November 21, 2019

ஷஃபான் மாதத்தின் சிறப்புகள்


(2019-மார்ச் மாதம் எழுதப்பட்டது)


இஸ்லாம் காலத்திற்கு மிகவும் முக்கியத்துவமளிக்கிறது, மனிதர்களின் வெற்றி தோல்வியை தீர்மாணிப்பது காலத்தை பயன்படுத்தும் விதத்திலேயே தங்கியுள்ளது, எனவே தான் அல்குர்ஆனில் பல இடங்களில் காலத்தின் மீது காலத்தின் சில பகுதிகளின் மீதும் சத்தியமிட்டு பேசியிருப்பதை காணலாம். பொதுவாக காலத்தை குறித்து பேசியுள்ள அதேவேலை சில நேரங்களை,தினங்களை,மாதங்களை சிறப்பித்து கூறியிருப்பதையும் அவ்வாறான வேலைகளில் செய்யும் செயல்களுக்கு அதிக முக்கியத்துவமும் நன்மைகளுகம் வழங்கப் படுவதை காணலாம்.



இந்தவகையிNலு ஷஃபான் மாதமானது அத்தகைய சிறப்புப் பெற்ற மாதமாக கணிக்கப் படுகிறது. உஸாமா இப்னு ஸைத் (றழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நான் அல்லாஹ்வின் தூதரே நீங்கள் ஷஃபானில் நோன்பு நோற்பதுபோல வேறு எந்த மாதத்திலும் நோன்பு நோற்பதை காணவில்லையே என்று கூறினேன் அப்போது நபி ﷺ  அவர்கள் றஜபிற்கும் றமழானிற்கும் மத்தியுள்ள இம்மாதத்தை அதிகமனோர் பொருட்படுத்தாது பொடுபோக்காக உள்ளனர், இம்மாதத்தில் அகிலத்தாரின் இரட்சகனின் பால் நன்மைகள் உயர்த்தப் படுகின்றது எனவே நான் நோன்பு நோற்ற நிலையிலேயே எனது நன்மைகள் உயர்த்தப் படுவதை விரும்புகிறேன் என்று கூறினார்கள். (ஸ{னன் திர்மிதி, ஹஸன் தரத்தில் அமைந்த நபி மொழி)


இந்த மாதத்தில் இன்னும் சில சிறப்பான நிகழ்வுகளும் இடம் பெற்றுள்ளன.

அவற்றுள் இ;ந்த மாதத்தில் தான் நபி ﷺ அவர்கள் மீது ஸலவாத்து சொல்லுமாறு ஏவும் வசனமான “நிச்சயமாக அல்லாஹ்வும் அவனது மலக்குமார்களும் அவனுடைய நபியின்மீது ஸலவாத்து கூறுகின்றனர் எனவே முஃமின்களே அவர்மீது நீங்களும் ஸலவாத்துக் கூறி ஸலாமும் கூறுங்கள்” (அல் அஹ்ஸாப:56;) இறங்கியது என்பது பெரும்பாலான அல்குர்ஆன் விரிவுரையாளர்களின் கருத்தாகும்.

அத்தோடு நோன்பு கடமையாக்கப் பட்டதும் இம்மாதத்தில் தான். ஹிஜ்ரி இரண்டாம் வருடம் றமழான் மாதத்தில் நோன்பு நோற்பதற்கான கட்டலை ஷஃபானிலேயே வந்தது

முதலாவதாக போரட்டம் பற்றிய வசனமும் இம் மாதத்தில் தான் அருளப் பட்டது.

அபூ பக்ர் அல் பலஹி அவர்கள் கூறுகிறார்கள் “ றஜப் மாதம் நிலத்தை பண்டுத்தி விதைக்கும் மாதம் ஷஃபான் மாதம் நீர்ப்பாய்ச்சு மாதம் றமழான் மாதம் அருவடைசெய்யும் மாதம், மேலும் றஜப் மழைக்கு முந்திய காற்றைப் போன்றது, ஷஃபான் மழை முகில் போன்றது றமழான் மழை போன்றது, யார் பண்படுத்தி விதைக்கவில்லையோ யார் நீர் பாய்ச்சவில்லையோ அவர் எவ்வாறு அருவடை செய்வார்.

எனவே தான் இம்மாதத்தில் நபி ﷺ அவர்கள் அதிமான இபாதத்துகளை செய்வதற்காக ஒதுக்கியிருந்தார்கள், இம்மாதத்தில் பல்வேறு பட்ட இபாத்துகளில் நபி ﷺ அவர்கள் ஈடுபட்டுள்ளார்கள். குறிப்பாக ஷஃபான் மாதத்தில் அதிகமாக நோன்பு நோற்கக் கூடியவர்களா காணப்பட்டார்கள்

ஆஇஷா றழியல்லாஹ{ அன்ஹா அவர்கள் அறிவிக்கிறார்கள்: நோன்பின்றி இருக்கமாட்டாரோ என நாம் சொல்லுமளவிற்கு  நபி ﷺ அவர்கள் நோன்பு நோற்பவர்களாக இருந்தார்கள், சில போது நோன்பு நோற்கவே மாட்டாரோ என கூறுமளவிற்கு நோன்பின்றி இருப்பார்கள்(புகஹாரி)

ஆஇஷா றழியல்லாஹ_ அன்ஹா “ நபி ﷺ அவர்கள் ஷஃபானைப் போன்று வேறு எந்த மாதத்திலும் அதிகமாக நோன்பு நோற்கவில்லை” (முஸ்லிம்)

அதேவேலை அடியார்களுடைய செயல்கள் அல்லாஹ்விடம் எடுத்துக் காட்டப் படக்கூடிய மாதமாக இம்மாதத்தில் நோன்நோன்பு நோற்றவர்களாகவே இருப்பதனை நபி ﷺ அவர்கள் விரும்யுள்ளார்கள்.

