றமழான் மாதத்திற்கு அல்லாஹ் பல சிறப்புக்களை ஏற்படுத்திவைத்துள்ளனான், அது அல்குர்ஆன் இறங்கிய மாதம், நன்மைகளின் மாதம்,தவ்பாவின் மாதம் பாவமன்னிப்பினதும், நரக விடுதலையினதும் மாதம், இம்மாதத்தில் சுவனம் அழங்கரிக்கப்பட்டு நரகத்தின் வாயில்கள் மூடப்பட்டு ஷைத்தான் விலங்கிடப்படும் மாதம். அபூ ஹ{ரைரா றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் “ றமழான் மாதத்தின் முதலாவது இரவில் ஷைத்தான்களும் அத்து மீரக்கூடிய ஜின்னினமும் விலங்கிடப்படுவர், நரகின் வாயில்கள் மூடப்படும் அதன் எந்தவொரு வாயிலும் திறக்கப்பட மாட்டாது, சுவனத்தின் அனைத்து வாயில்களும் திறக்கப்படும் அதன் எந்த வொரு வாயிலும் மூடப்படமாட்டாது, ஒரு அழைப்பாளர் மக்களை அழைத்து நன்மையை வீரும்புபவனே முந்திக் கொள், தீமையை நாடுபவனே குறைத்துக் கொள் என்று சொல்வார், மேலும் அல்லாஹ் றமழானில் ஒவ் வொரு இரவிலும் சிலரை நரகிலிருந்து விடுதலை செய்வான்” (திர்மிதி)
இமாம் இப்னுல் கையிம் அவர்கள் இவ்வாறு கூறுகிறார்கள் “ றமழான் மாதத்தில் நபி ﷺ அவர்கள் பல்வேறுபட்ட இபாதத்துகளில் அதிகமாக ஈடுபடக் கூடியவராக ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடன் அல்குர்ஆனை கற்றுக் கொள்பவராக இருந்தார்கள், மனிதர்களுள் அதிகமாக தர்மம் செய்யும் பண்பைப் பெற்ற நபி ﷺ அவர்கள் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களை சந்திக்கும் போது மிக அதிகமான தர்மம் செய்வராக இருந்தார்கள், மேலும் அதிமாக நன்மைகளை செய்பவராகவும், அல்குர்ஆன் ஓதுபவராகவும், தொழுபவராகவும் திக்ரு செய்பவராகவும், இஃதிகாப் இருப்பவராகவும் காணப்ப்ட்டார்கள், வேறு எந்த மாதத்திலும் இபாதத்திற்காக ஒதுக்கத அளவு றமழான் மாதத்தை இபாத்திற் கென்றே ஒதுக்கியிருந்தாகர்கள்”
இவை அனைத்தினது நோக்கம் யாதெனில் இறைவனை அஞ்சிய தக்வா உள்ளமனிதர்களையும் இறைவழிகாட்டலைப் பெறும் தகையுள்ள மனிதர்களையும் உருவாக்குவதாகும், இதனையே அல்லாஹ{த் தஆலா பின்வருமாறு கூறுகிறான் “يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِن قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ ﴿١٨٣
“விசுவாசம் கொண்டோரே நீங்கள் பயபக்தியுடடையவர்களாக மாறுவதற்றாக உங்களுக்கு முன்பிருந்தவர்கள் மீது நோன்பு கடமையாக்கப்பட்டது போல உங்கள் மீது நோன்பு கடமையாக்கப் பட்டுள்ளது”
எனவே மறுமை மற்றும் உலக வாழ்வை சமனிiயாக பேணக்கூடிய ஒரு சமநிலையான ஆலுமையை உருவாக்குதே றமழானின் நோக்கமாக காணப்படுகின்றது, இந்த உயர்ந் இலக்கை அடைந்து கொள்வதற்காக வரலாறு நெடுகிளும் முஸ்லிம் சமூகத்தின் ஒவ்வொரு உருப்பினரும் இந்த றமழானை மிகச் சிறப்பாக பயன்படுத்தியிருப்பதனை காணலாம்ஃ ஆயினும் இன்றைய காலங்களில் இளைஞர்கள் குறிப்பாகவும் ஏனையோர் பொதுவாகவும் றமழானின் சிறப்புகளை உணராதவர்களாகவும், அதனை சரியாக பயன்படுத்தாதவர்களாகவும் இருப்பதை அவதானிக்க முடிகின்றது..மனித வாழ்வின் மிக முக்கியமான கட்டமான இளமைப் பருவம் எப்போதும் இறை திருப்திளை பெற்றுக் கொள்வதற்கவே பயன்படுத்தப்பட வேண்டும்.
