இஸ்லாம் கற்றுத்தரும் உரையாடல் ஒழுங்கள்
எல்லாப்புகலும் அகிலங்களின் இரட்சகன் அல்லாஹ்விற்கே சொந்தம், ஸலாத்தும் ஸலாமும் இறுதித் தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மீதும் அவர்களது குடும்பத்தினர் தோழர்கள் மற்றும் மறுமை வரை அவர்களைப்பின்பற்றும் அனைவர்மீதும் உண்டாவதாக.
நாளாந்த வாழ்க்கையில் பலருடன் தொடர்பு படுகின்ற, ஒன்றித்துப் பழகுகின்ற அல்லாஹ்வின் மார்க்கத்தை முன்வைக்கின்றவர்கள் என்ற வகையில் அல்லாஹ்விற்கு அஞ்சி நடக்கும் ஒரு முத்தகீ யின் உரையாடலும் பேச்சுவார்தைகளும் எவ்வாறு அமையவேண்டும் அதன் ஒழுங்குகள் வரையரைகள் சட்;;டங்கள் யாவை என்பன போன்ற விடயங்களை அறிந்து கொள்வது மிகவும் அவசியமாகும்.
அல்குர்ஆனிலும் ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுடைய ஸுன்னாவிலும் ஸஹாபாக்கள் ஸலபுஸ்ஸாலிஹின்களின் வாழ்விலும் இதற்கான பல வழிகாட்டல்கள் காணப்படுகின்றன. இஸ்லாமிய அறிஞர்கள் ஒரு முஃமினின் உரையாடல் எவ்வாறு அமைய வேண்டும் அதன் ஒழுங்குகள் வரையரைகள் எவை என்பது பற்றி மிகவும் விரிவாகவும் ஆழமாவும் எழுதியுள்ளனர்.
ஏனெனில் மனிதனது நாவு, அவனது பேச்சு வார்த்தைகள் நல்லவையாக அமைகின்ற போது அவனுடைய வாழ்க்கை சீர் பெறுகின்றது. அவனது வார்த்தைகள் மோசமாக அமைகின் போது மார்க்க வரையரைகளை மீறியதாக அமைகின்ற போது அவனது இம்மை மறுமை வாழ்வு பாழ்ப்பட்டு போகிறது.
எனவே அல்குர்ஆனும், இறை தூதர் ஸல்லல்லாஹ} அலைஹிவஸல்லம் அவர்களும் ஒரு அடியானின் இறைவனுக்கு அஞ்சி வாழுகின்ற மனிதனது உரையாடல் எவ்வாறு அமைய வேண்டும் என்பதற்கான வழிகாட்டல்களை வழங்கியுள்ளனர்.
அல்லாஹ}த்தஆலா தனது தூதருக்கு பிற கொள்கைகள் மதங்களை பின்பற்றுவோரோடு எவ்வாறு உரையாட வேண்டும், எவ்வாறு பதிலலி;க வேண்டும் என்பவற்றை கற்றுக் கொடுக்கிறான்.
'தன்னுடைய (ஆரம்பப்)படைப்பை மறந்த நிலையில் நமக்கு அவன் ஓர் உதாரணமும் காட்டுகிறான். எறும்புகளை அவை மக்கிப் போன பின் யார் உயிர்ப்பிப்பது? என்று கேட்கிறான் (நபியே) நீர் கூறுவீராக முதன்முறையாக உண்டாக்கினானே அவஆன அவறறற்றை உயிர்ப்பிப்பான். அவன் ஒவ்வொரு படைப்பைப் பற்றியும் நன்கறிந்தவன்.' (சூறா யாஸீன் : 78,79)
மேலும் ரஸுல் ஸல்லல்லாஹ} அலைஹிவஸல்லம் அவர்களும் ரோம பாரசீகர்களோடு இறை நிராகரிப்பாளர்களோடும் தனது தோழர்களோடும் அழகிய முறையில் உரையாடிய பல சந்தர்ப்பங்களை அன்னாரது ஸீராவின் ஊடாக கண்டு கொள்ளலாம்.
ஒரு முறை ஒரு இளைஞன் ரஸுல் ஸல்லல்லாஹ} அலைஹிவஸல்லம் அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் துதரே எனக்கு விபச்சாரம் செய்ய அனுமதி தாருங்கள் என்று கேட்டார். அப்போது அங்கிருந்த தோழர்கள் அந்த இளைஞனை ரஸுல் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை நெருங்க விடாது தடுத்தனர். அப்பொது ரஸுல் ஸல்லல்லாஹ} அலைஹிவஸல்லம் அவர்கள் அவ் விளைஞனை தனக்கு அருகில் அழைத்து அமரச் செய்து இந்த செயலை உனது தாய் செய்வதை விரும்புகிறாயா? ஏனக் கேட்டார். அப்போது அந்த இளைஞன் அல்லாஹ் என்னை உங்களுக்கு அர்பணமாக்கட்டும். அல்லாஹ் மீது ஆணையாக அதனை விரும்ப மாட்டேன் எனக் கூறினார். மேலும் மனிதர்கள் தங்களது தாய்மார்களுக்கு இதனை விரும்ப மாட்டார்கள். எனக் கூறினார்.இந்த செயலை உனது மகள் செய்வதை விரும்புகிறாயா? எனக் கேட்டார். அப்போது அந்த இளைஞன் அல்லாஹ் என்னை உங்களுக்கு அர்பணமாக்கட்டும.; எந்தமனிதரும் தங்களது மகள்மார்களுக்கு இதனை விரும்ப மாட்டார்கள். எனக் கூறினார். பின்னர் உனது தந்தையின் சகோதரிகளுக்கு இதனை விரும்புகிறாயா? எனக் கேட்டார். அப்போது அந்த இளைஞன் அல்லாஹ் என்னை உங்களுக்கு அர்பணமாக்கட்டும.; எந்தமனிதரும் தங்களது மாமிமாருக்கு இதனை விரும்ப மாட்டார்கள். எனக் கூறினார். பின்னர் உனது தாயின் சகோதரிகளுக்கு இதனை விரும்புகிறாயா? எனக் கேட்டார். அப்போது அந்த இளைஞான் அல்லாஹ் என்னை உங்களுக்கு அர்பணமாக்கட்டும.; எந்த மனிதரும் இதனை விரும்ப மாட்டார்கள். எனக் கூறினார்.பின்னர் ரஸுல் ஸல்லல்லாஹ} அலைஹிவஸல்லம்; அவர்கள் தங்களது கரத்தை அவனுடைய கற்பைப் பாதுகாப்பாயாக எனப் பிரார்திதிதார்கள். அதன் பின்னர் அவ்வளைஞன் தனது வாழ்நாளில் இத்தகைய செயல்களை திரும்பிக் கூட பார்க்கவில்லை.
