November 20, 2019

தாஸீன் நத்வி அவர்களுக்கும் சமகால அறிஞர்களுக்கும் இடையிலான உறவு

அஷ்ஷெய்க் எம்.ஜீ.முஹம்மத் இன்ஸாப்(நளீமி) B.A (pera) M.A (sudan) M.A (pera) PGDE (reading OUSL)
விரிவுரையாளர் ஜாமிஆ ஆஇஷா ஸித்தீகா மாவனல்லை.

மனிதனின் ஆளுமையைக் கட்டமைப்பதில் அவனது சூழலின் வகிபாகம் மிக முக்கியமானதொன்றாகும், மனிதனை செதுக்கி விடும் சிற்பிகளாகவே அவனது சமூகமும் சூழலும் காணப்படுகின்றன, சூழலில் இருந்து எத்தகைய அனுபவங்களை பெறுகின்றானோ, அவைதான் அவனது வாழ்வின் அடுத்தடுத்த கட்டங்களைப் பட்டை தீட்டுகின்றன.


இலக்கணத்தில் நான்என்பது ஒருமை, ஆயினும் சமூகவாழ்வில் அது பன்மை என்று கவிஞர் வைரமுத்து கூறுகின்றார், அத்தோடு சான்றோருடன் பழகுதல் என்பது மிகவுமே இனிமையானது, இதனையே சான்றோருடன் பழகுதல் கரும்பை நுனியிலிந்து கடித்து உண்பது போல இனிமையானது என்ற கூற்று உணர்த்துகிறது.

அறிஞர்களுக்கு மத்தியிலும், அறிஞர்களுக்கும் அறிவைத்தேடும் மாணவர்களுக்கு மத்தியிலும் எப்போதுமே ஒரு இறுக்கமான தொடர்பும் நெருக்கமும்இருக்கும் என்பதற்கு வரலாறே சாட்சி.

இதன்படி இஸ்லாமிய வரலாற்றில் தோன்றிய பல அறிஞர்கள்தமது சமகால அறிஞர்களுடனும், தமது ஆசான்கள் போன்ற மூத்தவர்களுடனும், அவர்களதுபுலமை மிக்க நூல்களுடனும் வைத்திருந்த சிறந்த  தொடர்புகளே அவர்களது ஆளுமையை கட்டமைத்து, அடுத்த தலைமுறையைச் செதுக்கும் சிற்பிகளாக அவர்களை செதுக்கி விட்டது என்று கூறலாம்.

இத்தகைய பின்னணியில் தான் மௌலவி யூ.எம். தாஸீன் நத்வி அவர்களுக்கும் தனது சமகாலத்தில் வாழ்ந்த அறிஞர்களுடன் நெருக்கமான தொடர்பும் அறிவுப் பரிமாற்றமும் தேசிய மட்டத்திலும் சர்வதேச மட்டத்திலும் காணப்பட்டது,
இதனை தாஸீன் நத்வி அவர்களே பாகிஸ்தானில் பதினான்கு நாட்கள் என்ற ஆக்கத்த்pல் மர்யம் ஜமீலா அவர்களை சந்தித்த அனுபவத்தை எழுதும் போதுஇஸ்லாமிய அறிவுத்துறையில் சேவையாற்றுபவர்களோடு கடிதத் தொடர்பு கொள்வது, அவர்களை சந்திப்பது எனது சிறு வயது காலப் பொழுதுபோக்குகளில் ஒன்றாக நான் ஏற்படுத்திக் கொண்டேன்என்று கூறுகிறார்.

இலங்ககையிலே கல்வி பெறும் மாணவராக இருக்கும் போது, தனது ஆசிரியர்களின் நன்மதிப்பையும் அன்பையும் பெற்றவராகக் காணப்பட்டதுடன், அவர்களிடம் தனது சந்தேகங்களை கேட்டறிந்து தெளிவு பெறுபவராகக் காணப்பட்டார்.

நத்வதுல் உலமாவிற்கு தனது கல்வியைத் தொடர்வதற்காக சென்றபோதும், அங்குள்ள ஆசான்களுடன் நெருக்கமான உறவைப் பேணிவந்தார், பேராதனைப் பல்கலைக்கழகத்தின்  சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எம்.எஸ்.எம்.ஸலீம் அவர்கள் 1992ம் ஆண்டு லக்னோவிற்கு கல்விகற்க சென்றிருந்தபோது, மௌலானா பைஸ{ர் ரஹ்மான் நத்வி அவர்கள் தன்னிடம் தாஸீன் நத்வி அவர்களைப் பற்றி விசாரித்ததாக ஒருதடவை என்னிடம் கூறினார், மரணித்து சுமார் பதினைந்து வருடங்களின் பின்னர். லக்னோவில் கல்வி கற்று சுமார் முப்பத்தாறு வருடங்களின் பின்னர் அவரை நினைவில் வைத்துள்ளாரெனில் அவர்களுக்கு மத்தியிலான உறவு எத்தகையதாக இருந்திருக்க வேண்டும்?

மேலும் நத்வாவின் மூதறிஞர்களான மௌலானா  இஸ்ஹாக் நத்வி, கலாநிதி அப்துல்லாஹ் அப்பாஸ் நத்வி, ஷெய்ஹ{த் தப்ஸீர் மௌலானா உவைஸ் நத்வி, மொலானா ராபிஃ நத்வி,மௌலானா இம்ரான் கான் நத்வி,மௌலானா மன்ஸ{ர் நுஃமான்  போன்றோருடன் நெருக்கமான தொடர்பு காணப்பட்டது. அத்தோடு அவர்களது கருத்துக்களை தனது பேச்சுக்களிலும் எழுத்துக்களிலும் மேற்கோள் காட்டுபவராகவும், அவர்களது அறிவுப்புலமையினை தனது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வராகவும். மெச்சிப் பேசுவராகவும் இருந்தார்.

