மௌலவி எம்.ஜே.எம்.றியாழ் அவர்கள் 1933ம் ஆண்டு ஜனவரி மாதம் 25 திகதி நீர்கொழும்பில் கம்மல்த்துறை எனும் ஊரில் பிறந்தார்கள். இவரது தந்தை முஹம்மது ஜமாலுத்தீன். இவர் ஒரு பிரபல்யமான துணி வியாபாரியாக காணப்பட்டார். இவரது தாயார் ஜவாகிதா உம்மா.
மௌலவி எம்.ஜே.எம்.றியாழ் அவர்கள் தனது ஆரம்பக்கல்வியை கம்மல்த்துறை அல் பலாஹ் வித்தியாலயத்தில் கற்றார். பின்னர் மஹரகமை கபூரிய்யா அரபுக்கல்லூரியில் இணைந்து ஷரீஆ கல்வியை கற்று 1951ம் ஆண்டு வெளியாகினார்.
பின்னர் 1957- 1958 வரை அட்டாலைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாவாலையில் பயின்றார். அதனைத் தொடர்ந்து பேராதனைப் பல்கலைக்கழகத்திலும் பீ.ஏ. சிறப்புப் படட்டம் பெற்றார், பின்னர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் பட்டப்பின் படிப்பு கல்வியியல் டிப்லோமாவை நிறைவு செய்தார்.
சேவைகள்
1951ம் ஆண்டு கபூரிய்யாவில் பட்டம் பெற்று வெளியேரியதைத் தொடரந்து அங்கே ஒரு வருடம் ஆசிரியராக கடமையாற்றினர். பின்னர் 1952ம் ஆண்டு கொழும்பு ஸாஹிராக் கல்லூரியில் தற்காலிக ஆசிரியராக கடமையாற்றினர். அதனைத் தொடர்ந்து 1953 ஜனவரி தெடக்கம் 1955 டிஸம்பர் வரை புத்தளம் ஸாஹிராக் கல்லூரியல் ஆசிரியராக கடமையாற்றினர்.
பின்னர் 1956ம் ஆண்டு கற்பிட்டி அல் அக்ஸா பாடசாலையில் ஆசிரியாரக கடமையாற்றினால், இவ்வாராக அரச பாடசாலைகளில் 20 வருடங்கள் ஆசிரியர் பணிபுரிந்துள்ளார்.
இவை தவிற 17 வருடங்கள் கல்வி அதிகாரியாவும் பிரதிக் கல்விப் பணப்பாளராகவும் பணியாற்றனார். மேலும் 16 வருடங்கள் இலங்கை பரீட்சைத் திணைக்களத்தில் பிரதம பரீட்சகராக கடையாற்றினார்.
அதே வேளை 1954ல் மௌலவி தாஸீன் நத்வி மற்றும் அவரது சகோதரர் அப்துர் றஹ்மான போன்றோருடன் இணைங்து "இஹ்வதுல் இஸ்லாம் " என்ற அமைப்பை உருவாக்கி நீர் கொழும்பு பிரதேசத்தை மையப்படுத்தி பல வேலைகளை மேற்கொண்டர்.
"இஹ்வதுல் இஸ்லாம் " அமைப்பானது 1980ம் ஆண்டுவரை இயங்கியது, குறித் அமைப்பின் செயலாளரக 07 வருடங்கள் கடமையாற்றினல்.
இலங்கை ஜமாஅதே இஸ்லாமி அமைப்புடன் நெருங்கிய உறவைப் பேணிவந்த மௌலவி றியாழ் அவர்கள். 1956ம் ஆண்டு கம்பாஹா மாவட்டத்திலேயே முதலாவது தப்லீக் இஜ்திமாவை நடாத்தி கம்பஹாவில் தப்லீக் ஜமாஅத்தை அறிமுகம் செய்தார்.
1.அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தேசிய பொதுச் செயலாளராக 25 வருடங்கள் கடமையாற்றினர்.
முஸ்லிம் தனியார் சட்டங்களில் திருத்தங்களை செய்வதற்காக 1986ல் அரசாங்கத்தால் நியமிக்கப்படட்ட குழுவில் முஸ்லிம் அல்லாதோரும் இடம் பெற்றிருந்ததால், தேசிய முஸ்லிம் அமைகப்புகளை ஒன்றினைத்து அகில இலங்கை ஜம்ய்யதுல் உலமாவின் தலைமையின் கீழ் ஷரீஆ பாதுகாப்பு முன்னிணியை உருவாக்கி அதன் மூலம் போராடி முஸ்லிம்களை மாத்திரம் கொண்ட குழுவை அரசாங்கம் நியமிக்கும்படி வைத்தமை குறிப்பிடத்தக்கது.