எனவே ரஸுல் ஸல்லல்லாஹ} அலைஹிவஸல்லம் அவர்கள் அழகிய முறையில் உரையாடி அந்த இளைஞனின் உள்ளத்தை விட்டு மோசமான எண்ணத்தை தூரமாக்கி நல்ல பண்பாடுகளை விதைத்ததை கண்டுகொள்ளலாம். இவ்வாறு ஏராழமான உதாரணங்களை ரஸுல் ஸல்லல்லாஹ} அலைஹிவஸல்லம் அவர்களின் வாழ்வில் கண்டு கொள்ளலாம். அதே போன்று ரஸுல் ஸல்லல்லாஹ} அலைஹிவஸல்லம் அவர்களின் மரணத்திற்கு பின்பு அவர்களின் தோழர்களின் வாழ்விலும் அழகிய உரையாடலுக்கான உதாரணங்களை காணலாம்.
இத்தகைய அல்குர்ஆன் , அஸ்ஸ}ன்னா மற்றும் ஸஹாபாக்களின் வாழ்வில் இருந்து ஒரு சிறந்த முத்தக்கீயின் உரையாடல் எவ்வாறு அமைய வேண்டும். அதற்கான ஒழுங்குகள், பண்பாடுகள் நிபந்தனைகள் என்பாவற்றை இஸ்லாமிய அறிஞர்கள் பட்டியல் படுத்துகின்றனர். அவை கீழ் வருமாறு:
1. தூய்மையான எண்ணம்
அதாவது எங்களுடைய உரையாடலின் மூலம் அல்லாஹ்வின் திருப்தியை பெற்றுக் கொள்ள வேண்டும்.அவனை நெருங்க வேண்டும். எம்மை பொருந்திக் கொள்ள வேண்டும். என்ற நிய்யத்துடன் உரையாட வேண்டும்.
عن أمير المؤمنين عمر بن الخطاب رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال 'إنما الأعمال بالنيات وإنما لكل إمرء ما نوى فمن كانت هجرته لله ولرسوله فهجرته لله ورسوله ومن كانت هجرته لدنيا يصيبها أو إمرئة ينكحها فهجرته إلى ما هاجر إليه'
'நிச்சயமாக செயல்கள் அனைத்தும் எண்ணங்களை பொறுத்தே அமையும்.மேலும் ஒவ்வொரு மனிதரும் உள்ளத்தில் எண்ணுவதற்கான கூலியையே பெற்றுக்கொள்வார்கள். மேலும் ஒவ்வொரு மனிதரும் உள்ளத்தில் எண்ணுவதற்கான கூலிiயையே பெற்றுக்கொள்வார்கள்.
இத்தகைய உரையாடல்களின் போது எண்ணம் தூய்மையாக இருக்க வேண்டும். என்பதற்கு ஆதாரமாக கீழ் வரும் அல்குர்ஆன் வசனம் ஆதாரமாக அமைகின்றது.
'அவர்களுடய இரகசிய பேச்சுக்களில் பெரும்பாலானவற்றில் எந்த நன்மையும இல்லை (எனினும்) தருமத்தை கொண்டும் நன்மையைக்கொண்டும் மனிதர்களடையே சமாதானத்தை ஏற்படுத்துவது கொண்டும் ஏவுகின்ற விடயங்களைத்தவிர , அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை தேடி இதை எவர் செய்கிறாரோ அவருக்கு மகத்தான நற்கூலியை விரைவில் நாம் வழங்குவோம்.'
2. உண்மைத்தன்மை
உரையாடலின் போது நாங்கள் பேசுகின்ற விடயங்கள் முன்வைக்கின்ற ஆதாரங்கள் அனைத்தும் உண்மையாக இருக்க வேண்டும். பொய்யை முற்றாக தவிர்க்க வேண்டும். ஏனெனில் பொய் பேசுதல் என்பது இழிவான ஒரு வெறுக்கத்தக்க பண்பாகும். இதனை தடுத்து ஏராழமான அல்குர்ஆன் வசனங்கள் இடம்பெற்றுள்ளது. அதே போன்று உண்மை பேசுவதை புகழ்ந்தும் உண்மையாளராகவே இருக்கும் படி ஏவியும் பல அல்குர்ஆன் வசனங்கள் இடம்பெற்றுள்ளன.;
'يــأيها الذين آمنوا اتقوا الله و كونوا مع الصـــدقين '
'இறை நம்பிக்கையாளர்களே ! அல்லாஹ்வை அஞ்சுங்கள்;;, இன்னும் உண்மையாளர்களுடன் நீங்கள் (சேர்ந்து) இருங்கள்.' (சூறா தவ்பா: 119)
قال روسول الله صلى الله عليه وسلم ' عليكم بالصدق. فإن الصدق يهدي إلى البر. وإن البر يهدي إلى الجنة وما يزال الرجل يَصْدُقُ .ويَتَحَرَّى الصِّدق حتى يكتب عند الله صديقا. وإياكم و الَكذِبِ فإن الكذب يهدي إلى الفجور وإن الفجور يهدي إلى النار. و مايزال الرجل يكذب و يتحرى الكذب حتى يكتب عند الله كذابا '
மேலும் ரஸுல் ஸல்லல்லாஹ} அலைஹிவஸல்லம் அவர்கள் இவ்வாறு கூறினார்கள் உண்மையையே எப்போதும் பேசுங்கள் , உண்மை நன்மைக்கு வழிகாட்டும், நன்மை சுவர்க்கத்துக்கு வழிகாட்டும். ஒரு மனிதன் தொடர்ந்து உண்மை பேசுகின்ற போது உண்மை பேசுவதிலேயே வேட்கையாக இருக்கும் போது அல்;லாஹ}த்தஆலா விடத்திலே அவன் உண்மையாளன் என்று எழுதப்படும். உங்களுக்கு நான் பொய்யை விட்டும் எச்சரிக்கிறேன். நிச்சயமாக பொய் பாவங்களுக்கு இட்டுச்செல்லும், பாவங்கள் நரகத்துக்கு இட்டுச்செல்லும். ஒரு மனிதன் தொடர்ந்து பொய் சொல்பவனாக இருக்கும் போது அவன் அல்லாஹ்விடத்தில் பொய்யன் என்று பதிவு செய்யப்படுவான் .
