மௌலவி எம்.ஜே.எம்.றியாழ் - பகுதி - 02
மௌலவி எம்.ஜே.எம்.றியாழ் அவர்களைப் பொருத்தவரை அவர்களுடைய வாழ்வை
மார்க்கத்திற்கும், மனித சமூகத்திற்கும் சேவை செய்வதற்காவே பயன்படுத்தினார்கள் என்பதை முதல் பகுதிகுயினூடே
புரிந்து கொள்ளலாம், இவை அனைத்தையும் இறைவனின் திருப்தியை நோக்காக கொண்ட தூய பணிய அல்லாஹ் ஏற்று நிரப்பமான
கூலியை வழங்கவேண்டும் என்று பிரார்த்தித்தவனாக.
மௌலவி எம்.ஜே.எம்.றியாழ் அவர்களது இன்னும் சில சேவைகளையும்,
அவர்கள் பெற்றுக் கொண்ட
சில விருதுகளையும் இரண்டாம் பகுதியில் நோக்குவோம்.
வானொலி நிகழ்ச்சிகள்
1. அல் குர்ஆன் விளக்கம்
2. அல் குர்ஆன் மொழிபெயர்ப்பு
3. அல் ஹதீஸ் விளக்கம்
4. மேல் வகுப்பு மாணவர்களுக்கான இஸ்லாம் பாடம்
5. மேல் வகுப்பு மாணவர்களுக்கான இஸ்லாமிய நகரீகம் பரீட்சைக்கான வழிகாட்டல்கள்
6. மார்கம் சம்பந்தமான விளக்கம்
7. அரபு மொழி, அரபு இலக்கியம் தொடர்பான வகுப்புகள்
8. இஸ்லாமிய விடயங்கள் தொடர்பான நிகழ்ச்சிகளின் நெறியாழ்கையாளர்
9. பெருநாள், மீலாத், மிஃராஜ் போன்ற விசேட தினங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள்
10. இஸ்லாமிய நூல்கள், பிரசுரங்கள் தொடர்பான திறனாய்வு உரை
11. அரபு நாடுகளில் நடைபெறும் விசேட நிகழ்ச்சிகளை மொழிபெயர்த்தல்
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
1. ரூபவாஹினி, மற்றும் சில தொலைக்காட்சி அலைவரிசைகளில் இஸ்லாமிய விவகாரங்கள் பற்றிய விளக்க நிகழ்ச்சிகள்
2. ரமழான் மாத ஸஹர் சிந்தனை, நோன்பு துறக்கும் நேரத்தில் விசேட நிகழ்ச்சிகள்
3. பெருநாள், மீலாத் தினங்களில் விசேட நிகழ்ச்சிகள்
4. முஸ்லிம் சமூகம் சார்ந்த பிரச்சனைகள் தொடர்பான உரையாடல்கள்
5. அரபு நாடுகளில் நடைபெறும் விசேட நிகழ்ச்சிகளை மொழிபெயர்த்தல்
பங்குபற்றிய மாநாடுகளும் கருத்தரங்குகள்.
1. 1974ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற அனைத்துலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் 'ஈழத்தில் அரபு மொழியும்,
அரபுக் கலாசாலைகளும்'
எனும் தலைப்பில் ஆய்யவுக்கட்டுரை
சமர்ப்பித்தார்
2. 1980ம் ஆண்டு கொழும்பு பண்டாரநாயக சர்வதேச நினைவு மண்டபத்தில் நடந்த ஹிஜ்ரி 15ம் நூற்றாண்டு தொடக்க விழவில்
'மதீனாவை நோக்கி'
என்ற புத்தகம் விழாவின்
பிரதம அதிதியாக கலந்து கொண்ட ராபிததுல் ஆலமில் இஸ்லாமியன் அப்போதைய செயலாளர் மர்ஹும்
அஷ்ஷெய்க் முஹம்மது அலி அல் ஹரகான்; மூலம் வெளியிடப்பட்டமை
3. 1982ல் கொழும்பில் நடைபெற்ற அனைத்துலக உலமாக்கள் மாநாட்டில் இலங்கை சார்பாக பங்குபற்றியமை
4. மர்ஹூம் பாக்கிர் மாக்கார் அவர்களது தலைமையில் நடந்த அனைத்துலக இஸ்லாமிய தமிழ்
இலக்கிய மாநாட்டில் உலமாக்கள் சார்பாக பங்கு பற்றி மார்கம் சம்பந்தமான கருத்தரங்கை
தலைமை தாங்கி நடாத்தியமை
5. 1982ல் லாஹூரில் நடைபெற்ற உலமாக்களுக்கான மாநாட்டில் இலங்கை சார்பாக பங்குபற்றியமை
6. 2000ம் ஆண்டு எகிப்து சென்றபோது அப்போதைய அல் அஸ்ஹர் பல்கலைக்கழ தலைவராக இருந்த மர்ஹூம்
செய்யித் அலி தந்தாவி அவர்களுடனான நேர்காணல் மேற் கொண்டமை
7. 2000ம் ஆண்டு லிபியாவில் நடைபெற்ற சர்வதேச உலமாக்கள் மாநாட்டில் பங்குபற்றியமை
8. 2007ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற அனைத்துலக இஸ்லாமிய தமிழ் அலக்கிய ஆய்வு மாநாட்டில்
பங்கு பற்றி 'இலங்கையில் இஸ்லம் அரபு போதனை – ஒரு வரலாற்றுக் கண்ணோட்டம்' என்ற தலைப்பில் ஆய்வுக் கட்டுரை
முன்வைத்தமை
9. 2008ம் ஆண்டு கொழும்பில் நடைபெற்ற 'சமூகங்களுக்கிடையிலான நல்லுறவை வளர்ப்பதற்கான வழிகளும் செயற்பாடுகளும்'
எனும் கருத்தரங்கில்
'இத்திஹாதுல் முஸ்லிமீன்'
சார்பாக பங்கு பற்றி
கருத்துரை வழங்கியமை
10. 2009ம் ஆண்டு கொழும்பில் நடந்த கருத்தரங்கொன்றில் 'பல்லின சமூகங்கள் வாழும் ஒரு
நாட்டில் முஸ்லிம்கள் தமது கலாசாரங்களையும் தனித்துவங்களையும் பேணிப்பாதுகாப்பதில்
ஏற்படும் பிரச்சனைகளும் அவற்றை தீர்ப்பதற்கான ஆலோசனைகளும்' எனும் தலைப்பில் உரை நிகழ்த்தியமை
இலக்கியப் பணிகள்
1. இலங்கையின் தினசரிப் பத்திரிகை, இஸ்லாமிய சஞ்சிகைகள், மற்றும் தமிழகத்தின் 'மணி விளக்கு, முஸ்லிம் முரசு, பிறை, ரஹ்மத், ஜமாஅதுல் உலமா, மறுமலர்ச்சி' போன்ற சஞ்சிகைளிலும் இயற் பெயரிலும், 'முஅல்லிம்' என்ற புணைப் பெயரிலும் கட்டுரைகள் எழுதியுள்ளார்.
