந்நதார், அவர் ஸாவியாவை புணர்நிர்மானம் செய்ய அறுபது ஆயிரம் ரூபாய்களை வழங்கினார், அதனை ஷெய்ஹ் ஏழைகள், அநாதைகள் தேவையுடையோருக்கு வழங்கிவிட்டார்,
மனிதநேய அடைக்கலம்
ஸ_பி ஞானிகள் மதம் கடந்து மனிதர்களை நேசித்தார்கள், அவர்களுக்கு ஆதரவாகவும் அவர்களது கவலையில் துக்கத்தில் பங்கெடுப்பசர்களாகவும் காணப்பட்டனர் அவர்களது மகுடவாசமாக “ படைப்பினங்கள் யாவும் இறைவனின் குடும்பம், அல்லாஹ்விற்கு மிக நேசத்திற்குறியவர் அவனது குடும்பத்திற்கு பயனுள்ளவர்” எனும் நபி மொழியே காணப்பட்டது.
இலங்கையில் இஸ்லாத்தின பரவலும், சூஃபி ஞானிகளின் பங்களிப்பும்
இலங்கையில் அரேபிய முஸ்லிம் குடியேற்றங்கள்
இலங்கையில் சூபித் தரீக்காக்கள்
இலங்கையில் சூபித் தரீக்காக்களின் பங்களிப்பு
இலங்கையில் அரேபிய முஸ்லிம் குடியேற்றங்கள்
இலங்கையில் முதன் முதலாக முஸ்லிம்களது குடியேற்றம் எப்போது நடைபெற்றது என்பது தொடர்பாக வரலாற்று ஆசிரியர்களுக்கு மத்தியில் கருத்து முரண்பாடுகள் காணப்படுகின்றன. ளுசை. யுடநஒயனெநச துழளெவயnகி.பி 8ம் நூற்றாண்டளவில் “உமையாக்களால் கொடுமைப்படுத்தப்பட்ட பனூஹாஷிம் குடும்பத்தவர்களின் ஏழு பிரிவினர் இலங்கையில் வந்து குடியேறியதுடன் இலங்கை முஸ்லிம்களின் பூர்வீகம் ஆரம்பிக்கின்றது” என வரலாற்று ஆசிரியர் வுநnநெவெ குறிப்பிடுவதாக கலாநிதி ஆ.யு . ஆ. சுக்ரி தனது ‘இலங்கை முஸ்லிம்கள்’ எனும் ஆய்வில் சுட்டிக் காட்டுகிறார்.
கி.பி 9ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தென்னிந்தியக் கரைகளில் குடியேறிய முஸ்லிம்கள பாண்டிய அரசின் கீழ் செல்வாக்குப் பெற்ற ஒரு சமூகமாக வாழ்ந்தனர். இக்காலம் முதல் இலங்கையுடனான இவர்களது வர்த்தகக் கலாசார தொடர்புகள் துரிதமாக அதிகரித்தன. இதனால் தென்னிந்தியக் கரையில் முஸ்லிம்கள் தம் வர்த்தக நலன்களைப் பேணவும் கலாச்சாரத் தொடர்புகளை வலுவடையச் செய்யவும் இலங்கையில் குடியேறினர் எனக் கருதலாம். அவர்களின் இலங்கையுடனான வர்த்தகத்தின் வளர்ச்சியும் இரு கரைகளுக்கும் இடையிலான தூரத்தின் குறுக்கமும், இரு கரைகளினதும் துறைமுக நகர்களில் முஸ்லிம்கள் செல்வாக்குடன் வாழ்ந்தமையும், இந்திய கரையோர நகர்களில் வாழ்ந்த முஸ்லிம்கள் இலங்கையில் வந்து குடியேற துணைசெய்தன. இதனால் இந்திய கரையிலிருந்து முஸ்லிம்கள் தொடர்ந்து வந்து இலங்கையில் குடியேறினர். இது பற்றி ‘எம். சி. சித்திலெப்பை’ குறிப்பிடும் போது
“1200 வருடங்களுக்கு முன் அறபிகள் இலங்கைக்கு வந்து காலி முதல் பேருவளை வரையிலும் குடியிருந்து வியாபாரம் செய்தார்கள். ” என முஸ்லிம் நேசன் பத்திரிகையில் இடம் பெற்றுள்ளதாக ஆ. ஐ. ஆ.அமீன் தனது குறிப்பிடுகிறார்.
அதே போன்று இலங்கையின் அகழ்வாராய்ச்சி திணைக்கள ஆணையாளரான ‘கலாநிதி பாலேந்திரா’ அவர்கள் குறிப்பிடும் போது “ கடந்த 2000 ஆண்டுகளாக அரேபியர் இலங்கையில் குடியிருக்கின்றமையினால் இலங்கையின் பழங்குடிகளாக கருதப்படுகின்றனர் என்கிறார்.
மேற்கூறப்பட்ட கருத்தை உறுதிப்படுத்தும் வகையில் பண்டைய எழுத்தாளர் ‘பிளினி’ குறிப்பிடும் போது “ கிறிஸ்தவ ஆண்டு ஆரம்பிக்கும் முன்னரே அரேபியர் இலங்கையில் குடியேறிவிட்டனர்.” என்று எழுதியுள்ளார். மேலும் ‘கலாநிதி அந்திரியெஸ் ரெல்’ குறிப்பிடும் போது கி.மு 377 இல் அரேபியர்களுக்கான ஒரு தனியான ஒதுக்கிடம் அனுராதபுரத்தில் இருந்ததாகக் குறிப்பிடுகிறார். இது பண்டுகாபய மன்னனின் காலமாகும். “அவர் அங்கு வணிகர்களுக்கென தனியான இடத்தை ஒதுக்கி வைத்திருந்தார்.” என மகாவம்சம் கூறுவதாக து. நு. வுநநெவெஎன்பவர் தனது ‘ஊநலடழn யுn யுஉஉழரவெ ழுக ஐளடயனெ ’ எனும் நூலில் குறிப்பிடுகிறார்.
குலபாக்களின் காலத்தில் அரேபியா முழுவதிலும் மற்றும் பாரசீக பகுதிகளிலும் மேற்கு ஆபிரிக்க நாடுகளிலும் இஸ்லாம் மிக வேகமாக பரவி வந்தது. இதனால் அரேபிய வர்த்தகர்கள் பலர் இஸ்லாத்தின் பால் கவரப்பட்டு இஸ்லாத்தை ஏற்றதுடன் அவர்கள் வர்த்தக நோக்கில் சென்ற பிரதேசங்களில் வாழ்ந்த மக்கள் அரபு வணிகர்களின் இஸ்லாமிப் பண்பாடுகளைக் கண்டு பலர் இஸ்லாத்தை ஏற்றனர்.