நத்வாவில் கல்விகற்றுவிட்டு திரும்பும் வழியில் கேரளாவில் ஜமாஅதே இஸ்லாமியின் தலைமையகத்தில் சிறிது காலம் தங்கியிருந்த மௌலவி தாஸீன் அவர்கள் அங்கிருந்த அறிஞர்களுடனும் தனது தொடர்பை வலுப்படுத்திக்கொண்டார், குறிப்பாக அப்போதைய கேரள ஜமாஅதே இஸ்லாமியின் தலைவர் மௌலானா முஹம்மது அலி ஸாஹிப் அவர்களது அறிவுப்புலமையினை பின்நாட்களில் நினைவு கூறுபவராக இருந்துள்ளார்.

தாஸீன் நத்வி அவர்கள் பாகிஸ்தானில் பதினான்கு நாட்கள் என்ற தனது ஆக்கத்திலும் தனக்கு தொடர்பிருந்த பல அறிஞர்களை நினைவு கூறுகிறார்.

தாஸீன் நத்வி அவர்கள் கொழும்பில் தங்கியிருந்த காலப்பகுதியில் அவரது அறைக்கு அடிக்கடி பல்கலைக்கழக மாணவர்களும்,பட்டதாரிகளும் வந்து செல்வோராகவும் பல விடயங்களையும் கலந்துரையாடுபவர்களாகவும் இருந்தாதக மாவனல்லையில் வசித்து வரும் ஹெம்மாதகமையை சேர்ந்த ஓய்வு பெற்ற அதிபர் எம்.ஜே.எம். ஜுனைத் அவர்களுடனான ஒரு சந்திப்பின்போது கூறினார். ஜனாப் ஜூனைத் அவர்கள் தாஸீன் நத்வியின் இளைய சகோதரரான பஹ்ருத்தீன் ஆசிரியர் அவர்களுடன் தாஸீன் நத்வியின் அறையில் குறித்த காலப்பகுதியில் சிறிது காலம் தங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தவகையில் ஜாமிஆ நளீமிய்யாவின் தற்போதைய பணிப்பாளர் கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரி அவர்கள் பல்கலைக்கழக மாணவராக இருக்கும் போதும், பட்டம் பெற்று வெளியேறிய பின்னரும் அவர்களுக்கு மத்தியில் மிகச் சிறந்த உறவு காணப்பட்டது,“நாம் இருவரும் அடிக்கடி சந்தித்துக் கொள்வோம் பல அறிவுசார்ந்த விடயங்களை பலபோது கலந்துரையாடியுள்ளோம்என்று 2010 ஆண்டு ஏப்ரல் மாதமளவில் கலாநிதி அவர்களுடனான ஒரு சந்திப்பின் போது குறிப்பிட்டார், பின்னர்  1972ம் ஆண்டு ஜாமிஆ நளீமிய்யாவை நிறுவுவதற்கான ஆலோசனைகளைப் பெறும் நோக்கில் பாகிஸ்தானிற்கு சென்ற ஐவர் உள்ளடங்கிய குழுவிலும் இவ்விருவரும் இடம் பிடித்திருந்தனர்.
1967களில் தான் கல்விகற்ற கலாநிலையங்களுள் ஒன்றான காலியில் அமைந்துள்ள பஹ்ஜதுல் இப்றாஹீமிய்யாவிற்கு இடைக்கிடை சென்று வருபவராகவும், மாணவர்களுக்கு தர்பிய்யா நிகழ்ச்சிகளை செய்பவராகவும், அங்கிருந்து ஆசிரியர்களை சந்தித்து கலந்துரையாடுபவர்களாகவும் காணப்படரென, குறிப்பிட்ட காலப்பகுதியில் பஹ்ஜியிலே கல்வி கற்ற மாவனல்லையைச் சேர்ந்த மொளலவி ஸாலிஹ் நத்வி அவர்கள் குறிப்பிட்டார்கள்.
தாஸீன் நத்வி அவர்களது ஆக்கங்கள், வழிகாட்டி சஞ்சிகை, உண்மை உதயம், மற்றும் சில வெளியீடுகளை பார்க்கின்ற போதும், தாஸீன் நத்வி அவர்களது சமகாலத்தவர்களுடனும் சில மாணவர்களுடனுட் உரையாடிபோதும்,அவரது  சமகாலத்தில் வாழ்ந்த இலங்கை அறிஞர்கள், ஆலிம்கள், கல்விமான் பலருடன் தொடர்பை பேணிவந்துள்ளார்கள் என்பதை அறிய முடியுமாக உள்ளது.
பேருவலையைச் சேர்ந்த அல் ஹாஜ் மர்ஹ{ம் ஹம்ஸா அவர்களுடன் உரையாடும் போது ஆரம்பத்தில் றமழான் மாதத்தில் ஜாமிஆவில், இலங்கையிலுள்ள பல ஆலிம்களை அழைத்து வந்து மாணவர்களுக்கு உபன்யாசங்களை ஏற்பாடு செய்பவராக தாஸீன் நத்வி அவர்கள்  இருந்தார்என்று குறிப்பிட்டார், இதன் மூலம் தாஸீன் நத்வி அவர்களுக்கு பல ஆலிம்களுடன் தொடர்பிருந்தனை ஊகிக்க முடியுமாக உள்ளது.
இந்தவகையில் அறிஞர் ஏ.எம்.ஏ.அஸீஸ(றஹ்);,அல்லாமா அப்துல் ஹமீத் பக்ரி(றஹ்) மஸ்ஊத் ஆலிம்(றஹ்),மௌலவி எஸ்.எஸ். இப்றாஹீம் நத்வி(றஹ்), அஜ்வத் ஆலிம் (றஹ்)  மௌலவி எம்.ஜே.எம்.றியாழ்(றஹ்),மௌலவி ஏ.ஆர்.எம். றூஹ_ல் ஹக்(றஹ்), மௌலவி ஏ.எல்.எம்.இப்றாஹீம்,மௌலவி புஹாரி (றஹ்) அப்துஸ் ஸமத் ஆலிம் (றஹ்) குருதலாவையை சேர்ந்த கவிஞர் அப்துல் காதர் லெப்பை என்று பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றது.
அதேபோல எகிப்திலே கல்வி கற்ற காலம் தாஸீன் மௌலவி அவர்களின் கல்வி வாழ்க்கையின் பொற்காலம் என்று எழில் மிகு எகிப்து நாட்டிலேஎனும் நூலை எழுவதற்காக எடுத்து வைத்திருந்த குறிப்புகளிலே குறிப்பிட்டிருந்ததாக ரஸீன் ஆசிரியர் அவர்களின் தாஸீன் மௌலவி பற்றிய நினைவுக் குறிப்புகளிலிருந்து பெற்றுக் கொள்ள முடியுமாக உள்ளது. எகிப்திலே தாஸீன் நத்வி அவர்கள் சந்தித்த அறிஞர்கள், அவர் பெற்ற அனுபவங்கள், வழிகாட்டல்கள் என்பனவே அவர் இவ்வாறு குறிப்பிட காரணமாக இருக்கலாம்.
இந்தவகையிலே, கலாநிதி பத்ரான், ஷெய்க் முஹம்மத் அல் கஸ்ஸாலி, கலாநிதி கல்லாப்,கலாநிதி அப்துல்லாஹ் வாஹித் வாபீ,கலாநிதி எம் ஷஹாதா, பேராசிரியர் அஹ்மத் ஸஹர், கலாநிதி ஏ அஹமத்,பேராசிரியர் ஏ.எச் அல் பாகூர்,முன்னால் ஷெய்ஹ{ல் அஸ்ஹர்களான கலாநிதி அப்துல் ஹலீம் மஹ்மூத்,பேராசிரியர் எம்.எச.மஃமூன்போன்றோருடன் தொடர்புகளைப் பேணிவந்தார்கள்.
அதுமட்டுமின்றி எகிப்தில் அப்போது தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப் பட்டிருந்த ஸெய்யித் குதுப்(றஹ்) அவர்களை  தனது நண்பரான ஷமீம் அஷ்ரப் அவர்களின் உதவியுடன்ஸெய்யித் குதுபின் சகோதரி ஆமினா குதுபுடன் சென்று சந்தித்தார், ஏழு நிமிடங்கள் நீடித்த இச் சந்திப்பான ஏழு யுகங்கள் போன்றிருந்ததாக பின்நாட்களில் நினைவு கூறினார் தாஸீன் நத்வி, அது மட்டுமன்றி அல் இஹ்வான் அல் முஸ்லிமூன் அமைப்பின் இஸ்தாபகர் இமாம் ஹஸனுல் பன்னா(றஹ்) அவர்களது மருமகன் ஸஈத் ரமழான்(றஹ்) அவர்களுடன் கடிதத் தொடர்பு வைத்திருந்தார்.
இவர்கள் தவிர கீழ்க் காணும் அறிஞர் பெருமக்களுடன் தாஸீன் நத்வி அவர்களுக்கு இருந்த தொடர்புகள் பற்றி சற்று அதிகமான குறிப்புக்களை பெற முடியுமாக உள்ளது.
அறிஞர் கலாநிதி ஏ.எம்.ஏ. அஸீஸ் அவர்களுடனான உறவு
அறிஞர் சித்திலெப்பைக்கும், கஷாவத்தை ஆலிம் அவர்களுக்குமிடையே தொடர்பிருந்தவாறு அறிஞர் ஏ.எம்.ஏ.அஸீஸ_க்கும் தாஸீன் நத்விக்கும் இடையே தொடர்குகள் இருந்துள்ளனஎன பேராதனைப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரான அஷ்ஷெய்க் அப்துல் பாரி அவர்கள் தனது முது தத்துவமானிபட்டப்படிப்பிற்கு 2001ம் ஆண்டு சமர்ப்பித்த இலங்கை முஸ்லிம்களின் சமூக கலாசார மறுமலர்ச்சியில் அறபு மத்ரஸாக்களின் வகிபாகம்எனும்  ஆய்வில் குறிப்பிடுகிறார்.மௌலவி தாஸீன் நத்வி அவர்களுக்கும் கலாநிதி ஏ.எம்.ஏ அஸீஸ் அவர்களுக்கும் மத்தியில் மிக நெருக்கமான புலமைத்துவ ரீதியான உறவு காணப்பட்டது என்பதனையே இக் கூற்று உணர்துகின்றது.