மேலும் பொய் சொல்வது என்பது முனாபிக்குகளுடைய பண்பாக ரஸுல் ஸல்லல்லாஹ} அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள். மேலும் ரஸுல் ஸல்லல்லாஹ} அலைஹிவஸல்லம் அவர்கள் கூற்னார்கள் உங்களுக்கு சந்தேகமானவற்றை விட்டு விட்டு சந்தேகமில்லாததை எடுத்துக்கொள்ளுங்கள் நிச்சயமாக உண்மை என்பது அமைதியாகும் பொய் என்பது கவலையும் குழப்பமும் ஆகும்.
எனவே எங்களுடைய உரையாடல்கள் , கலந்துரையாடல்கள் அனைத்து விடயங்களிலும் நாம் உண்மையாளர்களாக இருக்க வேண்டும். உண்மைக்கு புறம்பான விடயங்களைவிட்டு விட வேண்டும்.
3- பேசுகின்ற விடயத்தில்
பூரணமான அறிவுடன் பேச வேண்டும்.
எந்த ஒரு விடயத்தின் ஆதாரமும் நம்பகத்தன்மை பற்றிய தெளிவும் இல்லாது பேசுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும். இந்த விடயங்களில் கவனமில்லாது நடந்து கொள்வோரை அல்லாஹுத்தஆலா எச்சரிக்கிறான்.
குறிப்பாக மார்க்கத்தோடு மற்றும் ஷரிஆவோடு சம்பந்தப்பட்ட விடயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் அல்லாஹ்வுடைய ,அல்லாஹ்வுடன் சம்பந்தப்பட்ட விடயங்களில் தெளிவில்லாமல் அறிவில்லாமல் பேசுவது மிகப் பெரும் பாவம், அநியாயம் என அல்குர்ஆன் கூறுகிறது.
'ومن أظلم ممن افترى على الله كَذِ با '
'அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டி கூறுவதை விட மிகப் பெரிய அநியாயக்காரன் யார்' (சூறா அன்ஆம் :21)
'وَيْلُكُمْ لَا تَفْتَرُوا عَلَى الله كَذِبا فَيُسْحِتَكُمْ بِعَذَاب وَقَدْ خَابَ مَنْ افترى'
'மூஸா , (சூனியக்காரர்களான) அவர்களை நோக்கி , உங்களுக்கென்ன கேடு? அல்லாஹவின்; மீது பொய்யை இட்டுக்கட்டாதீர்கள் , அப்படிச் செய்தால் ஏதேனும் ஒரு வேதனையைக் கொண்டு உங்களை அவன் அழித்து விடுவான்.(பொய்யை) இட்டுக்கட்டுகிறவன் திட்டமாக நற்பாக்கியம் இழந்து விட்டான் எனக் கூறினார்.' (சூறா தாஹா :61 )
மேலும் அல்லாஹ் ஹராமான விடயங்களைப் பற்றி கூறும் போது 'நபியே நீர் கூறுவீராக , என்னுடைய இறைவன் விலக்கி வைத்தவையெல்லாம் மானக்கேடானவற்றைத்தநான் , இன்னும் அவற்றில் வெளிப்படையானவற்றையும் ,மறைமுகமானவற்றையும் ,பாவத்தையும் , நியாயமின்றி (மனிதர்களுக்கு) அநீதி இழைப்பதையும் அல்லாஹ்வுக்கு இணைவைப்பதையும் -அதற்கு எந்த ஆதாரத்தையும் அவன் இறக்கி வைக்காதிருக்க, இன்னும் அல்லாஹ்வின் மீது நீங்கள் அறியாததைக் (கற்பனை செய்து) கூறுவதையும் தான்'. (சூறா அல் அஃராப் :33)
மேலும்,
'ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين . إنما يأمركم بالسوء والفحشاء وأن تقولوا على الله مالا تعلمون '
'மனிதர்களே! பூமியில் உள்ளவற்றிலிருந்து (உணவாக ) அனுமதிக்கப்பட்ட பரிசுத்தமானவற்றையே உண்ணுங்கள், ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள்,நிச்சயமாக அவன் உங்களுக்குப் பகிரங்கமான விரோதியாக இருக்கிறான்'.(சூறா பகறா :168)
'உங்களை அவன் ஏவுவதெல்லாம் தீமையையும் ,மானக்கேடானவற்றையும் , நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்வின் மீது (பொய்யாக) கூறுவதையும் தாம். (சூறா பகறா :169)
இவை அனைத்தும் ஷைத்தான் மனிதர்களின் உள்ளங்களில் கிழப்பி விட்ட வீண் சந்தேகங்கள் அவற்றை கொண்டு வாதாடுதல் ,கதைத்தல், உரையாடுதல் போன்ற விடயங்களில் இருந்து தவிர்ந்து எச்சரிக்கையாக இருக்கும் படி ஏவுகிறது. இவை அனைத்தும் ஷரீஆவுக்கு முரணானவையாகும்.
'إن الشياطين ليُوحُون إِلى أَوْلِيَائِهِمْ لِيُجَادِلُوكُم وَإِنْ أَطَعْتُمُوهُمْ إِنَّكُمْ لَمُشْرِكُوْنَ '
'நிச்சயமாக ஷைத்தான்கள் தங்களுடைய நண்பர்களிடம் உங்களிடம் அவர்கள் தர்க்கம் செய்வதற்காக தூண்டுகிறான். அவர்களுக்கு நீங்கள் கீழ் படிந்தால் நிச்சயமாக நீங்களும் (அவர்களைப்போல்) இணைவைப்பாளர்களாக மாறி விடுவீர்கள்'.(சூறா அன்ஆம்: 121)
4- ஷரீஆவின் அடிப்படைக்கு முரண்படாத விடயங்களை பேசுதல்
உரையாடலின் பண்பாடுகளில் மற்றுமொன்று ஷரீஆவின் அடிப்படைக்கு முரண்படாத விடயங்களை பேசுவதாகும். இந்த விடயம் தொடர்பாக ஏராழமான அல்குர்ஆன் வசனங்களும் ஹதீஸ்களும் இடம்பெற்றிருப்பதை காணலாம்.