அதே போன்று ஜம்இய்யதுல் உலமாவின் கீழ் ஹிலால் குழுவை உருவாக்கி கொழும்பு பெரிய பள்ளிவாசலுடன் இணைந்து பிறை தீர்மானங்களை எடுக்கும் முறைமையை உருவாக்கி அச் சேவையை சிறப்பாக மேற்கொள்ள வழி செய்தார்.
இலங்கை தேசிய கல்வித்திட்டங்களில் மாற்றங்கள் ஏற்பட்ட வேளைகளில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா மூலம் நடவடிவடிக்கைகளை மேற்கொண்டார்
இக்காலப்பகுதியில் இவரது முயற்சியால் 1996ம் ஆண்டு ராபிததுல் ஆலமில் இஸ்லாமியின் நிதியுதவியுடன் ஜம்இய்யதுல் உலமாவிற்கு 4 மாடிகளைக் கொண்ட தலைமைக் காரியாளயம் அமைக்கப்பட்டது. ஜம்இய்யதுல் உலமாவின் ஹலால் கமிட்டி உருவாக்குவதிலும் முக்கிய பங்குவகித்தார்.
ஜம்இய்துல் உலமாவின் "ஸவ்துல் உலமா" சஞ்சிகை சிறப்பிதழ்களில் 10 வருடமாக ஆசிரியராக கடமையாற்றினார்
ஜம்இய்யதுல் உலமாவின் உயர்விற்கும், அதன் வளர்ச்சி, அதனூடாக சமூக உயர்விற்கு கடுமையாக பாடுபட்டார், ஜம்இய்யதுல் உலமா வரலாற்றில் தவிர்க்க முடியாத, முக்கியமான ஒருவராக றியாழ் மௌலவி காணப்படுகிறார் என்றால் அது மிகையாகாது.
2.இஸ்லாமிய ஆராய்ச்சிக் கழகத்தின் செயலாளராக 12 வருடங்கள் பணியாற்றினர்கள்.
இஸ்லாமிய ஆராய்ச்சிக் கழகத்தின் செயலாளராக கடமையாற்றும் காலப்பகுதியில், கொழும்பு மாநகர சபையினால் ஆடு மாடுகளை அறுக்கும் போது அவற்றை மயக்கமடையச் செய்து அறுக்க வேண்டும் என்று சட்டம் கொண்டுவரப்பட்டபோது 1964-5-15 ம் திகதி உலமாக்கள் மாநாட்டை நடாத்தி அச் சட்டத்தை வாபஸ் வாங்கச் செய்தார்.
நபி ஸல்லல்லாஹூ அரைஹி வஸல்லம் அவர்களின் புனித முடித் திருக் காட்சி என்ற பெயரில் ஒரு பிழையான செயலை கொழும் மேமன் பள்ளயில் 1964. 7. 18 அன்று ஏற்பாடு செய்யபட்ட போது இஸ்லாமிய ஆராய்ச்சிக் கழகத்தின முயற்சியால் வக்பு சபை மூலம் அந் நிகழ்ச்சிய தடுத்தார்
3.அகில இலங்கை அரபு ஆசிரியர் சங்கத்தின் தலைவராக 06 வருடங்கள் பயியாற்றினார்.
4.கல்வி அமைச்சின் கீழ் இயங்கிய அரபு மொழி அபிவிருத்திக் கழகத்தின் செயலாளராக 04 வருடங்கள் பணிபுரிந்தார்.
5.இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் முஸ்லிம் நிகழ்ச்சிகளின் ஆலோசனை சபை அங்கத்தவராக 03 வருடங்கள் கடமையாற்றினார்.
6.இலங்கை வக்பு சபை உறுப்பினராக 03 வருடங்கள் பணிபுரிந்தார்
7. கல்வி அமைச்சு மற்றும் இலங்கை தேசிய கல்வி நிறுவகம் ஆகியவற்றின் இஸ்லம் அரபு மதியுரை சபை அங்கத்தவராக 07 வருடங்கள் வேலை செய்தார்
8. கபூரிய்யா அரபுக்கல்லூரிரியின் பழைய மாணவர் சங்க செயலாளராகவும் பிரசுரக் கழகச் செயலாளராகவும் 16 வருடங்கள் பணியாற்றினார்
9.நீர் கொழும்பு காமச்சோடை முஸ்லிம் பாடசாலை இஸ்தாபகர் குழு, அபிவிருத்திக் குழு அங்கத்தவராக பணிபுரிந்தார்
10.நீர் கொழும்பு ஆமிலுல் .இஸ்லாம் சமூக நல இயக்கத்தின் இஸ்தாபக அங்கத்தவர்களுர் ஒருவர்
11.நீர் கொழும்பு "மத்ரஸதுல் ஹிலால் லிதர்பிய்யதில் அத்பால்" குர்ஆன் பாடசாலை பணிப்பாளர்
12.பலஹத்துறை மத்ரஸது ஹூதைபதுல் யமான் பாதுகாவலர்
13. குருநாகல் மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் இஸ்தாபகர்
14. புத்தளம் மாவட்ட அரபு ஆசிரியர்கள் சங்க இஸ்தாபகர்
15.கபூரிய்யா அரபுக்கல்லூரியிலும், கல் எலிய பெண்கள் அரபுக்கல்லூரியிலும் ஊதியம் பெறாது வருகை தரு விரிவுரையாளராக கடமையாற்றினார்
17. அரசாங்கப் பாடசாலைகளின் பாடவிதான அபிவிருத்தி நிலையத்தன் இஸ்லாம், அரபுப்பாடக் குழு அங்கத்தவராகக 02 வருடங்கள் பணியாற்றினார்.