தாஸீன் நத்வி அவர்களது குர்ஆனே கூறாயோஎன்ற கவிதை நூலுக்கு வழங்கிய அணிந்துரையில் தாஸீன் நத்வியுடனான தனது அறிமுகத்தை ஏ.எம்.ஏ.அஸீஸ் அவர்கள் இவ்வாறு கூறுகிறார் நான் முதல் தடவையாக அல் அஸ்ஹர் பல்கலைக்கழகத்திற்கு புலமைப்பரிசில் பெற்றுச்செல்லும் மாணவர்களுக்கான பிரியாவிடை வைபவமொன்றில் மௌலவி தாஸீன் அவர்களின் ஓர் உரையைக் கேட்டேன்,அப்போது அவரது அறிவுப் புலமையைக் கண்டு வியந்தேன், பின்னர் ஒரு சில வாரங்களில் பல தடவைகள் சந்தித்துக் கொண்டோம், 1965ம் ஆண்டு கெய்ரோவில் நடைபெற்ற அல் அஸ்ஹரின் ஒரு மாநாட்டிற்கு சென்றிருந்தபோது அங்கு அவரை சந்தித்த வேளையில் அவரது ஆழமான அறிவையும், எமது சமூகத்தை பாதிக்கும் விடயங்களை மிக நுணுக்கமாக மதிப்பிடும் திறனையும், சமூகத்திற்கு சேவை செய்வதற்கு அவர் கொண்டுள்ள வேட்கைiயும் என்னால் கண்டு கொள்ள முடிந்தது,விஷேடமாக உலமாக்கள் எமது சமூகத்திற்கு என்னவகையில் உதவ வேண்டும் என்பதை அவர் சிறப்பாக எடைபோட்டு வைத்திருந்தார், அவரது நட்புமிகு தொடர்பு அல்லாஹ்வால் எனக்கு அளிக்கப்பட்ட ஒரு வரப்பிரசாதம் என நான் கருதுகிறேன்என்றும் குறிப்பிட்டிருந்தார்.
1956களில் எழுந்த மொழிப்பிரச்சனையானது இலங்கை வரலாற்றைப் புரட்டிப்போட்ட ஒரு நிகழ்வு என்று குறிப்பிட முடியும்,“ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம்என்ற புத்தகத்தில் சி.புஸ்பராஜா குறிப்பிட்டுள்ள விடயங்களை வாசிக்கும் போது மொழிப்பிரச்சனையானது இலங்கையில் எத்தகையதொரு அதிர்வலையினை ஏற்படுத்தியது என்பதை உணரமுடியுமாக உள்ளது.