எனினும் ஒரு சில காரணங்களினால் றமழான் மாதத்தின் அருமை மற்றும் அதன் பெறுமதியை புரிந்து கொள்ளாது அதனை பாழ் படுத்;துகின்ற நிலமை இளைஞர்களுக்கு மத்தியில் காணப்படுகின்றன, இந்த நிலையிலிருந்து விடுபட்டு இம் மாதத்தின் பெறுமதியை உணர்ந்து அதனை சரியாக பயன்னடுத்துவதற்கு சில விடயங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
மானசீக ரீதியாக தயாராதல்
றமழான் மாதம் வருவதற்கு முன்னரே இளைஞர்கள் தம்மை மானசீக ரீதியாக இப் புனித மாதத்தை வரவேற்கத் தயாராக வேண்டும், வெருமனே சம்பிரதாய பூர்வமாகவன்றி, இம்மாததத்தின் சிறப்புக்களை உணர்ந்து, இம் மாதமானது தனது ஆலுமையில் நடத்தைகளில் மாற்றங்களை கொண்டுவருவதற்காகவும், இறைவனின் அருள்களைப் பெற்றுத் தரவும் வருகின் மாதம் என்பதனை உறுதியாக நம்பி, அம் மாதத்தில இறைவழிபாட்டில் ஈடுபடுவதற்கு உறுதி கொள்ள வேண்டும்.
எமது முன்னோர்களைப் பொருத்தவரையில் அவர்கள் றமழானுக்கு ஆறு மாதங்களுக்கு முன்னரே றமழானை அடையும் பாக்கியத்தை தருமாறும் றமழானின் பின்னர் ஐந்து மாதங்கள் றமழானின் இபாதத்துகளை ஏற்றுக் கொள்ளுமாறு இறைவனிடம் பிரார்த்;திப்பவர்களாகவும் காணப்பட்டார்கள், மேலும் அனஸ் இப்னு மாலிக் றழியல்லாஹ_ அன்ஹ_ அவர்கள் “ஷஃபான் வந்து விட்டால் முஸ்லிம்கள் அல்குர்ஆனினும் தம்மை புதைத்துக் கொண்டு அதனை ஓதக் கூடியவர்களாகவும், ஏழைகள் மற்றும் தேவையுடையோருக்கு நோன்பு நோற்க உதவும் வகையிலும் ஸகாத்தை கொடுக்கக் கூடியவர்களாக காணப்பட்டனர்” என்று அறிவிகக்கின்றார்,அம்ர் இப்னு கைஸ் அவர்கள் ஷஃபான் வந்து விட்டால் தனது கடையை மூடிவிட்டு அல்குர்ஆன் ஓதுவதிலேயே தனது நேரத்தைக் கழிக்கக் கூடியவராக காணப்ட்டார்கள், இவை எமது முன்னோர் றமழானை வரவேற்கவும் அதிலே இபாதத் செய்யவும் மானசீக ரீதியாக தயாராகியதையே உணர்த்துகின்றது.
அறிவு ரீதியாக தயாராதல்
மானசீக ரீதியாக இம்மாதத்தின் பலன்களை முழுமையாக அடைந்து கொள்ளவேண்டும் என்ற எண்னம் உள்ளத்தில் உதித்த போதும், அவ் வெண்னத்தினை உறுதியான நம்பிக்கையாக மாற்றவும் அதற்கு செயல் வடிவம் கொடுக்கவும் அறிவு அவசியப் படுகின்றது. எனவே றமழான் மாதத்தின் சிறப்புகள், நோன் கடமையாக்கப் பட்டதன் இலக்குகள், றமழானில் நோன்பிருப்பதன் அவசியம், அதிகமான இபாதத்துகளில் ஈடுபடுவதன் அவசியம் தொடர்பாக கற்றுக் கொள்வது அவசியமாகும்.