“கி.பி 2ம் நூற்றாண்டில் இலங்கையுடனான வர்த்தகம் முற்றாக அவர்களின் (அரபிகளின்) கைகளிலேயே இருந்தது. கிறிஸ்தவ யுகத்தின் 7ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இலங்கையுடனான சீன வர்த்தகம் முக்கியத்துவம் பெற்றிருந்தது. ஆயினும் 8ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இலங்கையின் துறைமுகப் பகுதிகளில் கணிசமான அரபிகள் குடியிருந்தனர்.” என பேராசிரியர் வுhழஅயள யுசழெடனதனது ‘வுhந Pசநயஉhiபெ ழக ஐளடயஅ’எனும் நூலில்; குறிப்பிடுகிறார்.
கி.பி 11, 12, 13 ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த அரபு நாணயங்கள் நீர்கொழும்பு, வத்தளை, கம்பளை, சப்ரகமுவ, வெலகெதர பிரதேசங்களிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதாக” ர். று. ஊழசசபைவழதெனது ‘ஊநலடழn உழiளெ யனெ உரசசநnஉல ’ எனும் நூலில் குறிப்பிடுகின்றார்.
“கி.பி 8ம் நூற்றாண்டில் இலங்கையில் முஸ்லிம் குடியேற்றங்கள் காணப்பட்டதை அரபு வரலாற்றாசிரியர் அல் பாலசூரி கி.பி 892 குறிப்பிடும் ஒரு வரலாற்று நிகழ்வு மூலம் அறியலாம். முஸ்லிம்களாய் கி.பி 715 ம் ஆண்டு சிந்துப் பிரதேசம் கைப்பற்றப் பட முன்னர் “ஜெஸீரதல் யாகூத்” (மாணிக்கத்தீவு) என அழைக்கப்படும் இலங்கைத்தீவின் மன்னன் உமையா ஆட்சியில் ஈராக் பிரதேசத்தின் மாகாண அதிபதியாக விளங்கிய ஹஜ்ஜாஜ் இப்னு யூஸ{ப் இடம் இலங்கையில் பிறந்த அவர்களது தந்தையரை இழந்த சில அநாதைப் பெண்களை அனுப்பி வைத்தார். இந்த அநாதைப் பெண்களைச் சுமந்து சென்ற கப்பல் இந்தியாவின் தேபல (நவீன கராச்சி) எனும் இடத்தில் கடற் கொள்ளைக்காரர்களால் தாக்கப்பட்டு அந்தப் பெண்கள் சிறைப் பிடிக்கப்பட்டனர். அவர்களில் பனூ யர்பு குழுவைச் சார்ந்த ஒரு பெண் “யா ஹஜ்ஜாஜ்” என சத்தமிட்டாள். இந்த விடயத்தை ஹஜ்ஜாஜ் இப்னு யூஸ{ப் கேள்விப்பட்டதுடன் சிறைப்பிடிக்கப்பட்ட பெண்களை விடுதலை செய்யும் படி சிந்தின் ஆட்சியாளரான ராய் தாஹிருக்கு ஒரு செய்தி அனுப்பினான். இதற்கு எத்தகைய பதிலும் கிடைக்காததால் அவரது ஆட்சிக்கு எதிராக தொடர்ச்சியாக பல முற்றுகைகள் மேற்;கொள்ளப் பட்டு கி.பி 715 ஆம் ஆண்டு சிந்து கைப்பற்றப் பட்டது. புதூகுல் புல்தான் எனும் நூலில் குறிப்பிடும் இச் சம்பவமானது கி.பி 8ம் நூற்றாண்டளவில் இலங்கையில் அரபுக் குடியேற்றங்கள் காணப்பட்டதை அறியலாம்.”
அத்தோடு “கொழும்பு, புத்தளம், மன்னார் பகுதிகளிலும் யாழ்ப்பாணத்துறைமுக நகர்களிலும் போர்த்துக்கீசரின் வருகைக்கு முன்பு முஸ்லிம் குடியேற்றங்கள் இருந்தன, இந் நகர்களில் அவர்கள் செல்வாக்குடனும் வாழ்ந்தனர். தம்பதெனிய, கோட்டை காலப்பகுதியில் கொழும்பிலும் ஏனைய துறைமுகப் பகுதிகளிலும் முஸ்லிம் குடியேற்றங்கள் இருந்தன. கோட்டை இராச்சியத்தின் தோற்றத்திற்கு முன்பு சில துறைமுக நகர்கள் முஸ்லிம்களின் ஆதிக்கத்திற்கு உட்பட்டிருந்தன என்றும் சிங்களத் தலைநகரில் பள்ளிகளைக் கட்ட முஸ்லிம்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது என்றும் P. து.Pநசநசயதனது வுhந கழசநபைn வசயனந யனெ உழஅஅநசஉந ழக யுnஉநைவெ ஊநலடழnஎனும் நூலில் குறிப்பிடுகின்றார்.”
“கி.பி 14ம் நூற்றாண்டில் இலங்கை முஸ்லிம்கள் நாட்டில் முக்கிய இடத்தைப் பெற்றிருந்தனர். சிலாபம், புத்தளம், நீர் கொழும்பு, கொழும்பு, களுத்தறை, மாத்தறை ஆகிய இடங்களில் கணிசமான எண்ணிக்கையில் முஸ்லிம் குடியேற்றங்கள் காணப்பட்டன என்றும் சிலாபம், நீர் கொழும்பு, களுத்தறை போன்ற பிரதேசங்களில் முஸ்லிம்கள் அவர்களுக்கான தனியான கிராமத் தலைவர்களைப் பெற்றிருந்தனர்இ அத்துடன் கொழும்பில் தற்போதுள்ள புதிய சோனகத் தெரு பழைய சோனகத் தெரு போன்ற வீதிகள் அக்காலத்தில் முஸ்லிம்கள் செற்ந்து வாழ்ந்ததை குறிக்கின்றன. என்று ஆரளடiஅள ழுக ளுசடையமெயஎனும் நூலில் னு.சு.ர். யுடிந ளுiபெநஎன்பவரின் ஆய்வுக் கட்டுரையை ஆதாரம் காட்டி கலாநிதி சுக்ரி ‘இலங்கை முஸ்லிம்களின் தொன்மைக்கான வரலாற்றுப் பாதை எனும் நூலில் குறிப்பிடுகிறார்.”