இப்படியான ஒரு சந்தர்ப்பத்தில் இலங்கை முஸ்;லிம்களின் தாய் மொழி எது என்ற சர்ச்சையும் இலங்கை முஸ்லிம்களுக்கு மத்தியில் எழுந்தது. எனவே இது தொடர்பான ஒரு தெளிவை மக்களுக்கு ஏற்படுத்தவேண்டிய கடப்பாடு சமூகத்தலைமைகளுக்கு எழுந்தது,அப் பாரிய பொறுப்பை தனது தோளில் சுமந்து கொண்ட தாஸீன் நத்வி அவர்கள், மொழி தொடர்பான இஸ்லாத்தின் நிலைப்பாட்டைத் தெளிவு படுத்தும் விதமாகஒரு உரையை இரத்தினபுரியில் நிகழ்த்தினார்,இரண்டு மணித்தியாலங்கள் நீடித்த அவ்வுரையில் இஸ்லாத்தில் மொழிக்கொள்கையை மிக அழகாக தெளிவுபடுத்தினார்.

1964களில் அவ்வுரையானதுமொழி பற்றி இஸ்லாம்எனும் தலைப்பில் நூலாக வெளியானது, இப்புத்தகத்தை படித்த பின்னர் ஏ.எம்.ஏ.அஸீஸ் அவர்களுக்கும் தாஸீன் நத்வி அவர்களுக்கும் இடையிலான உறவு வலுவடைந்தது .அதன் பின்னர்இருவரும் அடிக்கடி சந்தித்து கலந்துரையாடாடுபவர்களாகவும், கருத்துக்களைப் பரிமாரிக்கொள்வர்களாகவும் காணப்பட்டனர்அத்தகைய சில சந்திப்புகளின் போது தாஸீன் நத்வியுடன் தானும் செல்வதாக என்.எம்.எம். ரஸீன் ஆசிரியர் அவர்கள் குறிப்பிடுகிறார்.
இலக்கம் 81 டான் பிலேஸ் என்ற முகவரியில் அறிஞர் ஏ.எம்.ஏ. அஸீஸ் அவர்களும் தாஸீன் நத்வி அவர்களும் அடிக்கடி சந்தித்துக்கொள்வார்கள்,இஸ்லாமிய சட்டவியல் தொடர்பான தனது பல சந்தேகங்களை அறிஞர் அஸீஸ் அவர்கள் தாஸீன் நத்வியிடம் கேட்டு தெளிவைப் பெற்றுக் கொள்ளக் கூடியவர்களாக இருந்தார்கள்.
அறிஞர் அஸீஸ் அவர்கள் தனது நூலக அறையினுள் எவரையும் அனுமதிப்பதில்லை வீட்டின் வராந்தையிலேயே விருந்தாளிகளை வரவேற்று உபசரித்து அனுப்புவார்கள்,ஆயினும் தாஸீன் நத்வி அவர்கள் சென்றால் அவர்களை அழைத்துக்கொண்டு தனது நூலக அறைக்கே செல்பவராக காணப்பட்டார்.
1964ம் ஆண்டில் அறிஞர் அஸீஸ் அவர்களும் தாஸீன் நத்வி அவர்களும் அடிக்கடி சந்தித்துக் கொண்டார்கள், ஏனெனில் தாஸீன் நத்வி அவர்களுக்கு எகிப்தின் அல்அஸ்ஹர் பல்கலைக்கழகத்தில் கற்பதற்கான புலமைப் பரிசில் கிடைத்திருந்ததனால், எகிப்தைப்பற்றி நன்கு அறிந்த அனுபவம் கொண்ட அறிஞர் அஸீஸ் அவர்களிடம் பல விடயங்களை கேட்டு அறிந்து கொள்ள ஆசைப்பட்டார். மேலும் எகிப்திலுள்ள அறிஞர் அஸீஸ் அவர்களது சில நண்பர்களுக்கு கடிதங்களையும் தாஸீன் நத்வி அவர்கள் கேட்டிருந்தார்கள்.
மறைந்த முன்னால் அமைச்சர் எம்.எச்.முஹம்மத் அவர்கள் எகிப்திற்கு புலமைப் பரிசில் பெற்றுச் செல்லும் மாணவர்களுக்கு ஒரு விருந்துபசாரத்தை தனது வீட்டில் ஏற்பாடு செய்திருந்தார், அவ்விருந்துபசாரத்தில் அறிஞர் அஸீஸ் அவர்களும் கலந்து கொண்டார்கள், விருந்துபசாரம்  முடிந்ததும் அறிஞர் அஸீஸ் அவர்கள் தாஸீன் நத்வியை அழைத்து அவர் கேட்ட கடிதங்களை வழங்கினார். அவற்று ஒரு கடிதம் அல் அஸ்ஹர் இஸ்லாமிய ஆராய்ச்சிக் கழகத்தின் பொதுச் செயலாளர் கலாநிதி ஹர்புல்லாஹ் அவர்களுக்கும் மற்றையது, எகிப்து வை.எம்.எம்.ஏ தலைவர் ஸாலிஹ் ஹர்ப் பாஷா அவர்களுக்கும் எழுதப்பட்டிருந்ததாக என்.எம்.எம். ரஸீன் ஆசிரியர் அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
உக்குவலையைச் சேர்ந்த குவைலித் ஆசிரியர் அவர்கள், அறிஞர் அஸீஸ் அவர்கள் பற்றிய தப்பான அபிப்பிராயங்கள் பரவியபோது, அவற்றை நீக்குவதற்காக அறிஞர் அஸீஸ் அவர்களுடன் பழகிய பத்துப் பேரிடம் இருந்து கட்டுரைகளை பெற்று நூலாக வெளியிட திட்டமிட்டிருந்தார், அதற்காக தாஸீன் நத்வியிடம் கோரியிருந்த கட்டுரையில் கலாநிதி ஹர்புல்லாஹ் அவர்களுக்கு அஸீஸ் எழுதிய கடிதத்தில் இவரை இந்நாட்டில் இஸ்லாமிய மறுமலர்ச்சிககுத் தொண்டு செய்பவராக காண நான் ஆசைப் படுகிறேன்என்று எழுதியிருந்ததாக தாஸீன் நத்வி அவர்கள் குறிப்பிட்டிருந்தார்.
அறிஞர் அஸீஸ் அவர்கள் தாஸீன் நத்வி அவர்களுக்கு எழுதிய பல கடிதங்கள், அறிவு சார்ந்த உரையாடல்களாகவே காணப்பட்டன, மார்க்கத்தின் பல சந்தேகங்களை, தெளிவற்ற விடயங்களை கேட்டு அறிந்துகொள்வதாக அமைந்திருந்தன, இவற்றுக்கொள்ளலாம் தாஸீன் நத்வி அவர்கள் அழகிய முறையில், அறிவு பூர்வமாக பதில்களை எழுதிவந்தார்,அறிஞர் அஸீஸ் அவர்கள் வாஜிப் மற்றும் பர்ளு தொடர்பாக வினவிய கடிதத்திற்கு பதிளளித்த தாஸீன் நத்வி அவர்கள் மேலதிக தெளிவிற்கு  தனது ஆசிரியர் அறிஞர் உமர் ஹஸரத் அவர்களின் நற்பய நந்நூலின்சில பக்கங்களை வாசி;க்குமாறு வேண்டிக் கொண்டார்கள் அவ்வாசங்கள் வருமாறுசுநபயசனiபெ றுயதiடி’pடநயளந ளநந ழஎநசடநயக வயமநn கசழஅ pயபந 11-21 யனெ 22 ழக  யேவியலய யெnழௌடடில ஆழரடயஎi ருஅநச
எனவே தாஸீன் நத்வி அவர்கள் உலக அறிஞர்களோடு கொண்டிருந்த தொடர்புக்கடிங்களுடன் அறிஞர் அஸீஸ் அவர்களின் கடிதங்களை நான் வைத்துள்ளேன் என்றும் குறித்த கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார்.