அதேவேலை நோன்பின் சட்டங்களை மிகத் தெளிவாக கற்றுக் கொள்வதோடு றமழானுடன் சம்பந்தப் பட்ட எமது சமகால நடைமுறைகளுடன் தொடர்பு பட்ட சட்ட திட்டங்களையும் அறிந்து கொள்வதானது றமழான் மாதத்தில் திருப்பிகரமாக நோம்பு நோற்கவும் இபாதத்துகளில் ஈடுபடவும் துணையாக அமையும். அல்லாஹ{த் தஆலா அல்குர்ஆனில் இவ்வாறு கூறுகிறான் “فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ ﴿٤٣ “ நீங்கள் அறியாத
வர்களாக இருந்தால் அறிந்தவர்களிடம் கேட்டு அறிந்து கொள்ளுங்கள்” (அல் அன்பியா: 43) இன்று இவ்விடயங்கள் தொடர்பாக ஏராலமான புத்தகங்களும், உரைகளும் காணப்படுகின்றன, அதே போன்று இவ்விடயங்கள் தொடர்பான ஏராலமான கட்டுரைகளையும் இணைய தளங்களில் கண்டு கொள்ளலாம்.;
தடைகளை இனங்காணல்
பொதுவாக றமழான் மாதத்தினை மிகவுமே சிறப்பாகப் பயன்படுத்;;;த வேண்டும் என்று உறுதி கொண்டு ஆர்வத்துடன் அம் மாதத்தினை எதிர் நோக்கிய போதும் எம்மில் பலருக்கு அவ்வாறு நோன்பை சிறப்பாக பயன்படுத்த முடியாது போகிறது, சிலபோது நோன்பு முடியும் தருவாயில் அல்லது முடிந்த பின்னர் தான் கைசேதப் படுகின்ற நிலை அல்லது கவலைப் படுகின்ற நிலையினை காணலாம், அப்போது மீண்டும் அடுத்த றமழானை சரியாக பயன் படுத்த வேண்டும் என்று சமாதனம் சொல்லிக் கொள்ளும் பலரைக் காணலாம்.
இதற்குக் காரணம் எமது கவனத்தை திசை திருப்புகின்ற, உறுதியை குறைத்து பொடுபோக்கிலே எம்மை ஆழ்த்திவிடக் கூடிய எமது கவனயீம், அல்லது ஒழுங்கீனம் மற்றும் வீண் கேலிக்கைகள் என்று கூறலாம். பொதுவாகவே அல்குர்ஆன் முஃமின்களது பண்புகளைப் பற்றி பேசும் போது “وَالَّذِينَ هُمْ عَنِ اللَّغْوِ مُعْرِضُونَ ﴿٣﴾ “ “அவர்கள் வீணான விடயங்களைவிட்டும் விலகியிருப்பார்கள்” (முஃமினூன்:03) என்று கூறுகின்றது ஏனெனில் வீணான விடயங்களில் ஒருவர் மூழ்கி விடும்போது அவர் விணையமாக செய்ய வேண்டிய விடயங்களை செவ்வனே நிறைவேற்ற முடியாது போகின்றது. அதேவேலை குறித்த விணையமான முக்கியமான விடயத்திற்கு வழங்கவேண்டி அந்தஸ்தும் படிப்படியாக மனதை விட்டு அகன்று பெறுமதியற்ற ஒன்றாக அதனை ஆக்கி விடுகிறது.
எனவே றமழான் என்ற பெறுமதிமிக்க இந்த மாதத்தின் ஒவ்வொரு விநாடியையும் அதற்கே உரிய அந்தஸ்த்தை வழங்கி பயன்படுத்துவது அவசியமாகும்ள, அபூ ஹ{ரைரா றழில்லாஹ{ அன்ஹ{ அவர்கள் அறிவிக்கிறார்கள் நபி ﷺ அவர்கள் கூறினார்கள் : யார் பொய்யான பேச்சையும் அதனடியான செயலையும் விட்டுவிடவில்லையோ அவர் பசித்திருப்பதிலும் தாகித்திருப்பதிலும் அல்லாஹ்விற்கு எந்தத் தேவையும் இல்லை” (புஹாரி)
அபூ நுஅய்ம் (றஹ்) அவர்கள் ஹிலிய்யதுல் அவ்லியா எனும் நூலில் “ அபூ ஹஹ{ரைரா றழியல்லாஹஹ_ அன்ஹ_ அவர்களும் நபி ﷺ அவர்களுடைய தோழர்களும் நோன்பு நோற்றால் வாருங்கள் எமது நோன்பை தூய்மைப் படுத்துவோம் எனக் கூறவார்கள், அதாவது நோன்பை வீணான பேச்சுக்கள், செயல்கள், நோன்பின் நன்மைகளை குறைக்கக் கூடிய விடயங்களிலிருந்து தவிர்ந்து அதனைப் பாதுகாப்போம்” எனக் கூறுபவர்களாக இருந்தனர். என்று குறிப்பிடுகிறார்.