“1297-1343வரையிலான குருனாகலைத் தலை நகரமாக கொண்ட 07 கோரளை பதவி மன்னர்களான 2ம் புவனேகபாகு, பண்டித பராக்கிரமபாகு, 3ம்புவனேகபாகு, 5ம்விஜயபாகுஆட்சிக் காலத்திலும் 1343-1441 வரை கம்பளை கங்கசிரிபுரியை தலை நகரமாக கொண்ட 4ம்; புவனேகபாகு, 3ம்விக்கிரமகாகு, 5ம்புவனேகபாகு ஆட்சிக் காலத்திலும் பல முஸ்லிம் குடியிருப்புக்கள் அமைந்திருந்தன. இத்தகைய முஸ்லிம் குடியேற்றங்கள் மிகச் சிறிய அளவில் ஆரம்பத்தில் இருந்த போதிலும் அவற்றின் பெரும்பாலானவை ஆரம்பத்தில் நதிக் கரையோரங்களிலே அமைந்திருந்தன. கம்பளை ஆட்சிக் காலத்தில் உடு நுவர, கம்பளை, மாவனெல்ல ஆகிய பிரதேசங்களுக்கூடாக முஸ்லிம் குடிப்பரம்பல் இருந்து வந்துள்ளது.”
கலீபா உமர் (ரழி) அவர்களின் காலம் முதல் இஸ்லாத்தை ஏற்ற அரேபியரின் குடியேற்றத்தை தொடர்ந்து இலங்கை முஸ்லிம்களின் தொகை பெருக ஆரம்பித்தது.அரேபியர்கள் இலங்கையில் வெளிநாட்டு வர்த்தகத்தில் மாத்திரம் ஈடுபடவில்லை.மாறாக உள்நாட்டு வியாபாரத்திலும் கவனம் செலுத்தினர். இதனால் அவர்களில் ஒரு பகுதியினர் நிரந்தரமாக இந் நாட்டில் குடியிருக்க வேண்டி ஏற்படவே அவர்கள் தாம் குடியிருந்த பகுதிகளில் தொழுகையை நிலை நாட்ட மஸ்ஜிதுகளையும் அமைத்துக் கொண்டனர்.
இதிலிருந்து ஆரம்ப கால முதலே முஸ்லிம்களின் குடியேற்றங்கள் இலங்கையில் இருந்தமைக்கு சான்றாதாரமாக அமைகின்றது.
அதே போல “கொழும்பு முஸ்லிம் மைய வாடியில் கண்டெடுக்கப்பட்ட காலித் பின் பகாயா என்பவரின் ஞாபகார்த்தமாக வெட்டப்பட்டு இருந்த அரபு எழுத்திலான நடுகல் ஹிஜ்ரி 377 ஆம் ஆண்டை குறிப்பதும் இவர் இலங்கை முஸ்லிம்களிடம் சமயப் பற்று குறைந்து இருந்த போது அவர்களுக்கு போதனை நெய்வதற்காக பக்தாத் கலீபாவினால் அனுப்பப்பட்டவர் எனக் கருதப்படுவதும், கி.பி. 8 ஆம் நூற்றாண்டில் முஸ்லிம்கள் இலங்கையில் வாழ்ந்துள்ளார்கள் என்பதனை தெளிவுபடுத்துகின்றன. ஹிஜ்ரி 402 இல் அரேபியாவில் இருந்து ஒரு குடி பெயர்ச்சி ஏற்பட்டு அவர்களில் பெரும் தொகையானோர் பேருவளையை அடைந்து கொழும்பிலிருந்து ஹம்மாந்தோட்டை வரை இவர்கள் தம்மை ஸ்தீரப்படுத்திக் கொண்டனர் எனும் இத் தகவல் முஸ்லிம்களின் பூர்வீகத்தை நிரூபிக்கின்றன்.”
“கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட சிங்கள “சந்தோச” காவியங்கள் பேருவளை முஸ்லிம்கள் பற்றி குறித்துள்ளமை நோக்கத்தக்கதாகும். கோகில சந்தோசய, கிராசந்தோசய எனும் இரு கவிதை நூல்களும் பேருவளை சோனக பெண்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளன. சிங்கள இலக்கியங்களை ஆதாரம் காட்டி வெளிநாட்டு வர்த்தக கப்பல்கள் அடிக்கடி வந்து சென்ற வர்த்தக நிலையமாக பேருவளை நகரம் இருந்தது என்று சிறிமா கிறிபமுன குறிப்பிடுகின்றார். இவை முஸ்லிம்கள் கணிசமான அளவில் அப் பகுதியில் குடியிருந்தனர் என்பது புலனாகின்றது.”
“இலங்கையில் ஆரம்ப கால குடியேற்றங்கள் காணப்படும் இடங்களாக பேருவளை, காலி, திருகோணமலை, புத்தளம், கொழுப்பு போன்ற பகுதிகளில் காணப்படும் மஸ்ஜிதுகள் இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றினை பிரபல்யப்படுத்துகின்றன.”
அதேபோல் “பேருவளையில் ஆரம்ப கால முஸ்லிம் குடியேற்றங்கள் இடம் பெற்றுள்ளன. இதனை குறிப்பிடும் ளுசை. அலெக்சான்டர் ஜோன்ஸ்டன் பேருவளையின் கெபரகடுவ இல் வாழ்ந்த மீராலெப்பை எனும் முஸ்லிம் ஒருவர் சிங்கள மன்னனின் வேண்டுகோளுக்கிணங்க இந்தியாவில் இருந்து நுண்ணிய புடைவை செய்யும் கலையை அறிந்த குழுவொன்றை இலங்கைக்கு அழைத்து வந்தார் எனக் குறிப்பிடுகின்றார்.”