' قُلْ أَطِيْعُوا الله والرسولَ فإِنْ تَولّوا فَإِنّ الله لَايُحِبّ الكَافِرِيْنَ'
'நபியே கூறுங்கள் நீங்கள் அல்லாஹ்வுக்கும் தூதருக்கும் கட்டுப்படுங்கள். பின்னர் அவர்கள் புறக்கணித்தால் நிச்சயமாக அல்லாஹ}த்தஆலா நிராகரிப்பாளர்களை நேசிக்கமாட்டான்'.(சூறா ஆலஇம்ரான் :32)
'فـَـلْيـَـحَـذْ الذِّيْنَ يـُخَالِفُونَ عَنْ أَمْرِهِ أَنْ تُصْيْبَهُم فِتْنَةٌ أو يُصِيْبَهُمْ عَذَابٌ أَلِيْمٌ'
'எவர்கள் அவருடைய (நபியின் ) கட்டளைக்கு மாறு செய்கிறார்களோ அவர்கள் (உலகில்) தங்களுக்கு துன்பம் ஏற்படுவதை அல்லது (மறுமையில்) நோவினை தரும் வேதனை தங்களுக்கு ஏற்படுவதை பயந்து கொள்ளட்டும்'.
5-பணிவு.
இஸ்லாம் சொல்லுகின்ற உரையாடல்களுடன் தொடர்பு பட்ட மிக முக்கியமான பண்பாக பணிவு காணப்படுகிறது. ஒருவர் இன்னொருவர் மீதும் ஒரு தரப்பு இன்னொரு தரப்பு மீதோ பெருமை கொண்டு அவமதித்து விடக்கூடாது. பெருமை என்பது ஒரு முஸ்லிமின் பண்பாக இருக்க முடியாது. என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
'لايدخل الجنة من كان في قلبه مثقال ذرة من كبر : قيل إن الرجل يحب أن يكون ثوبه حسنا و نعله حسنة: قال إن الله جميل يحب الجمال الكبر بطر الحق وغمط الناس'
யாருடைய உள்ளத்தில் அணுவளவு பெருமை இருக்கிறதோ அவன் சுவர்க்கம் நுழைய மாட்டான். என ரஸுல் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறிய போது ஒருவர் தனது ஆடையும் பாதணியும் அழகாக இருக்க விரும்புகின்றார். இது பெருமையாகுமா? என ஸஹாபாக்கள் கேட்டனர். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அல்லாஹ் அழகானவன் அவன் அழகையே விரும்புகின்றான். பெருமை என்பது சத்தியத்தை மறுப்பதும் மக்களை அவமதிப்பதும் எனக் கூறினார்கள்.
' إن الله أوحي إليّ أن تواضعوا حتي لا تفخر أحد على أحد ولا يبغي أحد على أحد'
மேலும் ஒரு ஹதிஸிலே நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இவ்வாறு கூறினார்கள். 'நிச்சயமாக அல்லாஹுத்தஆல நீங்கள் பணிவாக நடந்து கொள்ள வேண்டும் எனவும் ஒருவர் இன்னொருவர் மீது பெருமை கொள்ளக் இருக்கிறான்'.
'إِنّ الـذِّيْـنَ يُجَا دِلُونَ فِيْ آيَاتِ الله بِغَيْرِ سُلْطَان آتاهُم إِنْ فِي صُدُورِهِمْ إلّا كِبْرٌ ماَهُمْ بَالِغِيْهِ فَاسْتَعِذْ بِالله إِنّهُ هٌو السّمِيْعُ البَصِيْر'
'நிச்சயமாக எவர் தம்மிடம் (அல்லாஹ்விட மிருந்துள்ள) ஆதாரம் எதுவும் வராமலேயே அல்லாஹ்வுடைய வசனங்களில் தர்க்கம் செய்கிறார்களோ அத்தகையோர் அவர்களுடைய உள்ளங்களில் பெருமையை (அடைய வேண்டும் என்பதைத் தவிற) வேறொன்ரும் இல்லை அதனை அவர்கள் அடைந்து கொள்ள மாட்டார்கள். எனவே அல்லாஹ்வைக்கொண்டு பாதுகாப்பு தேடுவீராக. அவன் யாவற்றையும் கேட்பவன் , பார்ப்பவன்.(சூறா அல் முஃமின் : 56)
எனவே உரையாடும் போது எதிர் தரப்பினரோடு அல்லது தன்னோடு உரையாடுபவரோடு பணிவாகவும் கண்ணியமாகவும் நடந்து கொள்வது என்பது அவருக்கு சென்றடைய வேண்டிய செய்தியை ஒழுங்காக சென்றடைய செய்வதாகவும் , உண்மையை உள்ள படி ஏற்றுக்கொள்வதற்கான மனநிலையை அவருக்கு தோற்றுவிப்பதாகவும் அமையும்.
6- மோசமான வார்த்தை பிரயோகங்களைத் தவிர்த்தல்
ஷரீஆ உரையாடலின் போது ஏவுகின்ற இன்னொரு பண்பாக மற்றவர்களை மோசமான வார்த்தைகளால் எதிர் கொள்வதை தவிர்த்தல் எனும் விடயம் காணப்படுகிறது. மாறாக அல்லாஹ்வின் பால் அழைக்கின்ற போது மற்றும் ஏனையோர்களுடன் உரையாடுகின்ற போது அழகிய முறையிலும் சிறந்த வார்த்தைகளை பயன்படுத்தி மனிதர்களின் உள்ளங்களோடு தொடர்பு படுகின்ற விதத்தில் உரையாட வேண்டும் என இஸ்லாம் ஏவுகின்றது.