எனவே தொலைத் தொடர்பு சாதனங்களின் எல்லை மீறிய பயன்பாடு, சமூக வலைதள பாவனை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை கண்டு கழித்தல் என்பனவும், அன்மையில் நடைபெற உள்ள உலக் கிண்ண கிரிக்கட் சுற்றுப் போட்டி, நண்பர்களுடன் அரட்டையடித்தல் போன்ற விடயங்கள் எமது நோன்பை பாழ் படுத்திவிடாதிருக்க அல்லது நன்மைகளை குறைத்து விடாதிருக்கும் விதத்தில் நாம் மிகக் கவனமாக இருக்கவேண்டும்.
திட்டமிடல்
பலர் ஒரு சுற்றுலா செல்வதற்கு, ஒரு பாடநெறியை தொடர்வதற்கு, தொழில் செய்வதற்கு என பல விடயங்களை திட்டமிட்டு செய்கின்றனர் ஆனாலும் வணக்க வழிபாடுகள் எமது மறுமை வெற்றியுடன் தொடர்பு பட்ட விடயங்களை திட்டமிட தவறிவிடுகின்றனர். ஒழுங்கான திட்மிடல் இன்மையினால் நன்மை செய்வதற்கும் அதிகமான கூலிகளை பெறுவதற்குமான பல சந்தர்ப்பங்களை தவறவிடுகிறோம், குறிப்பாக றமழான் மாதத்தை திட்டமிடாது கழிப்பதனால் பாலபோது நோன்பு நோற்றல் என்ற விடயத்தை தாண்டி வேறு எந்த இபாதத்தையும் சிறப்பாக செய்ய முடியாது போகின்றது, சிலபோது அதில் கூட குறைகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
எனவே எதிர் வரக் கூடிய றமழான் மாதத்தை இப்போதே திட்டமிட்டுக் கொள்ளவேண்டும், அவ்வாறு திட்டமிட்டுக் கொள்ளும் போது றமழானை இயன்றவரை சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள முடியுமாக இருக்கும்
நோன்பு நோற்றல்
இரவுத் தொழுகையை எந்தப் பள்ளிவாசலிலே தொழுவது
அல் குர்ஆனை ஓதுவதற்கான நேரங்கள்
தர்மங்கள் செய்யும் ஒழுங்குகள்
திக்ர் அவ்ராதுகளில் ஈடுபடுதல்
தனிப்பட்ட முறையில் அல்லது நண்பர்களோடு இணைந்து மிகச் சிறிய அளவிலேனும் இப்பதார் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தல்
மார்க்க விடயங்களையும் பொது விடயங்களையும் கற்றுக் கொள்வதற்கான நேரத்தை திட்டமிட்டுக் கொள்ளல்
பொது வேலைகளிலே ஈடுபடுதல்
நண்பர்களை சந்திப்பதற்கான நேரங்களை வரையருத்து திட்டமிடல்
விளையாட்டுக்களையும் விளையாடும் நேரத்தையும் திட்டமிடல்
போன்ற அம்சங்களை முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்ளும்போது எமது நேரம் விரயமாவதை தவிர்க்க முடியும் அத்தோடு றமழான் ஆரம்பிக்க முன்னரே றமழானில் செய்ய வேண்டி விடயங்கள் பற்றி ஒரு தெளிவு இருப்பதனால் எதனை செய்வது எதனை விடுவது என்று சிந்திப்பதிலும் தீர்மாணிப்பதிலும் நேரம் விரயமாவதை தவிர்க்க முடியமாக இருக்கும்.
வளங்களைப் பயக் படுத்தல்
இளைஞர்களைப் பொருத்தவரையில் சமூக வலைதள் பாவனையும், கைடக்க தொலைபேசி பாவனையும் அதிகமாகவே காணப்படுகின்றன, சமூக வலைதள பாவனையினை திட்டமிட்டு சரியான முறையிலே பயன் படுத்தும் போது றமழானை பயனள்ளதாக கழிப்பதற்கு முடியும். எனினும் கட்டுப்பாடின்றி, திட்டமின் பயன் படுத்தும் போது அதுவே எமது றமழானை பழ்படுத்திவிடுவதாக அமையும்.
