November 20, 2019

மௌலவி ஏ.ஆர்.எம். ரூஹுல் ஹக்.

மௌலவி ரூஹுல் ஹக் அவர்கள் வெ
ளிமடையிலிருந்து ஐந்து மைல் தூரத்தில் அமைந்துள்ள குருதலாவை எனும் ஊரில் 1932 ம் ஆண்டு ஜூன் மாதம் 26ம் திகதி பிறந்தார்கள், இவரது தந்தை ஸெய்யித் அப்துர் ரஹ்மான் ஆலிம் ஆவர் இவர் கேரலாவை பூர்வீகமாக் கொண்டவராவர், மௌலவி ரூஹ_ல் ஹக் அவர்களுடைய தாயார் ஸ{ல்பா நாச்சியார், மௌலவி அவர்களுடைய தந்தை ஒரு ஆலிமாக இருந்த அதேவேலை ஒரு யூனானி வைத்தியராகவும் காணப்பட்டார, இவர் தைலங்களை தயாரித்து பல பகுதிகளுக்கும் அனுப்புவார், இக்குடும்பத்தில் மொத்தமாக எட்டு ஆண்பிள்ளைகளும் இரண்டு பெண்பிள்ளைகளுமாக மொத்தம் பத்துக் குழந்தைகள் காணப்பட்டனர்,  இவர்களுள் மூன்றாமவரே மௌலவி ரூஹ_ல் ஹக் அவர்கள்.


தனது ஆரம்பக்கல்வியை குருத்தலாவை சென் ஜோசோப் கல்லூரியில் தரம் எட்டுவரை கற்றார், இக்காலப்பகுதியில் மௌலவி ரூஹ_ல் ஹக் அவர்களுடைய தந்தையார் சுகவீனமுற்றிருந்தார், தனது பிள்ளைகளுள் ஒருவரை ஷரீஆ கல்வியை பெறச்செய்து ஆலிமாக்க விரும்பிய அப்துர் ரஹ்மான் ஆலிம் அவர்கள் தனது மூன்றாவது மகன் ரூஹ_ல் ஹக் தான் பொறுத்தமானவர் எனக்கண்டார், மகன் கல்வி கற்கும் பாடசாலையின் தலைமை ஆசிரியரை சந்தித்து தனது எண்ணத்தை சொன்னபோது, ரூஹ_ல் ஹக்  மிகத் திறமையானவன் அவனை ஏன் நீங்கள் மத்ரஸாவில் சேர்க்க வேண்டும்? மற்றொரு பிள்ளையை சேர்க்கலாமே, என அவர் கூறிபோது, திறமையானவர்கள் ஷரீவை கற்க வேண்டும் என கூறிவிட்டு மகனை அழைத்து வந்தார் அப்துர் ரஹ்மான் ஆலிம்.
மஹரகமை கபூரிய்யா அறபிக் கல்லூரியில் சேர்க்கப்பட் ரூஹ_ல் ஹக் அவர்கள் மௌலானா உமர் ஹஸரத், ஷம்ஸ_தீன் ஹஸரத், ஸையித் அலவி தங்கல் ஆகிறோரின் வழிகாட்டலைப் பெற்று சிப்பாக கற்று, கபூரிய்யாவில் பட்டம் பெற்று  வெளியேரினார், பின்னர் இரண்டு வருடங்கள் அங்கேயே ஆசிரியராகவும் கடமையாற்றினார்.
1956ம் ஆண்டு ஜனவரி மாதம் புத்தளம் ஸாஹிராக் கல்லூரில் ஆசிரியார இணைந்து பணியாற்றினார், இக்காலப் பிரிவி தனது சக ஆசிரியத் தோழர் ஜனாப் முஸ்தகீம் என்பவரின் வற்புருத்தல் காரணமாக 1959 ம் ஆண்டு ளுளுஊ பரீட்சைக்கு தோற்றி சித்தியடைந்தார், பின்னர் லண்டன் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றி அதிலும் சித்தியடைந்தார். 
பின்னர் 1959ம் ஆண்டு நடைபெற்ற அரசினர் அரபு ஆசிரியர் சங்கத்தின் செயலாளராக தெரிவு செய்யப்பட்டார்.
புத்தளத்திலே ஆசிரியராக கடமையாற்றுகின்ற காலத்தில் ஜமாஅதுத் தப்லீகில் இணைந்து தஃவா பணியில் ஈடுபட்டார், அதேவேலை அன்றைய பிரதி சபாநாயகரா இருந்த எஸ்.எச் இஸ்மாஈல் அவர்களுடனும் நெருக்கமான தொடர்பு காணப்பட்டது, எஸ்.எச். இஸ்மாஈல் அவர்கள் சார்பாக தேர்தல் பிரச்சாரத்திலும் ஈடுபட்டார்.
பின்னர் இலங்கை ஜமாஅதே இஸ்லாமியுடன் நெருங்கிய தொடர்புகளை கொண்டிருந்தார், ஜமாஅதே இஸ்லாமிக்கு எதிர்ப்புகள் வந்தபோது அவற்றை  எதிர் கொண்டு மறுப்புக்களை வழங்கினார், கண்டி மீரா மக்காம் பள்ளிவாசலில் அப்துஸ் ஸமத் ஆலிம் அவர்களுக்கும் ஜமாஅதே இஸ்லாமிக்கும் இடையில் நடை பெற்ற விவாதத்தில் ஜமாஅதே இஸ்லாமி சார்பாக கலந்து கொண்டார், அதேவேலை வழிகாட்டி, உண்மை உதயம் போன்ற சஞ்சிகைகளில் தொடர்ந்தும் எழுதி வந்தார்.
கல் எலிய அறபுக் கல்லூரியில் நீண்ட காலம் கடமையாற்றிய மௌலவி ரூஹ{ல் ஹக் அவர்கள், அக்காலத்தில் அறபு மொழி போதனைக்கு ஒரு பொறுத்தமான பாட நூல் காணப்படாமையினால், அலவி அபுல் ஹஸன் அஸ்ஹரி மற்றும் யூ. எம் தாஸீன் நத்வி ஆகியோருடன் இணைந்து “ லியானுல் அரபிய்யா” எனும் பாடநூலை தயாரித்தார்.
இமாம் ஹஸனுல் பன்னாவின் நூலை “மறை நிழலில் மனிதன்” என்ற தலைபில் வெளியிடப்பட்டது, பின்னர் மௌலான் இஹ்ஸான் இலாஹி ழஹீர் அவர்களின் அஷ் ஷீஆ வஸ் ஸ{ன்னா என்ற நூலை ஷீஆவும் ஸ{ன்னாவும் என்ற தலைப்பில் மொழி பெயர்த்தார்.
1962ம் ஆண்டு மௌலவி ரயாழ் அவர்களின் சகோதரி பாதிமதுஸ் ஸஹ்ராவை திருமணம் செய்து குடும்ப வாழ்வில் இணைந்தார், கொழும்பு ராஜகிரியவில் வசித்து வந்த மௌவி அவர்கள் 2011ம்ஆண்டு செப்டெம்பர்  மாதம் 18ம் திகதி இறையடி சேர்ந்தார்

2 comments:

  1. Replies
    1. இன்ஷா அல்லாஹ் விரிவாக எழுத முயற்சிக்கிறேன்

      Delete

குத்ஸே....!

  குத்ஸே....! அறபு மூலம்: Nizar Qabbani தமிழில்: M.G.Mohammed Insaf என் கண்ணீர்த் துளிகள் வற்றிப் போகும் வரை அழுது தீர்த்தேன். மெழுகாய் ...