'وَقُلْ لِعِبَادِيْ يَقُولُوا الّتِيْ هِي أَحْسَنُ إِنّ الشَّيْطَانَ يَـنْـزِغُ بَيْنَهُمْ إِنّ الشّيْطَانَ كَانَ لِلإِنْسَانِ عَدُوّا مُبَيْنا'
'நபியே என்னுடைய அடியார்களுக்கு எது மிக அழகானதோ அதனையே அவர்கள் நிராகரிப்பாளர்களிடம் பேச வேண்டும் என்று கூறுவீராக, நிச்சயமாக ஷைத்தான் அவர்களுக்கு மத்தியில் குழப்பம் செய்திடுவான். நிச்சயமாக ஷைத்தான் மனிதர்களுக்கு பகிரங்கமான எதிரியாக இருக்கிறான். (சூறா இஸ்ரா : 53)
மேலும் அல்லாஹுத்தஆலா முன்னைய சமூகங்களுக்கு கூறிய உபதேசங்களுள் ஒன்று கீழ் வருமாறு அமைகிறது.
'وَقـُولُـوا للنّاس حُسْنا'
'மனிதர்களுக்கு அழகிய வார்த்தைகளை கூறுங்கள்.(சூறா பகறா :83)
மேலும் சிறந்த வார்த்தைகளை நல்ல பேச்சுக்களை பேசுவது ஸதகாவாகும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியிருக்கிறார்கள். எனவே ஒரு சிறந்த முத்தக்கீ ஏனையோரோடு உரையாடுகின்ற போது உள்ளங்கள் ஏற்றுக்கொள்கின்ற விதமான அழகிய சிறந்த வார்த்தைகளை மாத்திரமே பயன்படுத்த வேண்டும்.
7. அநியாயத்துக்கு துணை போகாதிருத்தல்.
உரையாடல்களின் போது கடைபிடிக்க வேண்டிய அடுத்த அம்சம் எந்த விதத்திலும் அநியாயத்துக்கு துணை போகாது கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருப்பதாகும். மாறாக மக்களுக்கு சத்தியத்தை ணயநேசத்துக்குறியதாக மாற்றுவதாகவும் , அல்லாஹ்வின் ஷரீஅத்தை கடைபிடிப்போராக அவர்களை மாற்றுவதாகவும் உரையாடல்கள் அமைய வேண்டும். அதன் மூலமே அல்லாஹ்வின் நேசத்துக்குறியோராகவும் பெரும் பெரும் கூலிகளைப் பெறுவோராகவும் எம்மால் மாற முடியும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களது காலத்தில் திருட்டில் ஈடுபட்டவர்களுக்கு பரிந்து பேச வந்த அவர்களின் உறவினர்கள் பற்றி அல்லாஹ இவ்வாறு நகூறுகிறான்.
'هـَا أَنْتُمْ هَؤُلَاءِ جَادَلْتُمْ عَنْهُمْ فِيْ الحَيَاةِ الدٌّنْيَاَ فَمَنْ يُجَادِلْ عَنْهُمْ يَوْمَ القِيَامَةِ أَمْ مَنْ يَكُونُ عَلَيْهِمْ وَكِيْلَا'
'(இறை நம்பிக்கையாளர்களே! நீங்கள் அவர்களுக்காகவா உலக வாழ்வில் வாதாடுகிறீர்கள்? மறுமை நாளில் அவர்களுக்காக அல்லாஹ்விடம் வாதாடுபவர்கள் யார்?அல்லாஹ்விடம் எவர் இவர்களுக்கு பொறுப்பேற்பவராய் ஆக முடியும்.(சூறா நிஸா : 109)
எனவே நீதி தவறாமை என்பது எமது உரையாடல்;களில் பேணப்பட வேண்டிய முக்கியமான பண்பாகும். நாம் எந்த விதத்திலும் நீதி தவறாதவர்களாக, எம்முடன் உரையாடலில் ஈடுபடுவோருக்கு அநீதி இழைக்காதோராக இருக்க வேண்டும்.
ஏனெனில் நீதி தவறாமை என்பது எமது உரையாடல்களில் பேணப்படவேண்டிய முக்கியமான பண்பாகும். நாம் எந்த விதத்திலும் நீதி தவறாதவர்களாக எம்முடன் உரையாடலில் ஈடுபடுவோருக்கு அநீதி இழைக்காதோராக இருக்க வேண்டும்.
ஏனெனில் நீதி தவறாமை என்பது ஷரீஆவின் அடிப்படைகளுள் ஒன்றாகும்.
'إن الله يأمركم بالعدل و الإحسان '
'நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு நீதியை கடைபிடிக்குமாறும் நன்மை செய்யுமாறும் கட்டளையிடுகிறான்.'(சூறா நஹ்ல் :90)
'وَأَقْسِطُوا فَإِنّ الله يُحِبّ المُقْسِطِيْن '
'நீதியாக நடந்து கொள்ளுங்கள் நிச்சயமாhக அல்லாஹ் நீதியாக நடந்து கொள்வோரை விரும்புகிறான்'.(சூறா அல் ஹுஜ்ராத் :09)
8. நேசம்
உரையாடலில் ஈடுபடும் இருவர் வேறுபட்ட இரு கருத்துக்களை கொண்டவர்களாயினும் தமக்கு மத்தியில் நேசம் இருக்க வேண்டும்.என ஷரீஆ வேண்டிநிற்கிறது. முஃமின்கள் தங்களுக்கு மத்தியில் நேசமுடையோராக இருக்க வேண்டும் என இஸ்லாம் கட்டளையிடுகிறது.
'لا تدخلوا الجنة حتى تؤمنوا و لا تؤمنوا حتى تحابوا أولا أدلكم على شيء إذا فعلتموه تحاببتم أفشوا السلام '
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார் 'நீங்கள் ஈமான் கொள்ளாதவரை சுவனம் நுழையமாட்டீர்கள். மேலும் ஒருவரை ஒருவர் நேசிக்காத வரை ஈமான் கொள்ள மாட்டீர்கள். உங்களுக்கு மத்தியில் நேசத்தை உண்டாக்கும் ஒரு செயலை சொல்லித்தரட்டுமா? உங்களுக்கு மத்தியில் ஸலாமை பரப்புங்கள்.'
'நிச்சயமாக மறுமை நாளில் அல்லாஹ் எனது கண்ணியத்தின் மீது ஒருவரை ஒருவர் நேசித்தோர் எங்கே? எனது நிழலைத்தவிற வேறு எந்த நிழலும் இல்லாத இந்நாளில் நான் அவர்களுக்கு நிழலளிக்கிறேன். எனக் கூறுவான்.