எனவே எவ்வாறு இலங்கையில் அரேபியர்களால் ஒரு குடியேற்றத்தை அமைத்திருக்கலாம் என்று அனுமானிக்கும் போது, இலங்கைக்கு அரேபியர்களின் வருகைக்கு இலங்கை பட்டுப் பாதை மத்தியில் இருப்பதே காரணமாகும். அத்தோடு ஆறு மாதங்களுக்கு மாறி மாறி வீசும் பருவப் பெயர்ச்சி காற்றை பயன்படுத்தி பிரயாணம் செய்த அரேபியர்கள் இடையில் தங்கி செல்வதற்கும், தங்களுடைய கப்பல்களை பழுது பார்த்தல், பாராமரித்தல் போன்ற தேவைகளை பூர்த்தி செய்வதற்கு தேவையான வசதிகள் இலங்கையில் காணப்பட்டமையும் ஒரு காரணமாகும்.அவ்வாறு தம் சொந்தத் தேவை நிமித்தம் இலங்கையில் தங்கிச் செல்ல முற்பட்ட அரேபியருக்கு தமது வர்த்தக பொருட்களை உள் நாட்டில் விற்பதற்கான வாய்ப்புக்கள் கிடைத்தன. மேலும்இலங்கையில் காணப்பட்ட பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புக்களும் கிடைத்தன.இதனால் இவர்கள் இலங்கையில் தங்கிச் செல்ல வேண்டிய தேவையும் உருவானது.ஆகவே இவர்கள் கரையோரங்களிலும் உள் நாட்டில் ஓரிரு நகரங்களிலும் தமது குடியேற்றங்களை அமைத்ததோடு இலங்கையின் சுதேச பெண்களை திருமணமும் செய்தனர். இவ்வாறே இவர்களின் குடியேற்றம் இலங்கையில் ஆரம்பமாகி இருக்கலாம் என்பது தெளிவாகின்றது.
இலங்கையில் சூபித் தரீக்காக்கள்.
இந்தியாவைப்போன்றே இலங்கையிலும் தரீக்காக்கள் இஸ்லாத்தின் பரவலுக்கு அதிமான பங்களிப்பு செய்துள்ளன, இலங்கையின் பல பிரதேசங்களிலும் பல்வேறு பட்ட கால வேறுபாட்டில் தரீக்காக்கள் அறிமுகமாகி, மக்களின் ஆன்மீக, கல்வி சமூக வாழ்வின் மேம்பாட்டிற்கு பாடுபட்டுள்ளன.
குறிப்பிட்ட ஒரு தரீக்கா இலங்கையின் எந்த பிரதேசத்தில் எப்போது தோற்றம் பெற்றது, அல்லது இடத்தாலும் காலத்தாலும் முந்தியது எது என்று கூற முடியாதிருப்பதால் பிரதேசங்களை மையமாக வைத்து அதனை குறிப்பிடுவது இலகுவானதாகும்
அலவியதுல் காதிரிய்யா
இலங்கையின் கரையோரப் பிரததேசங்களில் இன்றளவும் தரீக்கக்களின் செல்வாக்கு அதிகமாக காணப்படுதகின்றன இந்த வகையில், தர்கா நகரில் முதல் தோன்றிய தரீகா இதுவாகும். இத்தரீக்காவை அஷ்ஷெய்க் இப்னு உஸ்மால் மக்தூமி (றஹ்) அவர்கள் தர்கா நகரில் அறிமுகப்படுத்தினார்கள்.
18ம் நூற்றாண்டன் இறுதிப் பகுதியில் செய்க் ஹஸன் இப்னு உஸ்மான் ம..;தூபி (றஹ்) அவர்கள் தென் இந்தியாவிலுள்ள காயல்பட்டனத்தின் அமைந்திருந்த மத்றசாவில் மார்கக் கல்வியைக் கற்று ஆலிமாக வெளியேறி காலிக் கோட்டை பள்ளியில் கதீபாக கடமையேற்றார்கள்.அத்தோடு ஹதீஸ் பிக்ஹ_ போன்ற சமயக் கல்வியைக் கற்பித்துக்கொண்டும் த..;வா பணி செய்து கொண்டும் இருந்தார்கள்.
இக்கால கட்டத்தில் அறபு நாட்டலிருந்து அஷ் ஷெய்யத் ஹஸனுள் அத்தாஸ் பாஸி அலவி (றஹ்) அவர்கள் காலி நகருக்கு வருகை தந்தார்கள். இப்பெரியார் வந்திருப்பதைக் கேல்விப்பட்டு அஷ்ஷெய்க் ஹஸனுள் மஹ்தூபி (றஹ்) இப்பெரியாரைப் போய்ச் சந்தித்தார்கள். அப்பெரியாரின் ஆத்மீக ஈடுபாட்டை அறிந்து அவருடன் நெருங்கிப் பழகினார்கள். அஷ்ஷெய்க் ஹஸனுள் மஹ்தூமி (றஹ்) அவர்களின் சமய ஞானத்தையும்இஅறிவாற்றலையும் அறிந்து கொண்ட செய்யத் ஹஸனுள் அத்தாஎபா அலவி அவர்கள் தங்களின் தரீக்காவான அலவியதுல் காதிரிய்யா பற்றிய விளக்கங்களைக் கொடுத்துஅவரைத் தமது கலீபாவாக பைஅத் கொடுத்து நியமித்தார்கள். தற்போது தர்கா நகரில் அலவியதுல் காதிரிய்யா தரீக்காவின் மத்திய இடமான ‘ஆலிம் சாஹிப் அப்பா’ தைக்காவில் இன்றும் ஓதப்பட்டு வரும் றாதிபுல் அத்தாஎ என்ற றாதிபையும் திக்ராக ஒப்படைத்தார்கள். இத்தரீக்காவை அஷ்ஷெய்க் ஹஸன் அல் மஹ்தூபி (றஹ்) அவர்கள் மக்களிடையே அறிமுகப்படுத்த முனைந்தார்கள்
செய்க் ஹஸன் மஹ்தூமி (றஹ்) அர்கள் காலியிலிருநந்து வெளியேறி வெலிகாமம்இ மாத்தறைஇ ஹம்பாத்தோட்டை பகுதிகளில் தஃவாப் பணிபுரிந்துவிட்டு கண்டயிலுள்ள மீராமக்கான் பள்ளியில் கதீபாகக் கடமையேற்று அங்கு மக்களிடையே தஃவாப் பணியை மேற்கொண்டார்கள். பின் மாவனல்லை வந்து கனேதன்னையில் தனிமையாக (கல்வத் இருத்தல்) இருந்து இறை வணக்கத்தில் ஈடுபட்டுஇ இறை நெருக்கத்தைப் பெற்றபின் பல வருடங்களுகுப் பின் கொழும்புஇ களுத்துரைஇ மக்கொனைஇ பேருவளை ஆகிய நகர்களில் தஃவாப் பணி செய்து – ஆலிம் சாஹிப் அப்பா என மக்களால் அழைக்கப்படலானார்கள்.