மௌhனா அபுல் ஹஸன் அலி நத்வி
மௌலானா அபுல் ஹஸன் அலி அந்நதவி அவர்கள் இந்த மார்க்த்தை புனர்நிர்மானம் செய்வதற்கும்,இவ் உம்மத்திற்கு நம்பிக்கையூட்டுவதற்கும், இந்த உம்மத்தின் பணியை நிறைவேற்றுவதற்காக எழுச்சியை ஏற்படுத்துவதற்காகவும் அல்லாஹ்வால் அனுப்பப்படும் தனித்துவமான மனிதர்களுள் ஒருவராக இருந்தார்என்று குறிப்பிடுகிறார் அல்லாமா யூஸ{ப் அல் கர்ளாவி அவர்கள்.
சுமார் 700ற்கு மேற்பட்ட தலைப்புகளில் மௌலானா அபுல் ஹஸன் அலி நத்வி அவர்கள் சிறிய பெரிய அளவிலான புத்தகங்களை எழுதியுள்ளார், அற்றுள் 177 புத்தகங்கள் அறபு மொழியில் எழுதப்பட்டவையாகும்.  இம்மாமேதை தாஸீன் நத்வி அவர்களது ஆசிரியாரவர், தாஸீன் நத்வி அவர்களது அறிவும் பண்பாடுகளும் அபுல் ஹஸன் அலி அந்நத்வி அவர்களை மிகவும் கவர்ந்தன, ஆகவே ஆசிரியர் மாணவர் எனும் தொடர்பையும் தாண்டி ஒரு நெருக்கமான தொடர்பு இருவருக்கும் மத்தியில் காணப்பட்;டது.
தாஸீன் நத்வி அவர்கள் மரணித்தபோது,மௌhனா அபுல் ஹஸன் அலி நத்விஅவர்கள் அனுப்பிவைத்த  அனுதாபச் செய்தியை 1977ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியான ஜூம்ஆ இதழின் அறிஞர் தாஸீன் நினைவு மலரில் கீழ்வருமாறு பிரசுரமாகி உள்ளது மௌலவி தாஸீன் அவர்களின் மறைவு என்னை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவரது மறைவால் இங்குள்ள அவரது போதனாசிரியர்கள் மிகவும் கவலை கொண்டுள்ளனர். எனது மாணவனாக மட்டுமல்ல எனது நெருங்கிய நண்பனராக இருந்த மௌலவி தாஸீன் (நத்வி)  இறைவனுக்கு அஞ்சிய மிகவும் எளிய வாழ்க்கையை வாழ்ந்தார் என்பதை நான் நன்கு அறிவேன், இலங்கையில் அவர் ஆற்றிய இஸ்லாமியப் பணியை இங்குள்ள அனைவருமே அறிவார்கள். அவரது இழப்பு மிகவும் துரதிஷ்டம் மிக்க சம்பவமாகும்.
எனது மிகவும் நெருங்கிய நண்பரான மௌலவி தாஸீனின் மறைவிற்காக இங்குள்ள அவரது போதனாசிரியர்களினதும், எனதும் அனுதாபத்தைத் தெரிவிப்பதோடு அவரது குடும்பத்தினருக்கும் இதனை எத்திவைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். இறைவன் அவருக்கு மறு உலகத்தில் எல்லா சௌபாக்கியங்களையும் அருளப் பிரார்த்திக்கிறேன்.
லக்னோவிருந்து திரும்பிய பின்னர் மௌலான அபுல் ஹஸன் அலி அந் நதவி அவர்களுடனான உறவை தாஸீன் நத்வி அவர்கள் துண்டித்துக் கொள்ளவில்லை, இருவருக்கும் இடையில் தொடரந்தும் கடிதத் தொடர்பு இருந்து வந்தது, அடிக்கடி தாஸீன் நத்வி அவர்கள் தனது ஆசிரியர் அபுல் ஹஸன் அலி அந் நதவி அவர்களை நினைவு கூறுபவராகவே காணப்பட்டார், தனது சொற்பொழிவுகளிலும், உரையடல்களிலும், அவரை மேற்கோள் காட்டுபவராக இருந்தார்.
தற்போது ஜனநாயக இடதுசாரி முன்னணி கட்சியின் தலைவரான மாவனல்லையைச் சேர்ந்த மரிக்கார் அவர்கள் தாஸீன் நத்வியுடனான தனது நினைவுகளை மீட்டும் போது, மரிக்கார் அவர்களுக்கு இஸ்லாம் தொடர்பாக காணப்பட்ட சந்தேகங்களையும், கம்யூனிஷம் மற்றும் இஸ்லாத்தின் நிலைப்பாடு தொடர்பான பல விடயங்களையும் தாஸீன் நத்வி தெளிவு படுத்துபவராக இருந்ததாகவும், வழிகெட்ட கொள்கைகள், இந்து மத சித்தாந்தகளை மௌலான அபுல் ஹஸன் அலி அந் நதவியை மேற்கோள் காட்டி தெளிவு படுத்துபவராகவும் இருந்ததாக குறிப்பிடுகிறார்.
நெருக்கமான உறவையும் நன் மதிப்பையும் கண்ணித்திற்குமுறிய தனது ஆசிரியரை தாஸீன் நத்வி அவர்கள் 1975ம் ஆண்டு மீண்டும் லக்னோ சென்று சந்தித்தார், அவர்களுடன் மூன்று நாட்கள் தங்கினார், தனது ஆசானின் முதிர்ந்த தோற்றமும் அறிவு முதிர்ச்சியும் தாஸீன் நத்வி அவர்களை கவர்ந்தது,அந்த சந்திப்பின் பின்னர் இன்னும் அதிகமான நாட்;கள் ஆசிரியருடன் கழிக்க வேண்டும் என்ற ஆசையில் 1977ல் றமழானில் லக்னோவந்து தங்குவதாகக் கூறி விடை பெற்று வந்தார், எனினும் 1976ல் றமழானில்  தாஸீன் நத்வி அவர்கள் நோயுற்றதனால் 1978 லக்னோ செல்வோம் என தீர்மாணித்து பயணத்தை தள்ளிப்போட்டார், எனினும் அல்லாஹ்வின் நாட்டம்  அவ்வாறு இருக்கவில்லை, 1977ம் ஆண்டு தாஸீன் நத்வி அவர்களை இறைவன் தன்பக்கம் அழைத்துக் கொண்டாரன்.