2. மதீனாவை நோக்கி – புத்தகம் , இப் புத்தகமானது உயர்தர இஸ்லாம், இஸ்லாமிய நாரீக படங்களுக்கும், பல்கலைக்கழ மாணவர்களுக்கும் துணை
நூலக கல்வி அமைச்சின் நூற் பிரசுர ஆலோசனைக் குழுவினதும், தேசிய கல்வி நிறுவனத்தினதும்
சிபாரிசு பெற்றது.
3. காதியானிகளின் வழிகேடு
4. இஸ்லாமும் சூதாட்டமும்
5. காதியானிகள் காபிர்களே (சிறு பிரசுரம்)
6. அல்லாமா இக்பால் அவர்களும் அஹமதிகளும் (சிறு பிரசுரம்)
7. நீர் கொழும்பில் நடைபெற்ற இறுது நபித்துவ விளக்க மாநடு (சிறு பிரசுரம்)
8. அரசாங்க பாடசலைகளின இஸ்லாம், அரபு பாட நூலாக்கக் குழு அங்கத்தர் மற்றும் ஆலோசகர்
கௌரவ விருதுகள்
1. அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் விருதும், நினைவுச் சின்னமும்.
2. அம்பாரை மாவட்ட ஜம்இய்யதுல் உலமாவின் 'ஷைஹூல் உலமா' விருதும நினைவுச் சின்னமும்
3. கம்பஹா மாவட்ட ஜம்இய்யதுல் உலமாவின் 'ஷமசுல் உலமா' விருதும் நினைவுச் சின்னமும்
4. கொழும்பு இஹ்ஸானிய்யா அரபுக்கல்லூரியினால் 'காதிமுல் உம்மா' (சமூகத் தொண்டன்) விருதும் நினைவுச்
சின்னமும்.
5. முல்லைத்தீவு ஜம்இய்யதுல் உலமாவின் 'சிராஜூல் உலமா' விருதும் நினைவுச் சின்னமும்.
6. ஆகில இலங்கை கதீமார் சம்மேளனத்தின் சார்பாக பொன்னாடை போர்தி கௌரவிக்கப்பட்மை
7. இலங்கை இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் 'அல் வஹ்தா' நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டமை
8. ஸஊதி அரேபியா இஸ்லாமிய விவகாரங்கள் மற்றும் அவ்காப் அமைச்சின் சார்பாக விஷேட நினைவுச்
சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டமை
9. ஆகில இலங்கை முஸ்லிம் கல்வி மாநாட்டில் சார்பில் அதன் இஸ்தாபக அங்கத்தவருக்கான
நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டமை
10. சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக அதன் சிரேஷ்ட அங்கத்தவர்களுக்கான நினைவுச்
சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டமை
11. காயல்பட்டணம் தீவுத்திடலில் நடந்த விஷேட பொதுக் கூட்டமொன்றில் பொன்னாடை போர்த்தி
கௌரவிக்கப்பட்டமை
12. நீதி அமைச்சின் சார்பாக அகில இலங்கை சமாதான நீதிவான் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டமை
13. கலாசார அமைச்சு சார்பாக 'கலாபூஷணம்' விருது வழங்கி கௌவகிக்கப்படமை
இத்தகைய பல சேவைள் செய்த மா பெரும் ஆலுமையான மௌலவி எம்.ஜே.எம்.றியாழ்
அவர்கள் 2013ம் ஆண்டு டிஸம்பர் 10ம் திகதி வபாத்தானார்கள் அன்னாரது ஜனாஸா 11.12.2013 அன்று காமச்சோடை பள்ளிவாசலில்
ஜனாஸாத் தொழுகை நடைபெற்றது அதனைத் தொடர்ந்து மாலை 4.00 அளவில் பெரியமுல்லை மையவாடியில்
ஜனாஸா நல்லடக்கட் இடம் பெற்றது.
அல்லாஹ் அன்னாரது சேவைகளை ஏற்று, உயர்தரமான ஜன்னதுல் பிர்தவ்ஸை
வழங்குவானக.
No comments:
Post a Comment