கடைசியாக தனது தனது தகப்பனின் பிறப்பிடமான மக்குனை விட்டு வெளியேறி தமது உறவினர்கள் இருக்கும் தர்கா நகரை வந்தடைந்தார்கள்.தர்கா நகரில் அன்று கட்டப்பட்ட ஆலிம் ஸாஹிப் அப்பா தக்கியாவில் ‘றாதிபுல் அத்தாஸியா’வை அறிமுகப்படுத்தி தஃவாப் பணியில் தொடர்ந்து ஈடுபட்டார்கள்.
அவர்களின் செய்கின் செய்காகிய அல்ஸெய்யத் செய்கு இப்னு முகம்மது ஜிபிரியுல் அலவிய்யி அவர்களின் ‘வபாத்துத்’தினமான துல்கஃதா பிரை 8ஜ நினைவு குர்ந்து அனைத்து மஷாஇத் (செய்க் மார்கள்) கந்தூரியை தக்கியாவில் ஆரம்பித்து வைத்தார்கள். இன்று வரை இங்கு இக்கந்துரி நடைபெற்று வருகிறது. கொஞ்ச காலத்ததுக்குப் பின் தனது மருமகன் செய்கு அப்துல் காதிர்-காதியார் அப்பா என்று மக்களால் அழைக்கப்பட்டவர்-அவர்களை கலீபாவாக கலீபாவாக நியமித்தார்கள். ஆரம்பத்தில் இதனை ஏற்றுக்கொள்ள மறுத்து பதுளை போய் கொஞ்ச காலம் சமய அனுஷ்டானங்களில் ஈடுபட்ட பின் தர்கா நகரில் வந்து கதீப் மஹல்லம் முகம்மது லெப்பை அவர்களது இல்லத்தில் செய்க் ஹஸன் உஸ்மானுல் மஹ்தூமஜ (றஹ்) அவர்களைச் சந்தித்து கலீபாப் பதவியை ஏற்றுக் கொண்டார்கள்.
இவர்கள் கொஞ்சகாலம் கலீபாவாகக் கடமையாற்றிஇ காலம் செல்லவே தெருவுப் பள்ளிக்குப் பக்கத்தில் இருக்கும் தக்கியாவில் அடக்கம் செய்யப்பட்டார்கள். இவர் ஒரு சிறந்த ஆலிமாக மட்டுமன்றி காதியாராகவும் கடமையாற்றினார்கள். இவருக்குப்பின் யாப் கலீபாவாக வந்தார்கள் என்பது பற்றிய தகவல் கிடைக்கவில்லை. ஆனால் நான் அறிந்தவரை பேருவலையைச் சேர்ந்த அஷ்ஷெய்க் அகமது அப்துல்லா ஹாஜியார் இத்தீக்கின் செய்காகஇ கலீபாவாகக் கடமையாற்றி அவர் மறைவுக்குப் பின் அவரது புதல்வர் அஷ்ஷெய்க் ஹம்சா ஆலிம் பின் அகமது அப்துல்லா ஹாஜியார் வெகுகாலம் செய்காக் கடமையயாற்றி சமீபத்தில் இறையட சோந்தார்கள்.
தரீக்கதுல் காதிரிய்யதுல் முஹியதீன் காதிரி –கோட்டாரி
கலீபா அபுபக்கர் ஸித்திக் (றலி) அவர்களின் வழிவந்ததாகக் குறப்படும் ஹாஜி செய்க் முஹிய்யத்தீனுல் காதிரிய்யி (ரஹ்) அவர்கள் முதன் முதல் க.பி 1840ல் இலங்கையில் விஜயம் செய்தார்கள். இலங்கைக்கு விஜயம் செய்த கோட்டாறு செய்க்மாருக்கெல்லாம் முன்னோட இவர்களே முஹிய்யத்தீன் அப்துள் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட காதிரிய்யா தரீக்காவின் மரபு வழிந்த இத்தரீக்கா ஹாஜி செய்க் முஹிய்யத் தீனுல் காதிரிய்யி அவர்களின் சகோதரரான அஷ்ஷெய்க் முஹம்மது றஜபுல் காதிரிய்யி (றஹ்) அவர்கள் காலிஇ சிலும்பையில் (ஹிரிம்புற) இத்தரீக்காவை முதல் அறிமுகப்படுதிமுகப்படுத்தினார்கள். இவர்கள் முரீதீன்கள் இவர்களை ‘றஜபுஅப்பா’என்று பரிவோடு அழைத்தனர். இப்அபரியார் இலங்கையில் பல பாகங்களிலும் காதிரிய்யா தரீக்காவைத் தாபிப்பதில் ஈடுபட்டார்கள் இலங்கையில் நூற்றுக்கும் அதிகமான தக்கியாக்களையும் ஐம்பதுக்கும் அதிகமான பள்ளிகளையும் நிர்மாணிப்பதற்கு உடந்தையாய் இருந்தார்கள். காலியில் இத்தரீக்கா ஹிஜ்ரி 1308ம் வருடம் (கி;.பி;.1891) இவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஏறக்குறைய இதே காலப்பகுதியில் தர்கா நகரில் இத்தரீக்கா அறிமுகப்படுத்தப்பட்டருக்கலாம். சமீபத்தில் இத்தக்கியாவின் பிரதம தர்மகர்தாவான அல்ஹாஜ் ர்.அலவி இஸ்மாயில் அவர்கள் ஏனைய தர்மகர்த்தா அங்கத்தவர்களுடன் சோர்ந்து தக்கியாவைப் புனருத்தாரணம் செய்து ஒரு புது மஸ்ஜித்தாக அழகாகக் கட்டயுள்ளார்கள்.