9.பொறுமை ,சகிப்புத்தன்மை.
உரையாடல்களின் போது கடைபிடிக்க வேண்டிய இன்னொரு மிக முக்கியமான பண்பாக சகிப்புத்தன்மை காணப்படுகிறது. எப்போதுமே பிறருடன் உரையாடும் போது அவர்களது கருத்துகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். அவசரப்பட்டு முந்தியடித்துக்கொண்டு எம்முடன் உரையாடுபவரது சிந்தனை சிதறி பதிலளிக்க முடியாத நிலையை ஏற்படுத்தும் விதமாக பேசுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
சகிப்பத்தன்மை எனும் பண்பை வளர்த்துக்கொள்ளுமாறு தூண்டியும் அப்பண்பை புகழ்ந்தும் ஸுன்னாவால் ஏராழமான செய்திகள் இடம்பெற்றுள்ளன. ஒருமுறை நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அஷஜ் அப்துல் கைஸ் அவர்களைப்பார்த்து
'إن فيك خصلتين يحبهما الله الحلم و الأناة'
'நிச்சயமாக அல்லாஹ் விரும்பும் இரு பண்புகள் உம்மிடம் உள்ளன. ஆவை சகிப்புத்தன்மையும், சுய கௌரவமும் ஆகும்'.எனக் கூறினார்கள்.
10-மென்மை
எமது உரையடல்களின் போது கடைகபிடிக்க வேண்டிய இன்னுமொரு முக்கியமான பண்பு மென்மை.எத்தகைய உள்ளம் படைத்தவர்பளாயினும் மென்மையான முறையிலே உரையாடும் போது எமது கருத்துக்களை அவர்கள் கேட்டு சிந்திப்பதற்கு வாய்ப்பு உண்டு. அல்லாஹுத்தஆலா மூஸா, ஹாறூன் அலைஹிமஸ்ஸலாம் அவர்களை பார்த்து இவ்வாறு கூறுகிறான்.
'إذهبا إلى فرعون إنه تغى وقولا له قولا لينا لعله يذكر أو يخشى'
'நீங்கள் இருவரும் பிர்அவ்னிடம் செல்லுங்கள் நிச்சயமாக அவன் வரம்பு மீறி விட்டான். அவனுக்கு மென்மையான வார்த்தைகளை கூறுங்கள். சில போது அவன் சிந்திக்கவோ அஞ்சி நடக்கவோ கூடும்.'( சூறா தாஹா :43,44)
'إن الرِّفْقَ لَايَكُونُ فِيْ شَيْء إِلّا زَانَهُ وَلَايُنْزَعُ مِنْ شَيْء إَلّا شَانَهُ'
'ரஸுல்ஸல்லல்லாஹுஅலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள் எந்த விடயத்தில்மென்னை இருக்கிறதோ அது அதனை அழகு படுத்தும். எந்த விடயத்தில் மென்மை இல்லாது போகிறதோ அது அதனை அலங்கோலமாக்கும்'
'إن الله رَفِيْقٌ يُحِبُّ الرِّفْقَ وَيُعْطِي مَا لَا يُعْطَى عَلَى العُنْفَ وَ مَا لَا يُعْطَى عَلَى مَا سِوَاهُ'
'ரஸுல் ஸல்;லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார் அல்;லாஹுத்தஆலா மென்மையானவன் அவன் மென்மையையே விரும்புகிறான் வன்மைக்கும் மேலும் எந்த விடயங்களுக்கும் கொடுக்கப்படாத சிறப்புக்கள் மென்மைக்கு கொடுக்கப்பட்டுள்ளன.
11-மன்னிப்பு, தவறுகளை பொருட்படுத்தாமை
உரையாடல்களின் போது பிறரால் ஏற்படும் தவறுகளை மன்னிப்பது மற்றும் பொருட்படுத்தமல் இருப்பது மிக முக்கியமான இஸ்லாமிய பண்பாக காணப்படுகிறது. மேலும் இபபண்பை கடைபிடிக்குமாறு ஷரீஆ ஆர்வமூட்டுகிறது.
' وَ لْـيَعْفُوا وَلْـيَصْفَحُوا أَلا تُحِبّونَ أَنْ يَغْفِرَ الله لَكُم '
' இன்னும் உங்களில் (இறைவனின்) கொடை அருளப்பெற்றவர்கள் (பொருள்) வசதியும் உடையவர்கள் , உறவினர்களுக்கும் ஏழைகட்கும் அல்hஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்கிறவர்களுக்கும் கொடுக்காமல் இருக்க சத்தயம் செய்ய வேண்டாம். (அவர்களை) அவர்கள் மன்னித்து விடட்டும் மேலும் பொருட்படுத்தாமலும் இருக்கட்டும். அல்லாஹ் உங்களுக்கு மன்னிப்பதை நீங்கள் விரும்ப மாட்டீர்களா? மேலும் அல்லாஹ் மிக்க மன்னிக்கிறவன் மிக கிருபையுடையவன்'. (சூறா அந்நூர் :22)
மேலும் இந்த உயரிய பண்பு நபிமார்களுடைய பண்பாக காணப்படுகிறது.
'عن ابن مسعود رضي الله عنه قال ' كأني أنظر النبي صلى الله عليه وسلم – يحكي نبيا –من الأنبياء ضَرَبَهُ قَوْمُهُ فَأَدْمَوْهُ وَ هُوَ يَمْسَحُ الدم عن وجهه ويقول : اللهم اغفر لقومي فإنهم لا يعلمون '
இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் நபிமார்லுள் ஒருவரைப்பற்றி இவ்வாறு கூறினார்கள் ' அவருடைய சமூகம் அவரை அடித்து இரத்தம் சிந்த வைத்தபோது கூட தனது முகத்தில் வடிந்த இரத்தத்தை துடைத்துக்கொண்டே 'யா அல்லாஹ் எனது சமூகத்தை மன்னித்து விடுவாயாக அவர்கள் அறியாதவர்களாக இருக்கிறார்கள்' என்று பிரார்திப்பவர்களாக இருந்தார் எனக் கூறினார்கள்'
மேலும் அல்லாஹுத்தஆலா இப்பிரபஞ்சத்தில் ஒரு விதியை ஏற்படுத்தி வைத்திருக்கிறான். யார் மன்னிப்பு எனும் பண்பை பெற்றிருக்கிறாரோ அல்லாஹுத்தஆலா அவருடைய அந்தஸ்த்தை உயர்த்துகிறான். நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் 'ஸதகா செலவத்தில் குறைவை ஏற்படுத்தாது, ஒரு அடியான் பிறருக்கு மன்னிப்பு வழங்குவதன் மூலம் அவருடைய கண்ணியத்தை அதிகரிக்கச் செய்கிற hன். ஒரு மனிதன் அல்லாஹ்வுக்காக பணிந்து நடக்கின்ற போது அவரை அவன் உயர்த்துகிறான';.