எமது சமூக வலைதள பாவனையானது நாம் பெறுகின்ற தகவல்களை ஊர்ஜிதப் படுத்தாது பகிர்தல், வீணான தர்க்கங்கள், பின்னூட்டல்களை இடல், பொய்யான தகவள்களைப் பரப்புதல், அவதூருகளை பரப்புதல், பயனற்ற விடயங்களை படித்தல் பகிர்தல், வீணான விடயங்களை கண்டு கழித்தல், இலத்திரனியல் விளையாட்டுக்களில் நேரத்தை போக்குதல் போன்ற விடயங்களில் ஈடுபடுவதாக இருக்குமானால் நிச்சயமாக அது எமது நோன்பின் பயனை இல்லாது செய்து விடும். எனவே றமழானுக்கு முன்னரே இவ் விடயத்தில் நாம் சில கட்டுப்பாடுகளை இட்டுக் கொள்வது சிறந்தது, அல்லது இன்று பல யுpp கள் அன்ரோயிட் கை பேசிகளில் காணப்படுகின்றன, குறிப்பாக றமழான் மாதத்துடன் தொடர்புபட்ட துஆக்களை கற்றுக் கொள்வதற்கு, அல் குர்ஆனை ஓதுவதற்கு, சட்டதிட்டங்கள் தொடர்பாக அறிந்து கொள்வதற்கு என்ற பல்வேறுபட்டவையாக அவை காணப்படுகின்றது, இவற்றை நம்பகமான ஒரு ஆலிமின் ஆலோசனையுடன் கைபேசிகளில் பதிவிரக்கிக் கொள்வதன் மூலம் பிரயயோசனமான ஒன்றாக பயன்னடுத்த முடியும்.
அத்தோடு மஸ்ஜித், இணையதளம், வாராந்த வகுப்புகள் பயான் நிகழ்ச்சிகள், போன்ற அனைத்து விடயங்களையும் இயன்றவரை பயன்படுத்தி இம்மாதத்தின் உச்ச பயனை பெற முயற்சித்தல் அவசியமாகும்
பொறுமையும் தன்னம்பிக்கையும்.
மேற் குறிப்பிட்ட அனைத்து விடயங்களை;யும் சிறப்பாக செய்வதற்கு பொறுமை தன்னம்பிக்கை என்ற பண்புகள் மிகவுவே அவசியமானவையாகும். பொறுமை என்பது மூன்று வகைப்படும்
1. நன்மைகளை செய்வதிலே பொறுமையாக இருத்தல்
2. தீமைகளை விடுவதில் பொறுமையாக இருத்தல்
3. இறைவனின் தீர்ப்புக்களிலே, சோதனைகளின் போது பொறுமையாக இருத்தல்
எனவே றமழான் மாதத்தை திட்டமிட்டு பயன்படுத்தும் போது அம்மாதத்தில் செய்ய வேண்டிய இபாபதத்துகளை தொடராக குறைகள் இன்றி செய்வதற் பொறுமை அவசியமாகின்றது, அதேபோன்று எமது வழமையான நேரசூசிக்கும் செயல்பாடுகளுக்கும் மாற்றமான புதியதொரு நேரசூசிப் படி இயங்குதற்கும், தவறுகளையும் நோன்பை பாழ்படுத்தும் விடயங்களிலிருந்தும் தவிர்ந்து வாழ்வதற்கும் பொறுமை அவசியமாகிறது. எனவே பொறுமை என்ற பண்பினை அதிகமாக ஏற்படுத்திக் கொள்வது இன்றியமையாத விடயமாகும்.
அதேபோல திட்டமிட்ட படி இம்மாத்தினை பயன்படுத்திக் கொள்ள முடியும் என்ற தன்னம்பிக்கையும், திட்டமிட்ட விடயங்களை செய்யும்போது ஏற்படும் தடைகளை எதிர்கொள்வதற்கும் தன்னால் முடியும் என்ற துணிவும் கட்டாயமாக இருக்க வேண்டும், இல்லாத போது சோர்ந்து போய் வழமையான றமழான் போன்று அல்லது ஒரு சராசரி மனிதனின் றமழான் போன்றே எமது றமழானும் கழிந்து விடக்கூடும்.
No comments:
Post a Comment