மௌலான அபுல் அஃலா மௌதூதி
கடந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த சிந்தனையாளராக, இஸ்லாமிய செயற்பாட்டாளராகக் கருதப்படுபவர் மௌலானா அபுல் அஃலா மௌதூதி அவர்கள். அவர்களைப் பற்றி கலாநிதி யூஸ{ப் அல் கரளாவி அவர்கள் நழராதுன் பீ பிக்ரில் இமாம் மௌதூதிஎன்ற புத்தகத்தில்  இவ்வாறு குறிப்பிடுகின்றார்கள்“1979 செப்டெம்பர் மாதம் இஸ்லாமிய உலகு ஒரு தனித்துவமான சர்வதேச இஸ்லாமிய சிந்தனையாளரை இழந்தது, அவரைப் போன்றவர்கள் சமூகங்களில் அரிதாகவே தோன்றுவர்,அவர்தான் இந்தியத் துணைக்கண்டத்தில் ஜமாஅதே இஸ்லாமியை தோற்றுவித்த உஸ்தாத் அபுல் அஃலா மௌதூதி அவர்கள்,பல நூல்களுக்கு சொந்தக்காரர், பல மொழிகளுக்கும் மொழிபெயர்கக்கப்பட்ட அவரது நூல்கள் உலகின் பல பாகங்களிலும் ஒளிக்கதிர் போல பரவியது. கிழக்கிலும் மேற்கிலும் பல மில்லியன் முஸ்லிம்களும், இஸ்லாமிய இயக்க ஊழியர்களும் அவற்றின் மூலம் பயன் பெற்றனர்.
இஸ்லாத்pற்குள்ளிருந்தே முரண்படுவரர்களுக்கும், இஸ்லாத்திற்கு வெளியிலிருக்கும் எதிரிகளுடனான போராட்டத்திலும் அவை அவர்களுடைய ஆயுங்களக பயன்படுத்தப்பட்டன. மேலும் அவை இஸ்லாமிய இயக்கப்பாதையில் வழிகாட்டும் ஒளிவிளக்குகளாகக் காணப்பட்டன
இம்மாபெரும் அறிஞருடனும் தாஸீன் நத்வி அவர்களுக்கு நெருக்கமான தொடர்புகள் காணப்பட்டன. அவர்களது கருத்துக்களால் மிவும் கவரப்பட்டவராகவும் இருந்நதார், இது தொடர்பாக தாஸீன் நத்வி அவர்கள் தனது பாகிஸ்தானில் பதினான்கு நாட்கள் என்ற புத்தகத்தில் (இந்நூல் பிரசுரிக்கப்படவில்லை எனினும் தொடராக மீள்பார்வை பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டது)இலங்கை முஸ்லிம் வாசகர்களுக்கு நன்கு அறிமுகமான மௌலானா மௌதூதி இன்றைய இஸ்லாமிய உலகின் தலைசிறந்த அறிஞராக திகழ்பவர். இவரது கட்டுரைகள் எமது நாட்டுப் பத்திரிகைகளில் அடிக்கடி தமிழ் மொழியில் மொழிபெயர்த்து பிரசுரிக்கப்பட்டுள்ளன. ஏறக்குறைய ஐம்பது புத்கங்களின் ஆசிரியரான மௌலானாவின் கருத்துக்களை நான் ரசித்துப் படித்ததுண்டு.
1954ஆம் ஆண்டளவில் லக்னோவில் உள்ள நத்வதுல் உலமா அறபுக் கலாசாலையில் நான் படித்துக் கொண்டிருந்தேன். அக்காலை மௌலானாவின் உர்துக் கட்டுரைகளையும், புத்தகங்களையும் படிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. மௌலானா இஸ்லாமிக் கருத்துக்களை தத்துவ ரீதியில் ஆராய்ந்தாலும் மற்றவர்களுக்கு புரியும் வண்ணம் அக்கருத்துக்கள் இருந்தன. இஸ்லாம் பற்றிய மௌலானாவின் கருத்துக்களில் நான் என்றும் மதிப்பும், மரியாதையும் வைத்துள்ளேன். மௌலானாவின் நவீன இஸ்லாமியக் கருத்துக்களில் இருந்து நான் என்றும் வேறுபட்டவனல்ல.
அவரது கருத்துக்களால் கவரப்பட்ட நான் இலங்கைக்குத் திரும்பியதும் அப்பொழுது ஆ.யு.ஊ.யு.ஜெயிலானி (அருள் ஜோதி ஆசிரியர்) அவர்களின் தலைமையில் இருந்த இலங்கை ஜமாஅதே இஸ்லாமியோடு தொடர்பு கொண்டு அதன் அங்கத்தவர்களில் ஒருவரானேன். பின்னர் இலங்கை ஜமாஅதே இஸ்லாமியின் தலைவராகவும் கடமையாற்றினேன். அக்காலை இயக்கத்தின் தலைவர் என்ற முறையில் அவ்வியக்கத்தின் ஸ்தாபகரான மௌலானாவைப் பற்றியும் அவரது நூல்களைப் பற்றியும் நன்கு அறிந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டது. பெரும்பாலும் மௌலானாவின் எல்லா நூல்களையும் மூல மொழியிலேயே படித்துள்ளேன்.
இன்று நான் இலங்கை ஜமாஅதே இஸ்லாமியில் அங்கம் வகிக்காவிட்டாலும் மௌலானாவின் கருத்துக்களின் அடிப்படையில்தான் எனது பேச்சுக்களும் எழுத்துக்களும் இருக்கின்றன என்பதை இங்கு நான் பெருமையோடு கூறிக் கொள்ள முடியும். ஏனெனில் ஓர்இயக்கத்திற்காக,ஓர் இயக்கத்தைச் சேர்ந்தவன் என்பதற்காக நான் மௌலானாவையும் மௌலானாவின் கருத்துக்களையும் விரும்பவில்லை. மௌலனாவின் கருத்துக்களில் இஸ்லாம் மிளிர்ந்தது, இஸ்லாமிய வாழ்க்கை இருந்தது, இலட்சியம் இருந்தது, எனவே எனது எழுத்துக்கும் பேச்சுக்கும் முன்னோடியான மௌலானாவை நான் சந்தித்து பேச விரும்பியதில் ஆச்சரியமில்லை