எனவே உரையாடல்கள் ,விவாதங்களில் மன்னிப்பு, தவறுகளை பொருட்படுத்தாமை ஆகிய பண்புகளை கைக்கொள்ளும் போது அதிகமான நன்மைகளே விளையும் என்பதிலும் அல்லாஹ்வின் திருப்தியை பெற்றுத்தரும் என்பதிலும் எந்த சந்தேகமும் இல்லை.
12-தெளிவாக பேசுதல்.
செவிமடுப்பவர்கள் சரியாக புரிந்து கொள்ளும் வகையில் தெளிவாக பேசுவது உரையாடல்களின் கடைபிடிக்க வேண்டிய முக்கிய விடயமாகும். நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் எப்போதுமே செவிமடுப்பவர்கள் புரிந்துகொள்ளும் வகையில் இலகுவாகவும் தெளிவாகவும் பேசுபவர்களாக இருந்தார்கள்.
'يـأيها الذين آمنوا قولوا قولا سيدا'
13-சிறந்த வார்த்தைகளை மாத்திரமே பேசுதல்.
அல்லாஹ் பொருந்திக்கொள்ளாத வார்த்தைகள் பிறரை நோவினை செய்யும் வார்த்தைகள் மோசமான வார்த்தைகள் ஷரீஆவிற்கு முரணான வார்த்தைகள் என்பவற்றை தவிர்த்து சிறந்த வார்த்தைகளை மாத்திரமே பேச வேண்டும். ஏனெனில் எமது ஒவ்வொரு வார்த்தையும் பதிவு செய்யப் படுகின்றது. மேலும் சிறந்த வார்த்தைகளை பேசுவது ஈமானின் அடையாளமாக கொள்ளப்படுகின்றது. அல்லாஹுத்தஆலா தனது திருமறையிலே கீழ் வருமாறு கூறுகிறான.;
'مَايَلْـفِـظُ مِنْ قَـْول إَلّا لَدَيْهِ رَقِـيْبٌ عَـتِـيْـدَ'
'எழுதுவதற்கு தயராக கண்காணிப்பாளர் இருக்கின்ற ஒருவர் அவனிடத்தில் இருந்தே தவிற அவன் எந்தச் சொல்லையும் மொழிவதில்லை'. (சூறா காப் :18)
'وّإِنّ عَلَيْكُمْ لَحَافِظِيْنَ . كِرَاما كَاتِبِيْنَ . يَعْلَمُونَ مَا تَـفْعَـلُـوْنَ '
'நிச்சயமாக உங்கள் மீது பாதுகாவலர்கள் இருக்கின்றனர், அவர்கள் (வனவர்களில் உள்ள) கண்ணியமான எழுத்தாளர்கள், நீங்கள் செய்கின்றவற்றை அவர்கள் அறிகிறார்கள்'.(சூறா இன்பிதார்: 10-12)
மேலும் நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இவ்வாறு கூறினார்கள்
'من كان يؤمن بالله واليوم الأخر فلا يؤذي جاره ومن كان يؤمن بالله واليوم الآخر فليكرم ضيفه وكان يؤمن بالله واليوم الأخر فليقل خيرا أو ليصمت'
'யார் ;அல்லஹ்வையும் மறுமை நாளையும் ஈமான் கொள்கிறாரோ அவர் தனது அயலவரை நோவினை செய்யாதிருக்கட்டும். மேலும் யார் ;அல்லஹ்வையும் மறுமை நாளையும் ஈமான் கொள்கிறாரோ அவர் தனது விருந்தாளியை கண்ணியப்படுத்தட்டும். மேலும் யார் ;அல்லஹ்வையும் மறுமை நாளையும் ஈமான் கொள்கிறாரோ அவர் பேசினால் நல்லதை பேசட்டும் அல்லது மௌனமாக இருக்கட்டும்'.
'من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة '
நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள் 'யார் தனது இருதாடைக்கு மத்தியில் இருப்பதையும், இரு கால்களுக்கு மத்தியில் இருப்பதையும் பாதுகாப்பதாக உத்தரவாதம் அளிக்கிறாரோ அவருக்கு சுவனத்தை நான் உத்தரவாதமளிக்கிறேன்'.
14-முன்வைக்கும் விடயங்களை உறுதிப்படுத்திக் கொள்ளல்
உரையாடலின் இன்னொரு முக்கிய பண்பாக முன்வைக்கும் விடயங்களின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்திக் கொள்ளுதல் எனும் விடயம் காணப்படுகிறது.
'أن النبي صلى الله عليه وسلم قال 'كَفَى بِالمَرْءِ كَذِبا اَنْ يُحْدِثَ بِكُلّ مَا سَمِعَ'
நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள் 'தான் செவிமடுக்கின்ற எல்ல விடயங்களையும் பேசுவதே ஒரு மனிதன் பொய்யன் என்பதற்கான சான்றாகும்'.
அல்லாஹுத்தஆலா தனது திருமறையிலே கீழ் வருமாறு கூறுகிறான்
'يـأيها الذين آمنوا إن جائكم فاسق بنبإ فتبينوا أن تصيبوا قوما بجهالة فتصبحوا على ما فعلتم نادمين '
. 'இறைநம்பிக்கையாளர்களே ஒரு தீயவன் உங்களிடத்தில் ஏதேனும் ஒரு செய்தியை கொண்டு வந்தால் , அதனை நன்கு விசாரித்து தெளிவு படுத்திக்கொள்ளுங்கள்....'.(சூறா ஹுஜுராத்: 6)
15-தப்பெண்ணம் கொள்ளாதிருத்தல்.