அஷ்ஷெய்க் முகம்மது றஜபுல் காதிரி அவர்களின் வபாத்தைத் தொடர்ந்து அன்னாரின் இந்திய மனைவியின் மகனான மௌலவி அல்ஹாஜ் அஷ்ஷெய்க் சுலைமானுல் காதிரி (ரஹ்)அவர்கள் தர்கா நகர் வந்து தன் தகப்பன் வழிமுறைப்பட தஃவாப் பணியில் ஈடுபட்டார்கள். இவர்கள் இலங்கையில் பல பாகங்களிலும் தஃவாப் பணியைத்தொடர்ந்து செய்து வந்தார்கள். இவர் வபாத்தின் பின் அல்-ஹபிபில் அஷ்ஷெய்க் முகம்மது ஹிப்பத்துல் கரீம் அல் காதிரி தர்கா நகரில் தஃவாப் பணி செய்தார்கள்.இவரைத் தொடர்ந்து அஷ்ஷெய்க் முகம்மது றஜபுல் காதிரி அவர்கள் கி.பி.1918-1920 ஆண்டளவில் தர்கா நகர் வந்து தர்கா நகர் முகியத்தீன் காதிய்யாத் தக்கியாவைப் புனருத்தாரணம் செய்வித்து தரீக்கா வேளையில் ஈடுபட்டார்கள். இப்புனருத்தாரண வேலையில் இஸ்மாயில் லெப்பை மரிக்கார் (ஈச்சன் முதலாளி) அவர்கள் nhரும் பங்கு கொண்டார்கள் இவர்களைத் தொடர்ந்து கோட்டார் செய்க்மார்கள் பலர் தர்கா நகர் வந்து தஃவாப் பணியில் ஈடுபட்டு தங்கள் முரீதீன்களை இஸ்லாமிய வழிமுநையைப் பின்பற்றி நடக்க வழிகாட்டினார்கள். இத்தரீக்காவின் கலீபாக்களாக மௌலவி அப்துர் றஸ்ஸாக் ஆலிம்இ அஸனா லெவ்வைஇ அவர் மகன் ய.ட.அ.இஸ்மாயில் ஆகியோர் கடமை புரிந்தனர். இப்போது அல்ஹாஜ் மௌலவி ஹிப்பதுல் கரீம் அவர்கள் கலீபாவாகக் கடமையாற்றி வருகிறார்.
தரீக்கதுல் சாதுலிய்யா
முஹியத்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களது மறைவுக்கு சுமார் 22 வருடங்களுக்குப் பின் மொரோககோ நாட்டில் இமாம் அபுல் ஹஸன் சாதுலிய்யயி (ரஹ்) அவர்கள் பிறந்தார்கள். இவர்கள் கல்வி கற்பதற்காக டியுனிசியா சென்று அங்கு வாழ்ந்துவந்தார்கள். இவர்கள் அங்கு தரீக்கதுள் சாதுலிய்யாவை ஏற்படுத்தினார்கள். இது இரண்டாவதாகத் தோன்றிய தரீக்காவாகும். இத்தரீக்கா மொரோக்கோவில் டயுனிஸியாஇஎகிப்து போன்ற நாடுகளில் பரவலாயிற்று. இமாம் அபுல் ஹஸன் சாதுலிய்யி (ரஹ்) அவர்களுக்குப் பின் மொரோக்கோவில் பிறந்த அஷ்ஷெய்க் முகம்மது இப்னு அப்துர் றகுமான் அல்பாஸி அவர்கள் சாதுலிய்யா தரீக்காவில் சில திருத்தங்களை ஏற்படுத்தியதன் காரனமாக இத்தரீக்கா பின்பு தரீக்கதுல் பாஸியத்துல் சாதுலிய்யா என்று அழைக்கப்பட்டது. இதன் பின் இத்தரீக்கா இந்தியா வரை பரவலாயிற்று. இந்தியாவில் மலபாரைச் சேர்ந்த முகம்மது ஸாலிஹ் மௌலானா அவர்கள் 1850ம் ஆண்டளவில் இலங்கை வந்து சாதுலிய்யா தரீக்காவை அறிமுகப்படுத்தினார்கள். இவரது வருகையின் பின் இலங்கையின் மேற்குக் கரையோரங்களில் சாதுலிய்யா தரீக்காவின் மத்தியத் தானங்களாக ஸாவியாக்கள் அமைக்கப்பட்டன. கொழும்பில் அமைக்கப்பட்ட முதல்ஸாவியா அவ்வல் ஸாவியா என அழைக்கப்படுகிறது. 1855ம் ஆண்டளவில் தெருவுப்பள்ளிக்கு அருகாமையில் தர்கா நகரின் முதல் ஸாவியா கட்டப்பட்டது. இந்த ஸாவியா 1928ம் ஆண்டு திருத்தப்பட்டு புதிய ஸாவியாவாக ஆமைக்கப்பட்டது.இதனை ஷெய்க் முகம்மது இபுராஹிம் மக்கியதுல் சாதுலி அவர்கள் திறந்து வைத்தார்கள்.
இதன் பின் ஸாவியாக்கள் வலிபிட்டிஇமீரிப்பண்ணை ஆகிய இடங்களில் கட்டப்பட்டன. ஸாவியா என்பது ஒதுக்கமான இடம் . இங்கு ஷாதுவிய்யாத் தரீக்காவின் வணக்க வழிபாடுகளான ஹளறாஇவளீபா யாகூதியா போன்றவை நடத்தப்படுகின்றன. இத்தரீக்கா முரீதீன்கள் இஃவான் சகோதர்கள் என அழைக்கப்படுவர். மேற்கூறிய திக்ர் முறைகளின் முலம் மனதைத் தூய்மைப்படுத்தி இறைநெருக்கதடதைப் பெற முரீதீன்கள் முயற்சிக்க வேண்டுமென ஷெய்க் மாh’கள் எதிர்பார்க்கப்படுகின்றனர். இத்தரீக்காவை தர்கா நகரைச் சேர்ந்த பெரும்பாலானவர்கள் பின்பற்றி வந்தனர். இத்தரீக்காவின் கலீபாவாக மௌலவி செய்னுல் ஆப்தீன் அவர்கள் அன்று வந்த ஷாதுலிய்யா செய்க்மார்களால் நியமிக்கப்பட்டார்கள்.இவருக்குப் பின் மௌலவி செய்யத் அகமத் ஆலிம் அவர்கள் கலீபாவாக பல வருடங்கள் பணியாற்றினார்கள். இவர் காலம் சென்ற பின் இவரது புதல்வர் மௌலவி மஸா ஹாஜியார் அவர்கள் கலீபாவாகக் கடமையாற்றி வருகிறார்.
பாதுபிய்யாக் கந்தூரி
1880ம் ஆண்டு இலங்கைகு வருகைதந்த பாதிப் மௌலானா அவர்கள் சிலகாலம் இலங்கையில் தங்கிய பின்னர். யெமன் நாட்டுக்குத் திரும்பினார்கள். 1858ம் ஆண்டு மீண்டும் இலங்கைக்கு வருகைதந்த அவர்கள் 1892ம் ஆண்டு அவர்களது மறைவுவரை ஆத்மிகப் பணிபுரிந்தார்கள். மத்திய மாகாணத்தில் ‘ஹெம்மாத்தகமையில் எள்ள மடுல்போவ கிராமத்தை மையமாக வைத்தே அவர்களது அறிவுப் பணியின் பெரும் பங்கு அமைந்தது.