மேலும் மௌலானாவின் பல கருத்துக்களுடன் தாஸீன் நத்வி அவர்களுக்கு உடன்பாடு காணப்பட்ட அதே வேலை, மறுபட்ட கருத்து கொண்ட விடயங்களில் தனது கருத்துக்களை முன்வைக்கவும் அவை தொடர்பாக கலந்துரையாடவும் தயங்கவில்லை, இதற்கு ஒரு சிறந்த உதாரணம்தான் மௌலானா மௌதூதி அவர்கள் பெண்கள் தமது முகத்தை மறைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் காணப்பட்டார், எனினும் தாஸீன் நத்வி அவர்கள் அதற்கு மாற்றமான நிலைப்பாட்டில் காணப்பட்டார், எனவே இருவரும் கடிதம் மூலமாக தமது நிலைப்பாட்டை முன்வைத்து நீண்ட கலந்துரையாடலொன்றை நிகழ்த்தினர், அவ்வாறாக மௌலானா மொதூதி அவர்கள் தாஸீன் நத்வி அவர்களுக்கு அனுப்பிய ஒரு கடிதத்தை பார்க்கக் கிடைத்தது,டீ5 அளவானஅபுல் அஃலா மௌதூதிஎன பெயரிடப்பட்டு, முகவரியிடப்பட்ட ஒரு லெடர் ஹெட்டில், பெண்களின் ஆடை வரையரைகள் யாவை என்பதனை விளக்குவதாக அக் கடிதம் காணப்பட்டது.
மௌலானா ஷாஹ் அஹ்மத் நூரானி
மௌலானா ஷாஹ் அஹ்மத் நூரானி அவர்கள் 1926ம் ஆண்டு ஒக்டோபர் 1ம் திகதி பிறந்தார்கள், இவரது தந்தை மௌலானா முஹம்மத் அப்துல் அலீம் அஸ்ஸித்தீகி அவர்கள் ஒரு பிரபல்யமன தாஈ ஆவார், மொளானா நூரானி அவர்கள் அல்லாஹ் பாத் பல்கலைக்கழகத்தில் அறபு மொழியில் கலைமானிப்பட்டத்தைப் பெற்றுக்கொண்டார்,பின்னர் இந்தியாவின் மைரூத் நகரில் அமைந்துள்ள தாருல் உலூம் கலாபீடத்தில் பிக்ஹ_த்துறையில் சிறப்புத் தேர்ச்சி பெற்றார். பாகிஸ்தான் ஜம்இய்யதுல் உலமா கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி தேர்தலில் போட்டியிட்டு 1970ம் ஆண்டு பாக்கிஸ்தான் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவானார்.
மௌலானா நூரானி அவர்களுடனான தொடர்பு பற்றி தாஸீன் நத்வி அவர்கள் இவ்வாறு குறிப்பிடுகிறார்மௌலானா  அவர்கள் இலங்கை முஸ்லிம்களுக்குப் பழக்கப் பட்டவர். .இலங்கைக்கு விஜயம் செய்து இலங்கையின் பல பாகங்களிலும் உரையாற்றியவர். தனது அரிய இஸ்லாமியக் கருத்துக்களை இலங்கை இஸ்லாமியர் மத்தியில் விட்டுச் சென்றவர்.அத்தோடு எனது அன்புக்குரியவரும் கூட.
இலங்கைத்தீவெங்கும் அவர் உர்து மொழியில் ஆற்றிய உரைகளை நான் மொழிபெயர்த்தவன் என்பதால் மௌலானா அவர்கள் எனது சிறந்த நண்பராகவும் இருந்தார்”.
மௌலானா ஹலீல் அஹ்மத் ஹாமிதி
மௌலானா ஹலீல் அஹ்மத் ஹாமிதி அவர்கள் 1929-06-23 ம் திகதி இந்தியாவின் பைரூஸ்பூரில் ஹாமித் என்ற கிராமத்தில் பிறந்து 1994ம் ஆண்டு மரணித்தார்கள், 1945 ம் ஆண்டு அல் மத்ரஸா அல் அஃழமிய்யாவில் கற்று வெளியேறினார்,1955ம் ஆண்டு ஜமாஅதே இஸ்லாமியின் அறபு மொழிப் பிரிவின் உப தலைவராக தெரிவு செய்யப்பட்டார், பின்னர் தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.
அறபிலிருந்து உருதிற்கும் உருதிலிந்து அறபிற்கும் பல நூல்களை மொழி பெயர்த்ததோடு, பல சொந்த ஆக்கங்களையும் படைத்துள்ளார்,அல் இமாம் மௌதூதி, இஸ்லாத்திற்கு எதிரான நவீன கால சவால்களை எதிர்கொள்வது எவ்வாறு, நவீன காலத்தில் இஸ்லாமிய ஷரீஆவை நடைமுறைப்படுத்தல், அல் குர்ஆனை புரிந்து கொள்வதற்கான அடிப்படை விதிகள் போன்றன அவரது சில படைப்புகளாகும்.
இம்மாபெரும் அறிஞருடனும் தாஸீன் நத்வி அவர்களுக்கு தொடர்பு காணப்பட்டது,இது பற்றி தாஸீன் நத்வி அவர்கள் பாகிஸ்தானில் பதினான்கு நாட்கள்என்ற ஆக்கத்தில் இவ்வாறு கூறுகிறார்“…அப்போது மௌலானாவுடன் ஜமாஅதே இஸ்லாமியின் தற்போதைய தலைவர் துபைல் அஹ்மத் அவர்களும், அறபு பகுதித் தலைவரான ஹலீல் ஹாமிதி அவர்களும் அங்கு இருந்தனர். ஹலீல் அவர்களோடு எனக்கு ஏற்கனவே எழுத்து மூல தொடர்பு இருந்தது. என்னை இனங்கண்டு கொண்ட ஹலீல் ஹாமிதி அவர்கள் மிகவும் மகிழ்ச்சியோடு என்னைப் பற்றி விசாரிக்கத் தொடங்கினார்என குறிப்பிட்டுள்ளார்.
தாஸீன் நத்வி அவர்களுக்கு உலகின் பல பாகங்களிலும் உள்ள பல அறிஞர்களுடன் தொடர்பு இருந்திருக்க வேண்டும் என்பதை இவற்றின் மூலம் அறிய முடிகிறது, எனினும் அதுபற்றிய குறிப்புக்கள், ஆவணங்கள், கடிதங்களை பெற்றுக் கொள்ளவதில் சிரமம் உள்ளது. அவற்றை பெற்றுக் கொள்ள முடியுமாக இருந்தால் தாஸீன் நத்வியின் கருத்துகள், சிந்தனைகள் பற்றிய நுனுக்கமான ஆய்வுகளை மேற்கொள்ள முடியுமாக இருக்கும்.