எந்த ஒரு உரையாடலின் தன்னுடன் உரையாடுபவர் பற்றி நல்லெண்ணம் வைப்பதே இஸ்லாமிய பண்பாகாகும். வெளிப்படையான விடயங்களையே கவனத்தில் கொள்ள வேண்டும். அல்லாஹுத்தஆலா திருமறையிலே இவ்வாறு கூறுகின்றான்
'يـأ يها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن أن بعض الظن إثم '
'ஈமான் கொண்டவர்களே அதிகமான எண்ணங்களை தவிர்ந்து கொள்ளுங்கள் நிச்சயமாக சில எண்ணங்கள் பாவமாகும்'(சூறா ஹுஜ்ராத்: 12)
'إياكم والظنَّ فأن الظن أكذب الحديث و تحسسوا و لا تجسسوا و لا تنافسوا ولا تحاسدوا و تباغضوا و لا تدابروا وكنوا عباد الله إخوانا'
நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள் உங்களுக்கு அதிகமான எண்ணங்களை இட்டும் எச்சரிக்கிறேன். நிச்சயமாக எண்ணங்கள்(ஊகங்கள்) மிகவுமே பொய்யான பேச்சாகும். மேலும் எந்த ஒரு விடயத்தையும் துருவித்துருவி ஆராய வேண்டாம். மேலும் போட்டி போட வேண்டாம். மேலும் பொறாமை கொள்ள வேண்டாம். மேலும் வெறுப்பு கொள்ள வேண்டாம். மேலும் சண்டை இட்டுக்கொள்ள வேண்டாம். மேலும் அல்லாஹ்வின் அடியார்களாகவும் சகோதரர்களாகவும் இருங்கள்.
16- பேச்சில் வரையரை மீறாதிபருத்தல்.
உரையாடல்களின் போது கட்டுப்பாடு மிகவும் அவசியமானதாகும். ஏனெனில் பிரயோகிக்கும் வார்த்தைகளின் மூலம் பிறரது மனம் புண்படலாகாது. மேலும் பொறுமை இழந்து ஏசவோ தூற்றவோ கூடாது. நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள் ஒரு முஸ்லிமை ஏசுவது பாவமாகும். கொலை செய்வது இறை நிரகரிப்பாகும்.
பிறரை பரிகாசம் செய்வதையும் தவிர்ந்து கொள்ள வேண்டும். அல்லாஹுத்தஆலா தனது திருமறையிலே
'يـأ يها الذين آمنوا لا يَسْخَرْ قَوْمٌ مِنْ قَوْم عَسَى أَنْ يَكُونُوا خَيْرا مِنْهُم '
'ஈமான் கொண்டவர்களே உங்களில் எந்த ஒரு கூட்டமும் மற்றைய கூட்டத்தை பரிகாசம் செய்ய வேண்டாம்.(பரிகாசம் செய்யும்) இவர்களை விட (பரிகாசம் செய்யப்படும்) அவர்கள் சிறந்தவர்களாக இருக்கலாம்'.(சூறா ஹுஜ்ராத்:11)
மேலும் பிறரை இழிவு படுத்தும் விதமான சைக்கினைகளையும் தவிர்ந்து கொள்ள வேண்டும். அல்லாஹுத்தஆலா கீழ் வருமாறு கூறுகிறான்.
'ولَا تَـلْـمِـزُوا أَنْـفُـسَـكُـمْ '
'மோசமான சைக்கினைகள் மூலமும் மோசமான பெயர்களைக் கொண்டும் ஒருவரை ஒருவர் அழைக்க வேண்டாம்.'.(சூறா ஹுஜ்ராத்:11)
17-தற்புகழ்ச்சியை தவிர்த்தல்.
எந்த ஒரு உரையாடலின் போதும் தற்புகழ்ச்சியையோ 'நான்' என்ற மேலெண்ணத்தையும் தவிர்ந்து கொள்ள வேண்டும். அல்லாஹுத்தஆலா தனது திருமறையிலே கூறுகின்றான்
'فَـلَا تُزَكّوا أنْـفُـسَكُـمْ هُو أَعْـلَـم ُبـِمَـنْ اتّـقَـى'
'உங்களை நீங்களே பரிசுத்தவான்கள் என எண்ணிக்கொள்ள வேண்டாம். பயபக்தி எடையோர் யார் எண்பதை அவனே நன்கு அறிந்தவன்'.(சூறா அந்நஜ்ம் 32)
18-முககமலர்ச்சி
ஊரையாடல்; போதும் பிறருடன் தொடர்பு கொள்ளும் போதும் இஸ்லாமிய ஷரீஆ வலியுருத்தும் இன்னுமொரு முக்கிய பண்பாக முகமலர்ச்சி காணப்படுகிறது.
'تـبـسـمـك في وجه أخيك صدقة '
நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள் 'உனது சகோதரனின் முகத்தை பார்த்து புன்னகைப்பதும் தர்மமாகும்'.
'لاتحـقـرن من المعـروف شيئا ولو أن تلقى أخاك بوجه طلق'
மேலும் நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள் 'எந்த ஒரு நன்மையான விடயத்தையும் இழிவாக கருத வேண்டாம். உனது சகோதரனை மலர்ந்த முகத்துடன் நோக்குவதாக இருந்hதாலும் சரியே'
19-அழகிய முறையில் செவமெடுத்தல்.
உரையாடல்களின் போது கடைபிடிக்க வேண்டிய மிக முக்கிய பண்பாக செவிமெடுத்தல் என்ற பண்பு காணப்படுகிறது. இதற்கு பல உதாரணங்களை கண்டுகொள்ளலாம். உத்பா நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் வந்து இஸ்லாம் பற்றி தான் கொண்டுள்ள எண்ணங்களை முன்வைத்து உரையாடிய போது மிகவுமே அமைதியாக நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் உத்பாவுக்கு செவிமெடுத்து விட்டு பின்னர் அபூ வலிதே நீங்கள் கூற வேண்டிய விடயங்களை கூறி முடித்து விட்டீர்களா எனக் கேட்டார் அவர் ஆம் என்று கூறியதும் சூறதுல் புஸ்ஸிலத்தின் வசனங்களை ஓதிக்காட்டினார். இந்த நிகழ்வு உத்பாவின் நிலைப்பாட்டில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது.
No comments:
Post a Comment