(க.பி 1844இல் தான் வெளிகாமம் அரபு மத்ரஸா முதன் முதலில் ஆரம்பிக்கப்பட்டது.) மடுல்போவையில் ஜீம்ஆ மஸ்ஜித் இருந்தமையே ஹெம்மாதகமைக்கு வந்த அப்துல்லாஹ் அல் பாதிப் யமனி மடுள்போவையில் தங்குவதற்குக் காரனமாகியது.அவர் மடுள்போவை மஸ்ஜிதை மையமாக வைத்து இப்பகுதி முஸ்லிம்களிடையே சமய அறிவினையும் இபாத்துக்களையும் பெருக்க நடவடிக்கை எடுத்தார்.அதன் ஒரு கட்டமாக ஜந்து கிராமங்களிலிருந்து ஒவ்வொருவரை தேர்ந்தெடுத்து அவ்வக்கிராமத்து (மத்திசம்) ஆக பின்வருவோரினை நியமித்தார். இக்காலப் பகுதியில் தரீக்காக்கள் பல செல்வாக்குப் பெற்றிருந்தன. ஆவற்றில் காதியாத் தரிக்காவைச் சேர்ந்தவராகவும் சாதுலிய்யா தரீக்காவை விமர்சிப்பதாகவும் இஇருநடத பாதிப் அல் யமனி காதிரிய்யா தரீக்காவின் நடைமுறைகளைப் பின்பற்றி மக்கள் அவ்ராதுகளை ஓதப்பயிற்றுவித்தார். ஆதனால் தான் காதிரியா தரீக்காவினர் ஓதி வந்த (ஹந்தாத் ராதிபை) இங்கும்;. அறிமுகப்படுத்தினார்.
இலங்கையில் நக்ஷபந்தி தரீக்காவின் பரவல்
புகாராவின் வாழ்ந்த முகம்மது பஹாஉத்தீன் நக்ஷபந்தி (கி.பி 1317-1389) என்பவரின் வழிபாட்டுப் பயிற்சி முறையே நக்ஷபந்தி தரீக்கா எனப்படுகிறது. முகம்மது அல் குறாசானி (ம.கி.பி 1908) என்பவர் இத்தரீக்காவை இலங்கையில் அறிமுகப்படுத்தினார்.
இலங்கையில் தரீக்காக் களின் பணிகள்
தரீக்காக்கள் உலகம் முழுவதும் பல ஆன்மீக அறிவு சமூகம் சார்ந்த பணிகளை மேற்கொண்டு வந்துள்ளன, இதனடியாக இலங்கையிலும் பல பிரதேசங்களில் பரவிய தரீக்காக்கள் இலங்கை மக்களை நல்வழிப்டுத்தவும், அவர்களை சிறந்த குடிமக்களாக மாற்றுவதற்கும், நல்ல ஒழுக்க அறிவு, பண்பாட்டு ரீதியாக மேம் பட்டவர்களாக மாற பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர்.
தரீக்காக்களின் திக்று முறைகள்
மனிதனிடத்தே இறை சிந்தனையை ஏற்படுத்துவதே தரீக்காக்களின் இலட்சியம் என்பதால் அனைத்துத் தரீக்காக்களும் ~திக்று’ முக்கியத்துவம் கொடுக்கின்றன. எனினும்இஒவ்வொரு ~தரீக்காவினதும்’சேகுமார்கள் தம் இலக்கை அடையத் தாம் ஓதிய ஓதல்களிலும்இ ஓதும் முறைகளிலும் தரீக்காக்களுக்;கிடையில் வேறுபாடுகள் தென்படுகின்றன. தனித்துவம் கூட்டாகவும் திக்று செய்வதற்கு நக்ஷபந்தி தரீக்கா தனது உறுப்பினர்களைத் தூண்டியுள்ளது. பயிற்சி முறையிகளில் நன்கு பரிச்சயமான ஒரு முர்சிதின் தலைமையில் பள்ளியில் அல்லது உறுப்பினர் ஒருவர் வீட்டில் வாரத்துக்கு ஒரு முறையாவது கூட்டுப்பயிற்சிகளை நடத்துவர். அத்தகு பயிற்சிகளில் முர்சிதின் உரையை அடுத்து பின்வரும் ஒழுங்கில் திக்ருகளை நடத்துவர்.
ஆன்மீக மேம்பாட்டுக்கான திக்றுப் பயிற்சிகளை மேற்கொள்ளும் முரீதுகட்கு சாதுலி தரீக்காவினர் சில அடிப்படை விதிகளைத் (உசூல்) தந்துள்ளனர். அவற்றை வாழ்க்கையின் எல்லா நிகழ்வுகளிலும் பேண வேண்டும் என்று அத்தரீக்கா வலியுறுத்துககின்றது.அவ்வடிப்படை விதிகள் வருமாறு.
1.பகிரங்கமான விடயங்களிலும் அந்தரங்கமான விடயங்களிலும் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடத்தல்.
2.சொல்லிலும் செயலிலும் சரீ அத்தைப் பின்னற்றி நடத்தல்.
3.செல்வ நிலைஇ வறுமை நிலை உட்பட சகல கருமங்களிலும் சிருஷ்டிகளைப் புறக்கணித்து அல்லாஹ்வுக்கு முதன்மை வழங்கல்.
4.அல்லாஹ்வின் அருட்கொடைகள் நிரப்பமாகவோஇஅல்லது குறைவாகவோ அருளப்படும் போது இறை நாட்டதடதிற்காக முற்றாக இணங்கி நடத்தல்.
5.இன்பமமும் துன்பமும் அல்லாஹ்வின் நாட்டப்படியே நடைபெறுகின்றன என்று நம்பி அல்லாஹ்வின் பக்கம் திரும்பிவிடல்.