உசாத்துணைகள்
1.            N.ஆ.ஆ. ரஸீன் ஆசிரியர் -  பலகத்துறை நீர்கொழும்பு (பைனாஸ் கொமியுனிகேஷன் - உயர் நீதிமன்றவீதி கொழும்பு எனும் முகவரியில் இவருடனான சந்திப்பு நிகழ்ந்தது)
2.            மர்ஹ{ம் அல் ஹாஜ் ஹம்ஸா சீனன் கோட்டை பேருவலை
3.            ஜனாப் ஆ.து.ஆ;.ஜுனைத் -ஓய்வு பெற்ற அதிபர் - மஹவத்தை மாவனல்லை
4.            மௌலவி ஸாலிஹ் நத்வி மஹவத்தை, மாவனல்லை
5.            மரிக்கார்- ஹிங்குல மாவனல்லை.
6.            பாகிஸ்தானில் பதினான்கு நாட்கள் -  யூ.எம்.தாஸீன் நத்வி
7.            குர்ஆனே கூறாயோ? – யூ.எம். தாஸீன் நத்வி (பிரசுரிக்கப்படாத பிரதி)
8.            ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம் - சி. புஸ்பராஜா
9.            இலங்கை முஸ்லிம்களின் சமூக கலாசார மறுமலர்ச்சியில் அறபு மத்ரஸாக்களின் வகிபாகம் - அஷ் ஷெய்க் அப்துல் பாரி (பிரசுரிக்ப்படாத பிரதி)
10.          ஜும்ஆ தாஸீன் நத்வி நினைவு மலர் 1977 ஆகஸ்ட்
11.          நழ்ராதுன் பீ பிக்ரில் இமாம் அல் மவ்தூதி கலாநிதி அல்லாமா யூஸ{ப் அல் கரழாவி
12.          றறற.iமாறயறெமைi.உழஅ
13.          hவவிள:ஃஃயச.றமைipநனயை.ழசபஃறமைi



No comments:

Post a Comment

குத்ஸே....!

  குத்ஸே....! அறபு மூலம்: Nizar Qabbani தமிழில்: M.G.Mohammed Insaf என் கண்ணீர்த் துளிகள் வற்றிப் போகும் வரை அழுது தீர்த்தேன். மெழுகாய் ...