18. பரீட்சைத் திணைக்களத்தின் ஆணையானர் நாயகத்தினால் நியமிக்கப்பட்ட அல் ஆலிம் பாடத்திட்டக் குழு செயலாளரக செயற்பட்டதுடன். அல் ஆலிம் பரீட்சை குழு அங்கத்தவராகவும் செயற்பட்டார்
19. பரீட்சைத் திணைக்களத்தினால் இஸ்லாம் , அரபுப் பாடங்கள் சம்பசத்தமாக நடாத்தப்படும் பரீட்சைகள் சிலவற்றின் பிரதம கட்டுப்பட்டு பரீட்சகராக கடமை புரிந்தார்
20.முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் நியமிக்கப்பட்ட அரபுக் கல்லூரிகளின் பொதுப் பாடத்திட்டம் வகுக்கும் குழு அங்கத்தவரா செயற்பட்டார்
21. முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் நியமிக்கப்பட்ட அல் குர்ஆன் பாடசாலை, அஹதிய்யா பாடசாலை பொதுப் பாடத்திட்டம் வகுக்கும் குழு அங்கத்தவரா செயற்பட்டார்
22.நீர் கொழும்பு ஸைலான் சர்வதேசப் பாடசாலைய் பணிப்பாளர் சபை அங்கத்தவரக இருந்தார்
23. ஹிஜ்ரி 15ம் நூற்றாண்டு ஆரம்ப விழாவிற்கான தேசிய ஏற்பாட்டுக் குழு அங்கத்தவராக இருந்தார்
24. இங்கை அரசாங்க.தனியார் பாடசாலைகளிலும் ஆசிரியர் பயிற்சி கலாசாலைகளிலும் அமுல் நடாத்தப்படும் , இஸ்லாம், அரபு பாடத்திட்டங்கள் பாட நூல்கள் பற்றி தமிழ் நாட்டில் உள்ள அரபிக் கல்லூரிகள் சிலவற்றில் விளக்கவுரை நிகழ்த்தினார், உதாரணமாக சென்னை ஜமாலிய்யா அரபிக் கல்லூரியை குறிப்பிடலாம்
25.இலங்கையில் யுத்தம் நிகழும் காலத்தில் 2003ம் ஆண்டளவில் ஐக்கிய தேசிய கட்சி ஆட்சிகாலத்தில் தற்காலிக யுத்த நிறுத்ததத்தின் போது சர்வ மத தலைவர்க குழு ஒன்று குடா நாட்டுக்கு சென்று நாட்டின் சமாதானம் பற்றி விடுதலைப்புலி இயக்க தலைவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனர். அக்குழுவிலும் அங்கம் வகித்தார்
26.1978 ஏப்ரல் 22ம் திகதி நீர் கொழும்பில் நடந்த காதியானிகளுக்கு எதிரான அனைத்து இலங்கை முஸ்லிம்களின் மாபெரும் மாநாட்டின் பிரதம அமைப்பாளராக செயற்பட்டார்
மர்ஹூம் ரியால் மௌலவி அவர்கள் தமது ஆரம்பக் கல்வியை கம்மல்துறை அல்பலாஹ்வில்தான் ஆரம்பித்தார்.
ReplyDeleteகாமச்சோடையில் அல்ல.
இஹ்வதுல் இஸ்லாம் இயக்கத்தின் செயலாளராக அவர் பணியாற்றவில்லை.
உங்கள் மேன்மையான பின்னூட்டலுக்கு நன்றி, பாடசாலையின் பெயரை Edite செய்கிறேன்.
Deleteநான் றியாழ் மௌலவியை 27.09.2010அன்று. காமச்சோடையில் உள்ள அவரது வீட்டில் சந்தித்து உரையாடிய போது தான் "இஃவதுல் இஸ்லாம்" அமைப்பின் செயலாளராக இருந்ததா குறிப்பிட்டார்.