மனிதர்களது செயல்கள் இறைவனிடம் மூன்று வகையில் உயர்ததப் படும்

1.  பகலின அமல்கள் இரவாவதற்குள்  உயர்த்தப் படும் இரவின் அமல்கள் பகலாவதற்குள் உயர்த்தப் படும்

2.   வாரத்தில் திங்கள் வியாழன் தினங்களில் உயர்த்தப் படும்

3.   குறிப்பாக ஷஃபான் மாதத்தில் அமல்கள் உயர்தப் படும்.


எனவே எமது முன்னோர்களான ஸலபுஸ் ஸாலிஹ்களும் தம்முடைய செயல்கள் இறைவனிடம் எடுத்துக் காண்பிக்கப்படும் சந்தர்ப்பங்களை எண்னி மிகவும் கவலைப் படுபவர்களாகவும் தமது நிலை என்னவாக இருக்கும் என்பதை நினைத்து அழக்கூடியவர்களாசுமவும் இருந்தனர்.


அதேவலை  ஷஃபான் மாதத்தை அல்குர்ஆனை ஓதுபவர்களது மாதம் என்று ஸலபுஸ் ஸாலிஹ்கள் கூறுபவர்களாக இருந்தார்கள், அம்ர் இப்னு கைஸ் அல் முலாஈ அவர்கள் றமழான் மாதம் வந்து விட்டால் தனது கடையை மூடிவிட்டு அல்குர்ஆனை ஓதுவதில் மூழ்கிவிடுவார்கள்.

நபி ﷺ  அவர்களைப் பொருத்தவரையில் றமழான் மாதத்தின் அருள்ளைப் பெற்றுக் கொள்வதற்கும் றமழானில் அதிமாக இபாதத்துகளில் ஈடுபடுவதற்கும் தன்னை தயார் படுத்திக் கொள்வதற்காவும் ஷஃபானை பயன்படுத்தினார்கள் என்று கூறமுடியும்.


இமாம் இப் ரஜப் அவர்கள் கூறுகிறார்கள் சிரமத்துடனும் வருந்திக் கொண்டும் றமழான் மாதத்தினுள் நுழையதிருப்பதற்கான பயிற்சியே  ஷஃபானில் நோன்பு நோற்பது, ஷஃபானில் நோன்பு நோற்பதன் மூலம் நோன்பு நோற்பதன் இனிமையையும் சுவையையும் அறிந்தவராக றமழானில் நுழைந்து திடமாகவும் உற்சாகத்துடனும் நோன்பு நோற்க அது துணைபுரியும்.


எனவே ஷஃபான் மாதமானது மிகப் பெருமதியான மாதமாகும் இம்  மாதத்தினை றமழானுக்கு தயாராகும் விதத்திலும் இம்மாதத்திலே நபி ﷺஅவர்கள் அதிமாக இபாதத்துகளிலே ஈடுபட்டுள்ளார்கள் என்ற ஸ{ன்னாவை பின்பற்றும் விதத்திலும் இபாதத்துகளிலே அதிகமா ஈடுபடுவதற்கு முயற்சி செய்யவேண்டும், அத்தோடு கழாச் செய்யவேண்டி நோன்புகள் இருப்பின் அவற்றை றமழானுக்கு முன்னறே கழாச்செய்து  விடுவதும் அவசியமாகும்.

அதேவேலை அல்குர்ஆனை ஓத சிறமப்படுபவர்கள் அல்குர்ஆனை கற்றுக் கொள்ளவும், மனனமிட்டவர்கள் அதனை மீட்டுவதற்கு இம்மாதத்தினை சந்தர்ப்பமாக பயன்படுத்திக் கொள்வது சிறந்தது, ஏனெனில் றமழானில் அல்குர்ஆன் ஓதுவது மிகச் சிறந்த இபாதத்தாகும் அதற்கு தயாரவேண்டியுள்ளது, அத்தோடு றமழான் மாத இரவுத் தொழுகைக்கு தயாரவததும் அவசியமாகும்.


மேலும் றமழானுடன் தொடர்பு பட்ட சட்டங்கள், வணக்க வழிபாடுகள், போன்றவற்றை கற்பதற்காவும் இம்மாத்தை பயன்படுத்துவ மிக அவசியமாகும்.

No comments:

Post a Comment

குத்ஸே....!

  குத்ஸே....! அறபு மூலம்: Nizar Qabbani தமிழில்: M.G.Mohammed Insaf என் கண்ணீர்த் துளிகள் வற்றிப் போகும் வரை அழுது தீர்த்தேன். மெழுகாய் ...