மௌலவி புஹாரி அவர்கள்
அலியார் முஹம்மது காஸிம், சுலைஹா தம்பதினரின் மகனாக 1930.11. 29ம் திகதி பிறந்தார்கள், தனது பத்து வயதிலேயே தந்தையை இழந்த மௌலவி புஹாரி அவர்களுக்கு
இரண்டு சகோதரர்களும் இரண்டு சகோதரிகளும் காணப்பட்டனர்.
அப்துல் கபூர் ஆலிம்
அவர்களின் தூண்டுதலாலும், முயற்சியாலும் தனது மூத்த சகோதரியின் கணவரின் பண உதவியாலும் இந்தியாவிற்கு கல்வி
கற்பதற்காக சென்றார், இந்தியாவின் தமிழ் நாட்டில் அமைந்துள்ள மன்பஉல் அன்வார் அரபுக்கல்லூரி, மற்றும் லக்னோவில் அமைந்துள்ள நத்வதுல் உலமா போன்ற கலாசாலைகளிலும், இலங்கையில் புத்தளத்தில் அமைந்துள்ள காஸிமிய்யா அறபுக்
கல்லூரியிலும், அறபு மொழி, இஸ்லாமியக் கலைகள், உருது மொழி என்வற்றைக் கற்றார், அத்தோடு 1971ம் ஆண்டு கராச்சியில் அமைந்துல்ல தாருல் ஹதீஸிலும் ஜாமிஅதுல்
உலூம் அல் இஸ்லாமிய்யாவிலும் கற்றார்.
ஜாமிஆ நளீமிய்யாவில்
சேவையாற்றும் காலப்பகுதியில் எகிப்தின் அல் அஸ்ஹர் பல்கலைக்கழகம் சென்று சிறப்புறக்
கற்றார்.
சேவைகள்
மௌலவி புஹாரி அவர்கள்
1959ம் ஆண்டு ஆசிரியர் நியமனம் பெற்றது முதல் 14 வருடங்கள் புத்தளத்தில்
சேவையாற்றினார்.
1959.09.01 முதல் 1970.08.31 வரை ஸாஹிரிராக் கல்லூரி
1970.09.01 முதல் 1973. 06.12 வரை பாத்திமர்க் கல்லூரி
1973.06.13 முதல் 1973.10.31 வரை ஸாஹிராக் கல்லூரியிலும் கடமையாற்றினார்
இது தவிர அல் மத்ரஸா
அல் இப்திதாஇய்யாவில் பகுதிநேர ஆசிரியராகவும், புத்தளம் மஸ்ஜிதுத் தக்வாவில்
பேஷ் இமாமாக 1967 முதல் 1973 வரை சேவை செய்தார், இதே காலப்பகுதியில் முஹிதீன் மஸ்ஜிதின் கதீபாகவும் சேவை செய்தார்
.
இஸ்லாமிய அழைப்புப் பணியில்
மிக மும்முரமாக ஈடுபட்டார்கள், புத்தளம் பகுதியில் ஜமாஅதே இஸ்லாமியின் செயற்பாடுகளையும் முன்னின்று மேற்கொண்டார், அத்தோடு இவரது மிகப் பிரதான தஃவா வழிமுறையாக, கற்பித்தரும், தனிமனித உருவாக்கமுமே காணப்பட்டது.
எழுத்துப்பணி
இந்தியாவின் 'ரஹ்மத்' மாத இதழில் 'மண்ணறையின் மர்மங்கள்' என்ற தலைப்பில் தொடர் கட்டுரைகளை எழுதி வந்தார், இக்கட்டுரைகளை தொகுத்து நூலுருப்படுத்த விரும்பிய போதும் அதற்காக வைத்திருந்த பணத்தைக்
கொண்டு 1966ம் ஆண்டு ஹஜ் கடமையை நிறைவேற்றச் சென்றார்.
ஜாமிஆ நளீமிய்யாவில்
1973ம் ஆண்டு ஜாமிஆ நளீமிய்யா உருவாக்கப்பட்ட போது, அதன் முதல் அதிபரும் தனது நண்பருமான மௌலவி தாஸீன் நத்வி அவர்களின் வேண்டுகோளையும், நளீம் ஹாஜியார் அவர்களது உருக்கமான அழைப்பையும் ஏற்று, தான் ஓய்வு பெற சில வருடங்களே இருந்த நிலையில் ஆசிரியர்
சேவையை விட்டு விட்டு நளீமிய்யாவில் இணைந்து கொண்டார்.
ஆரம்ப காலத்தில் போதிய
போதனாசிரியர்கள் நளீமிய்யாவில் காணப்படவில்லை இக் குறையை நீக்க பெரிதும் பாடுபட்டார், சிலபோது ஒரே நேரத்தில் இரு வகுப்புகளுக்கும் போதனை நிகழத்தினார்
.
மாணவர்களுடைய கல்வி, பண்பாட்டு விடயங்களை கவனித்து அவற்றை சிறப்பாக வளர்த்தெடுக்க
பெரிதும் பாடுபட்டதாக நளீமிய்யாவின் ஆரம்பகால மாணவர்கள் இன்றும் நினைவு கூறுகின்றனர்.
ஜாமிஆ நளீமிய்யாவின்
பிரதி அதிபராகவும், பின்னர் கல்வித்துறைப் பொறுப்பாளராகவும் சேவையாற்றிய மௌலவி புஹாரி அவர்கள், நளீமிய்யாவின் அதிபர்களுக்கு நிர்வாக வேலைகளிலும், ஏனைய பணிகளிலும் பெரிதும் துணைநின்றார்.
இறுதிக் காலத்தில் நான்கு வருடங்கள் பாரிசவாத நோயினால் பாதிக்கப்பட்டிருந்த
போதும் தொழுகையை உரிய நேரத்தில் நிறைவேற்றக் கூடியவராக காணப்பட்டார். இறுதியாக 2008ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25ம் திகதி இவ்வுலகைவிட்டு பிரிந்தார்.
அல்லாஹ் அன்னாரது பணிகளை
ஏற்று உயர்தரமான ஜன்துல் பிர்தவ்ஸை வழங்குவானாக.