அறிவுப் பங்களிப்பு
மேலும் தரீக்காக்களின் ஷேகுமார்கள் தங்களது சீடர்களில் சிலரை தங்கள் நாட்டு மத்ரஸாக்களுக்கு அனுப்பி வைத்தனர். ஆவர்கள் அங்கு கற்று இலங்கைக்கு மீண்டு தரீக்காக்களின் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
1870 ஆம் ஆண்டு காலியில் ஷாதலிய்யா தரீக்பாவின் அடிப்படையில் காரிய்யா மத்ரஸா ஆரம்பிக்கப்பட்டது.காதிரிய்யா தரீக்காலைச் சேர்ந்த மாப்பில்லை லெப்பை ஆலிம் அவர்;கள் வெலிகாமமத்தில் 1849இல் மத்ரஸத்துல் பாரியை நிறுவினார்;. 1898இல் காலியில் ஷாதுலிய்யா தரீக்காவின் அடிப்படைறுவினார்;. 1898இல் காலியில் ஷாதுலிய்யா தரீக்காவின் அடிப்படையில் பஹ்ஜதுல் இப்ராஹீமிய்யா மத்ரஸா ஆரம்பிக்கப்பட்டது.இதே காலத்தில் புத்தளத்தில் காஸிமிய்யா மத்ரஸாவும் கின்னியாவில் ஸஃதிய்யா மத்ரஸாவும் ஆரம்பிக்கப்பட்டன. இம் மத்ரஸாக்களிலும் கற்று வெளியேறிய உலமாக்களும் ஷெய்குமார்களும் அந்தந்தச் தரீக்காக்களின் அடிப்படையில் இங்கு தஃவாப் பணியில் ஈடுபட்டு முஸ்லிம்களை வழிநடத்தினர்.
1880ம் ஆண்டு இலங்கைகு வருகைதந்த பாதிப் மௌலானா அவர்கள் சிலகாலம் இலங்கையில் தங்கிய பின்னர். யெமன் நாட்டுக்குத் திரும்பினார்கள். 1858ம் ஆண்டு மீண்டும் இலங்கைக்கு வருகைதந்த அவர்கள் 1892ம் ஆண்டு அவர்களது மறைவுவரை ஆத்மிகப் பணிபுரிந்தார்கள். மத்திய மாகாணத்தில் ‘ஹெம்மாத்தகமையில் எள்ள மடுல்போவ கிராமத்தை மையமாக வைத்தே அவர்களது அறிவுப் பணியின் பெரும் பங்கு அமைந்தது. இலங்கையில் அராபிபாஷா, சித்திலெவ்வை ஆகியோரின் கல்வி மறுமலர்ச்சிப் பணிக்கு, எகிப்து அல் அஸஹர் பல்கலைக்கழகப் பட்டதாரியான பாதிப் மௌலானா மிக உறுதுணையாக விளங்கினார்கள். தங்களது வாழ்வின் இறுதிக் கட்டத்தில் கஹட்டோவிட்ட கிராமத்தை வந்தடைந்து,பள்ளிவாசலுக்கு அண்மையில் ஓர் மத்திய தளத்தை அமைத்து மக்களை ஆத்மீகப் பாதையில் நெறிப்படுத்தியதோடு கஹட்டோவிட்ட கிராமத்தில் முதன் முதலாக தமிழ் பாடசாலை ஒன்றை அமைத்து கல்விப் பணிக்குப் பங்களிப்புச் செய்தார்கள்.
முடிவுரை
இஸ்லாமிய வரலாற்றில் பல்வேறு பட்ட நிருவனங்கள், இஸ்லாமிய பணிக்கும், மார்க்க சமூக மேம் பாட்டிற்கும் மிகப் பெரும் சேவைகளை புரிந்துள்ளனர, அவர்களது தியாகம் அர்ப்பணிப்பு காரணமாகவே உலகின் நாலாபுறங்களிலும், இஸ்லாம் பரவியது, சமூகங்கள் நீதியினதும், சமத்துவத்தினதும் நிழலில வாழ்கின்றது.
இந்த சமூக மாற்ற இயந்திரத்தின் மிக முக்கியமான அலகுதான் தரீக்காக்கள், இத்தரீக்காக்கள் நாட்டின் மூலைமுடுக்கொங்கும் சென்று சமூகத்தின் அனைத்துத் தட்டு மக்களிடமும் ஆன்மீPகப் பணிபுரிந்து, கல்வி பொருளாதார, அரசியல், சமூக வாழ்வு ரீதியாக பல பங்களிப்புகளை செய்துள்ளன, எனவே இத்தகைய தரீக்காக்களின் சூபி ஞானிகளின் வாழ்க்கை அறநெறிப் போராட்டம் என்பன பாதுகாக்கப்பட்டு அடுத்த தலைமுறையினருக்கு கொடுக்கப் படவேண்டும், சமூக மாற்றப்பணியில் அவர்கள் கைக் கொண்ட வழிறைகள் மீளவும் திறனாய்வு செய்யப்பட்டு எமது காலத்திற்கு பொருத்தமானவை மீண்டும் எம்மால் கைக் கொள்ளப்படவேண்டும், அத்தோடு அந்த மகத்தான மாமனிதர்களுக்கா நாம் பிரார்த்திக்க வேண்டும்.
உசாத்துணைகள்
1. அமீன் M.I.M. இலங்கை மஸ்லிம்களின்
2. ரிஸ்வி M.N.M. வரலாற்றுப் பார்வையில் இலங்கை முஸ்லிம்களும் மஸ்ஜிதுகளும்
3. ஷுக்ரி M.A.M.இலங்கை முஸ்லிம்கள் தொன்மைக்கான வரலாற்றுப் பாதை
4. கலாநிதி அனஸ் M.S.M. .கண்டி மாவட்ட முஸ்லிம்கள்
5. தஸப்வுபிகதும், தரீக்காக்களினதும் சமூக மேம்பாட்டு அறிவுப்பங்களிப்பு – கலாநிதி ஆ.யு.ஆ.சுக்ரி
6. رباينة لا رهبانية – مولانا أبو الحسن علي الندوي
7. تاريخ الإسلام في الهند الدكتور عبد المنعم النمر
8. الدعوة إلى الإسلام بحث في تاريخ نشر العقيدة الإسلامية – سير توماس.و.أرنولد – ترجمة – الدكتور حسن إبراهيم حسن
9. https://alwafd.news/%D8%AF%D9%86
10. http://www.aljazeera.net/programs/religionandlife/
11. http://www.khayma.com/kshf/m/suofyah.htm
12. http://www.dinamalar.com/news_detail.asp?id=21403&Print=1
13. April 18, 2012 / rahmathfarook
காலத்தின் தேவை மாஷா அள்ளாஹ். அள்ளாஹ் மேலும் தொடர அருள் செய்யட்டும்.
ReplyDeleteஉங்கள் மேன்மையான ஆலோசனைகளை மற்றும் ஆக்கபூர்வமான விமர்சனங்கள் தான், தொடர்ந்து எழுதத் தூண்டும்
ReplyDelete